Search This Blog

Thursday 23 November 2023

NMMS மாதிரி தேர்வு நடத்துவதற்கு தேவையான அறிவியல், சமூக அறிவியல் அனைத்து பாடங்களின் மாதிரி வினாத்தாள் அப்படியே பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம்



👉இந்த வினாக்கள் அனைத்தும் NMMS மோகன் அவர்களின் குழுவினரால் உருவாக்கப்பட்டு மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது 


👉ஒவ்வொரு வினாத்தாளை 50-60 வினாத்தாள்களை கொண்டது 


👉 அறிவியல், சமூக அறிவியல் வினாத்தாள்கள் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளது 


👉 ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அப்படியே பிரிண்ட் எடுத்து தேர்வு நடத்தலாம் 


👉 ஒவ்வொரு வினாத்தாளை குறிப்பிட்ட சில பாடங்களை கொண்டது. அந்த பாடங்களின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளது 


👉 வினாத்தாள் எந்த பாடத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என பாடத்தின் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது 


👉 மொத்தம் 19 வகையான தேர்வு வினாத்தாள் உள்ளது. இந்த 19 வினாத்தாள்கள்கள் அறிவியல் பாடத்திலும், சமூக அறிவியல் பாடத்திலும் முழுமையாக COVER செய்யப்பட்டுள்ளது 



மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇


CLICK HERE TO JOIN



தேர்வு - 1

அறிவியல் 

பாடம்: 

அளவீட்டில் 

(7 மற்றும் 8 ஆம் வகுப்பு)

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






தேர்வு - 1

சமூக அறிவியல் 

பாடம்: 

8 ஆம் வகுப்பு 

வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை 

7 ஆம் வகுப்பு 

வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






தேர்வு 2

அறிவியல் 

பாடம் 

நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் 

(7 மற்றும் 8 ஆம் வகுப்பு)

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






தேர்வு 2

சமூக அறிவியல் 

பாடம் 

8 ஆம் வகுப்பு 

பாறை மற்றும் மண் 

7 ஆம் வகுப்பு 

சமத்துவம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






தேர்வு 3

அறிவியல் 

பாடம் 

8 ஆம் வகுப்பு 

நுண்ணுயிரிகள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்







தேர்வு 3

சமூக அறிவியல் 

பாடம் 

8 ஆம் வகுப்பு 

குடிமக்களும் குடியுரிமையும் 

7 ஆம் வகுப்பு 

நிலத்தோற்றங்கள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்







தேர்வு 4

அறிவியல் 

பாடம் 

விசையும், இயக்கமும், அழுத்தமும் 

(7 & 8 ஆம் வகுப்பு)

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்








தேர்வு 4

சமூக அறிவியல் 

பாடம் 

8 ஆம் வகுப்பு 

வானிலை மற்றும் காலநிலை 

7 ஆம் வகுப்பு 

தென்னிந்திய புதிய அரசுகள் பிற்கால சோழர்கள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்








தேர்வு:5

அறிவியல் 

பாடம் 

நம்மை சுற்றி நிகழும் மாற்றங்கள் 

(8 ஆம் வகுப்பு)

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்








தேர்வு 5

சமூக அறிவியல் 

பாடம் 

பணம் சேமிப்பு மற்றும் முதலீடு 

(8 ஆம்  வகுப்பு)

அரசியல் கட்சிகள் 

(7 ஆம் வகுப்பு)

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்








தேர்வு 6

பாடம் அறிவியல் 

தாவர உலகம் 

(8 ஆம் வகுப்பு)

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்








தேர்வு 6

சமூக அறிவியல் 

பாடம் 

கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 

(8 ஆம் வகுப்பு)

உற்பத்தி 

(7 ஆம் வகுப்பு)

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்








7- வது மாதிரி வினாத்தாள் 

அறிவியல் 

(7,8 வகுப்பு-இயற்பியல்)

ஒளியியல் 


👇👇


பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்








7- வது மாதிரி வினாத்தாள் 

சமூக அறிவியல் 

டெல்லி சுல்தானியம் 

நீரியல் சுழற்சி 


👇👇


பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்









8- வது மாதிரி வினாத்தாள் 

அறிவியல் 

8-காற்று 

7-தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 

👇👇


பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்









8- வது மாதிரி வினாத்தாள் 

சமூக அறிவியல் 

8-மக்களின் புரட்சி 

7-மக்களத்தொகை மற்றும் குடியிருப்புகள் 

👇👇


பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்









9- வது மாதிரி வினாத்தாள் 

அறிவியல் 

8-உயிரினங்களின் ஒருங்கமைவு 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்









9- வது மாதிரி வினாத்தாள் 

சமூக அறிவியல் 

8-இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் 

7-இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்









9- வது மாதிரி வினாத்தாள் 

அறிவியல் 

8-உயிரினங்களின் ஒருங்கமைவு 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்









10- வது மாதிரி வினாத்தாள் 

அறிவியல் 

8-வெப்பம் 

7-வெப்பநிலை  

👇👇


பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்









10- வது மாதிரி வினாத்தாள் 

சமூக அறிவியல் 

8-சமய சார்பின்மையை புரிந்துகொள்ளுதல் 

7-புவியின் உள்ளமைப்பு  

👇👇


பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்









11- வது மாதிரி வினாத்தாள் 

அறிவியல் 

7- உடல் நலமும் சுகாதாரமும் 

7-கணினி காட்சித் தொடர்பியல் 

👇👇


பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்










11- வது மாதிரி வினாத்தாள் 

சமூக அறிவியல் 

8- ஐரோப்பியர்களின் வருகை 

8-மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது 

7-மாநில அரசு 

👇👇


பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்








12- வது மாதிரி வினாத்தாள் 

அறிவியல் 

8-மின்னியல் 

7-மின்னோட்டவியல் 

7-செல் உயிரியல் 

👇👇


பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்








12- வது மாதிரி வினாத்தாள் 

சமூக அறிவியல் 

8-இந்தியாவில் கல்வி வளர்ச்சி 

7-விஜய நகர பாமினி அரசுகள் 

👇👇


பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்









13- வது மாதிரி வினாத்தாள் 

அறிவியல் 

8-அணு அமைப்பு 

7-அணு அமைப்பு 

7-வகைப்பாட்டியலின் அடிப்படை 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்







13- வது மாதிரி வினாத்தாள் 

சமூக அறிவியல் 

8-இடர்கள் 

7-வளங்கள் 

7;இயற்கை பேரிடர் மேலாண்மை 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்









14- வது மாதிரி வினாத்தாள் 

அறிவியல் 

8-விலங்குகளின் இயக்கம் 

7-கணினி வரைகலை 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்







14- வது மாதிரி வினாத்தாள் 

சமூக அறிவியல் 

8-மனித உரிமைகளும், ஐக்கிய நாடுகள் சபைகளும் 

7-பெண்கள் மேம்பாடு 

7-புதிய சமயக் கருத்துக்களும், இயக்கங்களும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்







15- வது மாதிரி வினாத்தாள் 

அறிவியல் 

8-ஒலியியல் 

7-அண்டம் மற்றும் விண்வெளி 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்







15- வது மாதிரி வினாத்தாள் 

சமூக அறிவியல் 

8-இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி 

7-முகலாய பேரரசு 

7-தமிழ்நாட்டில் கலையும், கட்டடக்கலையும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்








16- வது மாதிரி வினாத்தாள் 

அறிவியல் 

8- நீர் 

7- பலபடி வேதியியல் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்









16- வது மாதிரி வினாத்தாள் 

சமூக அறிவியல் 

8-தொழிலகங்கள் 

7-சுற்றலா 

7-கண்டங்களை ஆராய்வோம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்









17- வது மாதிரி வினாத்தாள் 

அறிவியல் 

வளரிளம் பருவம் அடைதல் 

அன்றாட வாழ்வில் வேதியியல் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்








17- வது மாதிரி வினாத்தாள் 

சமூக அறிவியல் 

ஆங்கிலேயராட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 

மராத்தியர்கள் மற்றும் பேஷுவாக்களின் எழுச்சி 

தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆஸீவகத் தத்துவங்கள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்







18- வது மாதிரி வினாத்தாள் 

அறிவியல் 

அமிலங்கள் மற்றும் காரங்கள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்








18- வது மாதிரி வினாத்தாள் 

சமூக அறிவியல் 

சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் 

ஊடகமும் ஜனநாயகமும் 

சாலை பாதுகாப்பு 

சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





19- வது மாதிரி வினாத்தாள் 

அறிவியல் 

 அன்றாட வாழ்வில் விலங்குகள் 

காட்சி தொடர்பியல் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





19- வது மாதிரி வினாத்தாள் 

சமூக அறிவியல் 

 8- கண்டங்களை ஆராய்வோம் 

(ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா)

7-வரியும் அதன் முக்கியத்துவமும் 

7-நில வரைபடத்தை கற்றறிதல் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






NEW

NMMS EXAM
சமூக அறிவியல்
பாடவாரியான 
தேர்வு நடத்துவதற்கு
தேவையான வினாத்தாள்
👇👇


கலக்கிய கிராமிய நடனம் மாநில அளவில் முதல் இடம் காணத்தவறாதீர்கள் மாணவிகளின் நடன சாதனையை



தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் கலைத்திருவிழா மாணவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.



மாணவர்களின் உள்ளத்திலும், எண்ணத்திலும் ஒளிந்திருந்த ஆற்றல் பெருக்கெடுத்து மக்கள் மத்தியில் நிரூபிக்கப்பட்டு வருகிறது

ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு திறமையை தன்னகத்தே கொண்டவன். இது நாள் வரை அவர்கள் திறமையை வெளிக்காட்டுவதற்கு சரியான தளமோ மேடையோ கிடைக்கவில்லை.

இப்போது நமது தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அதற்கான முன்னெடுப்பை கையில் எடுத்து திறம்பட செயல்படுத்தி வருகிறது

ஒவ்வொரு மாணவனும், மாணவியும் இதுநாள் வெளிக்காட்ட தவித்து வந்த திறமைகளை இப்போது காண்பித்து வருகிறார்கள்

ஒவ்வொரு மாணவனின் திறமையை வெளிக்கொண்டு வர அவர்களுக்கு ஆசிரியர்கள் துணையாக உள்ளனர்

அத்தகைய அற்புதமான தங்கள் திறமைகளை வெளிக்காட்டி "கிராமிய நடனம்" பிரிவில் மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளனர்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட "சின்னசூரியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள்"



இந்த நடனத்தில் மாணவிகள் செய்யும் ஒவ்வொரு சாதனையும் உண்மையில் கண்கொள்ளா காட்சி



கரகம் தூக்குவது,
தலைகீழாக கிரகத்துடன் ஏணிப்படியில் ஏறுவது
என மாணவிகளின் சாதனைகளை பாராட்ட வார்த்தைகளே இல்லை



அவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர், ஆசிரியர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

மாணவிகளுக்கும், இருபால் ஆசிரிய பெருமக்களுக்கும், துணையாக நின்ற அந்த ஊரின் பெரியவர்களுக்கும் வாழ்த்துகள்



மாணவிகளின் கண்கொள்ளா நடனத்தை காண கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்

👇👇

CLICK HERE



JOIN OUR WHAT APP GROUP

👇👇

CLICK HERE TO JOIN


JOIN OUR TELEGRAM GROUP
TAMILNADU TEACHERS

👇👇

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் குறித்தான முழுமையான தகவல்





தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த வாரங்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிக அளவிலான கனமழை பெய்தது.


கடலூர் மாவட்டத்தில் பல நாட்கள் விடிய விடிய கனமழை பெய்து பொதுமக்கள், மாணவர்கள் அன்றாட பணிகளை செய்வதில் மிகப்பெரும் தடங்கல் நிலவியது.


இந்நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் இரண்டு பகுதிகளும் அதிகமான மழை பொலிவை சந்தித்து வருகிறது 


தென்மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது 


22.11.2023 நேற்று இரவு முதல் தென் மாவட்டங்களில் மழை இரவு முழுவதும் பெய்து காலையிலும் மழை தொடர்கிறது 


இதன் காரணமாகவும், கனமழை எச்சரிக்கை இருப்பதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 


தென்காசி மாவட்டம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது   

உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி முதன்மை கல்வி அலுவலரால் பின்னர் அறிவிக்கப்படும். - மாவட்ட ஆட்சியர், தென்காசி


நெல்லை மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 


கன்னியாகுமரி மாவட்டப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெறுவதாக இருந்த CLAT தேர்வுக்கான பயிற்சியானது மழையின் காரணமாக வழங்கப்பட்டுள்ள விடுமுறையால் நாளைய தினத்திற்கு (24.11.23) ஒத்திவைக்கப்படுகிறது. இன்று நடைபெறுவதாக இருந்த அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெறாது .இன்றைய போட்டிகள் அனைத்தும் நாளைய தினம்  நடைபெறும் போட்டிகளோடு (24.11.2023 அன்று) நடைபெறும் எனவும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவித்துள்ளார் 


தூத்துக்குடி மாவட்டப்பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 


புதுக்கோட்டை மாவட்டப்பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 


கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 


கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 


நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 


கோவை காரைமடை ஒன்றிய பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 




கீழே உள்ள மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர் 

சென்னை, 

திருவள்ளூர், 

காஞ்சிபுரம் 



JOIN OUR WHAT APP GROUP

👇👇

CLICK HERE TO JOIN


JOIN OUR TELEGRAM GROUP
TAMILNADU TEACHERS

👇👇

Wednesday 22 November 2023

"கனியன் கூத்து" போட்டியில் மாநில அளவில் முதல் இடம் பெற்று சாதனை அசத்திய தென்காசி மாவட்டம் நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்




 


JOIN OUR WHAT APP GROUP

👇👇

CLICK HERE TO JOIN


JOIN OUR TELEGRAM GROUP
TAMILNADU TEACHERS

👇👇




தென்காசி மாவட்டத்தில் நெட்டூர் அரசு பள்ளி, மாணவர்கள் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட கலைத்திருவிழா போட்டியில் தமிழக பாரம்பரிய கலையான "கனியன் கூத்து" போட்டியில் கலந்து கொண்டனர் 



தமிழகத்தின் பாரம்பரிய கலை இது.



ஆனால் தற்போது இந்த கலையானது அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது 



பழைய காலங்களில் கிராமப்புறக் கோவில் திருவிழாக்களில் இந்த நடனம் பெருவாரியான மக்களால் மிகுந்த பயபக்தியுடன் கண்டுகளிக்கப்படும் 



தற்போது கிராமங்களில் கூட இந்த கூத்தானது இடம் பெறுவது மிகவும் குறைந்து விட்டது 



இக்கால தலைமுறை மாணவர்கள் பலருக்கு இந்த கூத்து பற்றி தெரியாது 



ஆனால் நெட்டூர் அரசு பள்ளி மாணவர்கள் மீண்டும் இந்த நடனத்தை நம் கண் முன் அரங்கேற்றியுள்ளனர் 



இப்போட்டியில் மாணவர்கள் கடவுள் வேடம் இட்டும், பெண்கள் போல் வேடம் இட்டும் நடனம் ஆடினார்கள்.



மாணவர்களே  இசை அமைத்து பாடலையும் பாடினார்கள் 



மாணவர்கள் குழுவாக இந்த கனியன் கூத்து நிகழ்வை நடத்தினர் 



இது முதலில் வட்டாரம் அளவில் முதலிடம் பெற்றது. பின்பு தென்காசி மாவட்ட அளவிலும் முதலிடம் பெற்றது.



தற்போது மாநில அளவில் நடந்த போட்டியிலும் முதலிடம் பெற்று தென்காசி மாவட்டம் நெட்டூர் அரசுப் பள்ளிக்கு பெருமை தேடித்தந்துள்ளனர்.



போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் அனைவரும் பாராட்டினார்கள் 


மாவட்ட அளவில் கனியன் கூத்து நடனம் 

👇👇

CLICK HERE TO WATCH



மாநில அளவில் கனியன் கூத்து நடனம் 

👇👇

CLICK HERE TO WATCH



JOIN OUR WHAT APP GROUP

👇👇

CLICK HERE TO JOIN



JOIN OUR TELEGRAM GROUP
TAMILNADU TEACHERS

👇👇

TNSED Schools App New version 0.0.92 direct link to update


TNSED Schools App New version 0.0.92 direct link to update


Version: 0.0.92


Updated on 21.11.23


what's New


Ennum Ezhuthum Formative Assessment Added


Bug Fixes & Performance Improvements


Click the link and get latest version

👇

CLICK HERE TO UPDATE



JOIN OUR WHAT APP GROUP

👇👇

CLICK HERE TO JOIN



JOIN OUR TELEGRAM GROUP
TAMILNADU TEACHERS

👇👇



Tuesday 21 November 2023

இன்று நவம்பர் 21 - உலகத் தொலைக்காட்சி நாள் World Television Day தொலைக்காட்சி பெட்டி கடந்துவந்த பாதை முழுவிபரம்




நன்றி:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்


நவம்பர் 21 - உலகத் தொலைக்காட்சி நாள் *

*World Television Day*

                                                                                                                          1936-ல் கருப்பு வெள்ளை ஒளிபரப்பு



தொலைக்காட்சி புரட்சிக்கு 1925-ல் வித்திட்டவர் இங்கிலாந்து நாட்டின் ஜான்லோகி பெயர்டு என்ற அறிவியலாளர். 



27.01.1926-ல் தான் கண்டறிந்த கருவியைபுகழ்பெற்ற அறிவியல் அறிஞர்கள் மத்தியில் இயக்கிக் காட்டினார்.

                                                                                                                                                                                        அவரைத் தொடர்ந்து அறிஞர்கள் பலரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டதன் விளைவாக, 1936-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் தொலைக்காட்சியில் கருப்பு வெள்ளை ஒளிபரப்பு நடைமுறைக்கு வந்தது.

                                                                                                                                                                                     'Television' என்பதற்கு தமிழில் பட ரேடியோ, வானொளி என்று பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், இச்சொல் தொலைவில் உள்ளதை காண்பது என்ற பொருள் தந்ததால், தொலைக்காட்சி என்பதே நிலைபெற்றது.

                                                                                                                                                                                        நவீன தொலைக்காட்சி பெட்டிகள்

உலக நிகழ்வுகளை வீடுகளுக்குள் கொண்டு வந்து காட்சிப்படுத்திய, தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பானது ஆன்டெனாவில் தொடங்கி,  தற்போது டிஷ், கேபிள், இணையம் என பல்வகை ஊடகங்களில் நிலைபெற்று விட்டது.

                                                                                                                                                                                அறிவியல், தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப நெகிழ்வுதன்மையுடன் காணப்படுவதால், ஒளிபரப்பு பல்வகை ஊடகங்களுக்குள் ஊடுருவி நிலை நிறுத்திக்கொண்டுள்ளது. 



சிறிய பெட்டி வடிவில் கருப்பு வெள்ளை திரையுடன் தயாரிக்கப்பட்டு, பின்னர் பெரிய அளவிலும், வண்ணத்திரையுடனும் தயாரிக்கப்பட்டுது.



20 ஆண்டுகளுக்கு மேலாக காட்சியளித்த தொலைக்காட்சிகள், 2010-க்கு பிறகு எல்இடி,எல்சிடி என அதிநவீன தொழில்நுட்பத்தில் சிறியது முதல் பெரிய திரைகளுடன் தயாரிக்கப்பட்டு, வீடுகளை அலங்கரித்து வருகின்றன.

                                                                                                                                                                                  பிரம்மாண்ட திரைகள்

திரையரங்கத்தின் திரையைப் போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும், பிரம்மாண்ட திரை கொண்ட தொலைக்காட்சிகளும் தற்போது தயாரிக்கப்படுகின்றன. 



அதேநேரத்தில் ஆரம்ப காலத்தில் பயன்படுத்தி வந்த பெட்டியைப் போன்ற தொலைக்காட்சி பெட்டிகளில் பெரும்பாலும் விடைபெற்று விட்டன.

                                                                                                                                                                                                24 X 7 செய்திச் சேனல்கள்

தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் வருகைக்குப் பிறகான காலக்கட்டத்தில் ஏற்பட்ட போட்டியானது நிகழ்ச்சிகளையும், செய்திகளையும் மக்களுக்கு அதிகளவில் கொண்டு சேர்க்கத் தொடங்கின. 




நாள்தோறும் சில மணி நேரங்கள் மட்டுமே அளிக்கப்பட்ட ஒளிபரப்பானது, 



பின்னாளில் 24 X 7 என்ற 24 மணி நேரமாக மாறி நிற்கிறது. 24 மணி நேர செய்தி தொலைக்காட்சிகள் பெருகி விட்டன.

                                                                                                                                                                            இணையத்தில் தொலைக்காட்சி

நவீன தகவல் தொடர்புச் சாதனங்களில் இணையம் இன்றியமையாததாகி விட்டது. அனைத்து தகவல் தொடர்புச் சாதனங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது இணையம். 



பொதுமக்கள் தொலைக்காட்சி பெட்டிகளில் பல்வேறு சேனல்களைப் பார்த்து வரும் வேளையில், இணையம் என்ற ஊடகத்தின் வழியாகவும் பல்வேறு சேனல்களை காணும் வாய்ப்பை இன்று நாம் பெற்றுள்ளோம்.

                                                                                                                                                                                      இணைய பயன்பாட்டை ஏற்றுக்கொள்ளும் கணினி, ஆண்ட்ராய்டு செல்போன், டேப்லாய்டு போன்ற மின்னணு சாதனங்கள் மூலமாக தொலைக்காட்சிகளைக் கண்டுகளிக்க முடியும். 



அதேநேரத்தில் வீடியோ பதிவுகளை, பல டாட்.காம் மூலமாக பதிவேற்றம் செய்து, ‘வெப். டி.வி.’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் இணையத்தில் உலவவிடப்படுகின்றன. 




இதை தொலைக்காட்சியாக அங்கீகரிக்கலாமா என்பதை காட்சித் தொடர்பியல், தகவல் தொடர்பியல் ஆய்வாளர்கள்தான் நிரூபிக்க வேண்டும்.

                                                                                                                                                                                      தொலைக்காட்சி வரலாற்று தகவல்கள்

1. 1976 ஜனவரி 1 - வானொலியில் இருந்து தொலைக்காட்சி பிரிந்து, தனித் தகவல் தொடர்பு சாதனமானது.



2. 1977 ஆகஸ்ட் 17 - தொலைக்காட்சிக்கு தன்னாட்சி அந்தஸ்து கொடுப்பதற்கான வாய்ப்புகளை ஆராய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 1978-ல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.



3. 1981 நவம்பர் 17 - சோதனை முறையிலான வண்ண ஒளிபரப்பு தொடங்கி, இன்சாட்-1 ஏ செயற்கைக்கோள் வண்ண ஒளிபரப்பைத் தொடங்கியது. அதே ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி இச்செயற்கைக்கோள் செயலிழந்தது.



4. 1983 மார்ச் - தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தரத்தை உயர்த்துவதற்கு குழு ஏற்படுத்தப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் மாதம் இன்சாட் 1-பி செயற்கைக்கோள் மூலம் நிகழ்ச்சிகள் அதிக நேரம் ஒளிபரப்பப்பட்டன.



5. 1984 ஏப்ரல் 2 - பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதியுதவியுடன் தினமும் முற்பகல் 1 மணி நேரமும், பிற்பகல் 1 மணி நேரமும் கல்வி ஒளிபரப்பு தொடங்கியது.



6. 1988 ஜூலை 6 - சென்னை தொலைக்காட்சியின் 2-வது அலைவரிசை அறிமுகப்படுத்தப்பட்டது.



7. 1989 பிப்ரவரி 6 - தூர்தர்ஷன் மத்திய நிகழ்ச்சி தயாரிப்பு மையம் டெல்லியில் உள்ள ஆசிய விளையாட்டு அரங்கில் நிறுவப்பட்டது.



8. 1990 செப்டம்பர் 6 - தொலைக்காட்சிக்கும் வானொலிக்கும் தன்னாட்சி அந்தஸ்து வழங்க வகை செய்யும் ‘பிரச்சார் பாரதி’ மசோதா மக்களவையில் நிறைவேறியது.



9.1996-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி நடைபெற்ற அனைத்துலகத் தொலைக்காட்சிக் கருத்தரங்கின் பரிந்துரையின்படி, ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21-ம் தேதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது.

                                                                                                                                                                                              நாடு முழுவதும் ஒளிபரப்பான நிகழ்ச்சி

இந்திய அரசு திட்டமிட்டவாறு தொலைக்காட்சியில் சிறுவர் கல்வி, உடல் நலம், தாய்சேய் நலம் தொடர்பான நிகழ்ச்சிகள் 'சைட்' செயற்கைக்கோள் மூலம் ஒளிபரப்பப்பட்டன. 



காலை 10 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 6.30 மணி முதல் 8.50 மணி வரையிலும் ஒளிபரப்பு நேரம் அதிகரிக்கப்பட்டது. 



இவற்றில் 40 நிமிடம் கன்னடம் அல்லது தெலுங்கு நிகழ்ச்சிகளும், 20 நிமிடங்கள் இந்தி நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பட்டன. 



1975-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய நிகழ்வும், 1976-ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியும் நாடுமுழுவதும் ஒளிபரப்பப்பட்டது.

                                                                                                                                                                                இந்தியாவில் தோற்றம் - வளர்ச்சி

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உதவியுடனும், யுனெஸ்கோவின் ஆதரவுடனும் இந்தியாவில் முதல் முறையாக 1959-ம் ஆண்டு அக்டோபர் 15-ம்நாள், இந்திய அரசு டெல்லியில் தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கியது.

                                                                                                                                                                                  தொடக்க காலத்தில் வாரம் இரு நாட்களும், பின்னர் நாள்தோறும் 20 நிமிடங்களும் என 40 கி.மீ. சுற்றளவில் மட்டுமே தெரியும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. 



முதலில்சமுதாய மேம்பாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய இந்திய அரசு, அதன் பின்னர் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்க முடிவு செய்தது.

                                                                                                                                                                                      மக்கள் ஆதரவு பெருகவே தொலைக்காட்சி பெட்டிக்கான உதிரி பாகங்களைதயாரிப்பதற்கு, 1965-ல் இந்திய அரசு உற்பத்தியாளர்களுக்கு அனுமதியளித்தது. 



இது இந்திய தொலைக்காட்சியின் வளர்ச்சியில் ஓர் மைல்கல்லாகஅமைந்தது. 



1967 ஜனவரி மாதம்விவசாய நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர் நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது.

                                                                                                                                                                                                                                                                                                        நிகழ்ச்சிகளைத் தடையின்றி பார்க்கும் வகையில் ஒளிபரப்பின் ஆற்றல்அதிகரிக்கப்பட்டது. 



1970-ல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு 3 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டது.




குறுகிய காலத்தில் வேகமாக வளர்ச்சி கண்ட தொலைக்காட்சி ஒளிபரப்பானது, 1972-ல் மும்பையிலும், 1975-ல் கொல்கத்தா மற்றும் சென்னையிலும் விரிவுபடுத்தப்பட்டது.

                                                                                                                                                                                                                                                     

1975-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் தொலைக்காட்சி பெட்டிகள் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது. 




அகில இந்திய வானொலி நிலையத்துடன் இணைந்து செயல்பட்ட தொலைக்காட்சி ஒளிபரப்பு 1976 ஜனவரியில், தூர்தர்ஷன் என்ற தனித்த அடையாளத்துடன் இயங்கத் தொடங்கியது.

                                                                                                                                                                                            1980-ல் இந்தியாவில் 9.5 லட்சம் தொலைக்காட்சி பெட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் வேளைகளில், தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சலுகை விலையிலும், தவணைத் திட்டங்களிலும் விற்க ஆரம்பித்ததன் விளைவு, தொலைக்காட்சி பெட்டிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது.                  



தொலைக்காட்சி வர்த்தகத்தில் கிரிக்கெட் போட்டி ஏற்படுத்திய தாக்கம் மிகவும் அதிகம்.

                                                                                                                                                                                                                                                                                                                              செயற்கைக்கோள் வழி ஒளிபரப்பு

செயற்கைக்கோள் வழி தொலைக்காட்சி ஒளிபரப்பு திட்டம், இந்தியாவில் தொலைக்காட்சியின் வளர்ச்சியில் அடுத்தகட்ட நகர்வாக இருந்தது. 



யுனெஸ்கோ குழு, துணைக்கோள்களின் வழி ஏற்படும் தகவல் தொடர்பு வளர்ச்சியால் இந்தியாவின் கிராமங்கள் வளர்ச்சி அடையும் என்று கருதியது.

                                                                                                                                                                                        அதன் அடிப்படையில் இந்திய அரசின் அணு ஆற்றல் துறை, அமெரிக்க தேசிய வான்வழி மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி, 1975 ஆகஸ்ட் மாதம் ஏடிஎஸ்-6 என்ற துணைக்கோள் ஆப்பிரிக்காவின் தென்கோடி முனைக்கு மேல் நிலைநிறுத்தப்பட்டது.

                                                                                                                                                                                            இது மகாராஷ்டிர மாநில நிலையத்தில் இருந்து ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளை கர்நாடகா, ஆந்திரா, மத்தியபிரதேசம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைத்ததில், சுமார் 2,500 கிராமங்கள் பயனடைந்தன.

                                                                                                                                                                                                            

கூடுதல் செயற்கைக்கோள்கள்

தொலைக்காட்சி நிலையங்களால் 80 கி.மீ. வரை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடியும் என்பதால், இந்தியாவில் உள்ள 5.6 லட்சம் கிராமங்கள் பயன்பெற அதிக செலவில் ஒளிபரப்பு நிலையங்கள் அமைக்க வேண்டியிருந்தது. இதனால் 1982-ல் இன்சாட்-1 ஏ செயற்கைக்கோளை இந்தியா செலுத்தியது. அதைத்தொடர்ந்து பல்வேறு செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வருகின்றன.