JOIN OUR WHAT APP GROUP
👇👇
CLICK HERE TO JOINதென்காசி மாவட்டத்தில் நெட்டூர் அரசு பள்ளி, மாணவர்கள் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட கலைத்திருவிழா போட்டியில் தமிழக பாரம்பரிய கலையான "கனியன் கூத்து" போட்டியில் கலந்து கொண்டனர்
தமிழகத்தின் பாரம்பரிய கலை இது.
ஆனால் தற்போது இந்த கலையானது அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது
பழைய காலங்களில் கிராமப்புறக் கோவில் திருவிழாக்களில் இந்த நடனம் பெருவாரியான மக்களால் மிகுந்த பயபக்தியுடன் கண்டுகளிக்கப்படும்
தற்போது கிராமங்களில் கூட இந்த கூத்தானது இடம் பெறுவது மிகவும் குறைந்து விட்டது
இக்கால தலைமுறை மாணவர்கள் பலருக்கு இந்த கூத்து பற்றி தெரியாது
ஆனால் நெட்டூர் அரசு பள்ளி மாணவர்கள் மீண்டும் இந்த நடனத்தை நம் கண் முன் அரங்கேற்றியுள்ளனர்
இப்போட்டியில் மாணவர்கள் கடவுள் வேடம் இட்டும், பெண்கள் போல் வேடம் இட்டும் நடனம் ஆடினார்கள்.
மாணவர்களே இசை அமைத்து பாடலையும் பாடினார்கள்
மாணவர்கள் குழுவாக இந்த கனியன் கூத்து நிகழ்வை நடத்தினர்
இது முதலில் வட்டாரம் அளவில் முதலிடம் பெற்றது. பின்பு தென்காசி மாவட்ட அளவிலும் முதலிடம் பெற்றது.
தற்போது மாநில அளவில் நடந்த போட்டியிலும் முதலிடம் பெற்று தென்காசி மாவட்டம் நெட்டூர் அரசுப் பள்ளிக்கு பெருமை தேடித்தந்துள்ளனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் அனைவரும் பாராட்டினார்கள்
மாவட்ட அளவில் கனியன் கூத்து நடனம்
👇👇
மாநில அளவில் கனியன் கூத்து நடனம்
👇👇
JOIN OUR WHAT APP GROUP
👇👇
,பங்கேற்ற மாணவர்களுக்கும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் இவண்: பள்ளியின் மேனாள் தலைமை ஆசிரியர் அ.,அருள்சாமி தேவசகாயம்
ReplyDeleteமிக்க நன்றி அய்யா நானும் கணியான் கூத்து சார்பாக ஏதேனும் உதவி தேவையெனில் 9600043212 இந்த எண்ணிருக்கு தொடர்பு கொள்ளவும் நன்றி இப்டிக்கு கணியான் கூத்து கலைஞர் ராம்குமார்
Delete"Congratulations on your incredible success! ...
ReplyDeleteகிராமிய கலைகளுக்கு உயிர் கொடுத்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteகிராமிய கலைகளுக்கு உயிர் கொடுத்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சரியான முறையில் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் நன்றிகள் பல...
ReplyDelete