தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் "கலைத்திருவிழா" என்ற பெயரில் பல்வேறு தலைப்பிலான போட்டிகள் நடத்தியது.
மாணவர்களின் கற்பனை மற்றும் மொழித்திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன
மாணவர்களின் கலைத்திறமையை நிரூபிக்கும் வகையில் நடனம், நாடகம், பாடல் பாடுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன
அழகான கையெழுத்துப்போட்டிகள், செதுக்கு சிற்பம், ஓவியம் வரைதல் போன்ற மாணவர்களின் நுண் ஆற்றலை வெளிக்கொண்டு வரும் வகையிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களின் உள்ளத்தில் மறைந்து இருந்த திறமைகள் மேடை ஏறியது
மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களுடன் கைகோர்த்தனர்
இந்த கலைத்திருவிழா மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையேயான உறவு ஒரு நேர்மறையான தாக்கத்தை உருவாக்கியது என்று சொன்னால் அது மிகையாகாது
மாணவர்களை போட்டிகளுக்கு அழைத்து செல்வதிலும், மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்பதிலும் ஆசிரியர்கள் முழுமையாக தங்களை அர்பணித்தனர்
கற்றல், கற்பித்தல் தாண்டி மாணவர்களுக்கு புது வித அனுபவத்தை இந்த திருவிழா கற்று தந்தது
தங்கள் அணி வெற்றி பெறவேண்டும், தங்கள் பள்ளி வெற்றி பெறவேண்டும், தங்கள் வட்டாரம் வெற்றிபெறவேண்டும், தங்கள் மாவட்டம் அதிக போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்று எண்ணும் அளவிற்கு இந்த போட்டிகள் மாணவர்கள் மத்தியில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்கியது
இந்த கலைத்திருவிழா போட்டிகள் முதலில் பள்ளிகள் அளவிலும், பின்பு வட்டார அளவிலும், அதன் பிறகு மாவட்ட அளவிலும் நடைபெற்றது,
ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த கட்ட போட்டிக்கு தங்களை முழு வீச்சியுடன் தயார்செய்து பங்கேற்றனர்.
வெற்றி பெற முடியாத மாணவர்கள் கூட தங்கள் திறமைகளை நிரூபிக்க தங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததையும், தங்கள் திறமைகளை மேடையேற்ற ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் எண்ணி மகிழ்ந்தனர்.
இத்தகைய போட்டிகளை நடத்தி மாணவர்களை உற்சாகப்படுத்தும் நமது பள்ளிக்கல்வித்துறை குறிப்பாக நமது துறையின் அமைச்சர் அவர்களை பாராட்டிட வார்த்தைகள் இல்லை.
மாணவர்களுக்கு உளவியல் அடிப்படையில் சரியான நேரத்தில் வழங்கப்பட்ட நல்லதொரு செயல் இது.
இப்போது அனைத்து போட்டிகளும் முடிவடைந்த நிலையில் இன்று மாநிலப்போட்டியின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்
வெற்றியை அணு அளவில் தவற விட்ட மாணவர்கள் தங்கள் திறமை மேலும் மெருகேற்றிட கிடைத்த வாய்ப்பாக இதை கருத வேண்டும்
ஒலிம்பிக் பந்தயத்தின் மோட்டோ போல் "வெற்றி பெறுவது முக்கியம் இல்லை போட்டியில் பங்கு பெறுவதே முக்கியம்"
மாநில அளவில் கலைத்திருவிழா போட்டி (11 மற்றும் 12 வகுப்பு) முடிவுகள் கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
6 to 8 results?
ReplyDeleteKindly share the results of 6 to 8 category
ReplyDeletePls send 6-8 result
ReplyDelete9-10 result please
ReplyDelete