👉 ஊரகத் திறனாய்வுத் தேர்வு கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுண்சிப் பகுதியில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுதலாம்
👉 நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இத்தேர்வு எழுத முடியாது
👉 இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
👉 இத்தேர்வுக்கு மாணவர்கள் ரூபாய் 10 மட்டும் தேர்வுக்கட்டணமாக கட்டவேண்டும்
👉 விண்ணப்பங்களை 14.11.2023 முதல் 24.11.2023 வரை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யலாம்
👉 இத்தேர்வானது 16.12.2023 அன்று நடைபெறுகிறது
👉 மாணவர்கள் நிரப்பி தரும் விண்ணப்பத்துடன் வருமான சான்றிதழையும் 24.11.2023க்குள் தலைமை ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்
👉 17.11.2023 முதல் 28.11.2023 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்
👉 ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் 100 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு (50 மாணவியர்+50 மாணவர்கள்) அவர்களுக்கு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டு தோறும் ரூபாய் 1000 வழங்கப்படும்
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை CLICK செய்யவும்
👇👇
அரசுத் தேர்வுகள் இயக்குனர் கடிதம் பெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇👇
No comments:
Post a Comment