தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் கலைத்திருவிழா மாணவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு திறமையை தன்னகத்தே கொண்டவன். இது நாள் வரை அவர்கள் திறமையை வெளிக்காட்டுவதற்கு சரியான தளமோ மேடையோ கிடைக்கவில்லை.
இப்போது நமது தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அதற்கான முன்னெடுப்பை கையில் எடுத்து திறம்பட செயல்படுத்தி வருகிறது
ஒவ்வொரு மாணவனும், மாணவியும் இதுநாள் வெளிக்காட்ட தவித்து வந்த திறமைகளை இப்போது காண்பித்து வருகிறார்கள்
ஒவ்வொரு மாணவனின் திறமையை வெளிக்கொண்டு வர அவர்களுக்கு ஆசிரியர்கள் துணையாக உள்ளனர்
அத்தகைய அற்புதமான தங்கள் திறமைகளை வெளிக்காட்டி "கிராமிய நடனம்" பிரிவில் மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளனர்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட "சின்னசூரியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள்"
இந்த நடனத்தில் மாணவிகள் செய்யும் ஒவ்வொரு சாதனையும் உண்மையில் கண்கொள்ளா காட்சி
கரகம் தூக்குவது,
தலைகீழாக கிரகத்துடன் ஏணிப்படியில் ஏறுவது
என மாணவிகளின் சாதனைகளை பாராட்ட வார்த்தைகளே இல்லை
அவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர், ஆசிரியர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
மாணவிகளுக்கும், இருபால் ஆசிரிய பெருமக்களுக்கும், துணையாக நின்ற அந்த ஊரின் பெரியவர்களுக்கும் வாழ்த்துகள்
மாணவிகளின் கண்கொள்ளா நடனத்தை காண கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇👇
வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊
ReplyDelete