Search This Blog

Showing posts with label கலைத்திருவிழா. Show all posts
Showing posts with label கலைத்திருவிழா. Show all posts

Wednesday 21 February 2024

1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கலைத்திருவிழா


கலைத் திருவிழா - 1 to 5 மாணவர்களுக்கு பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம் கொண்டாடுதல்.



ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் பள்ளிக்கல்வி இயக்குநர் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணை செயல்முறைகள்



பள்ளி அளவிலான போட்டிகள் 

நடைபெறும் நாள் 


27.02.2024, 

28.02.2024, 

29.02.2024




வட்டார அளவிலான மதிப்பிடுதல் 

05.03.2024, 

06.03.2024, 

07.03.2024




மாவட்ட அளவில் மதிப்பிடுதல் 

12.03.2024, 

13.03.2024




மாநில அளவில் மதிப்பிடுதல் 

19.02.2024, 

20.03.2024



செயல்பாடுகள் 


1. வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் 


(1) தமிழ்நாட்டின் பாரம்பரிய விழாக்கள் 


(2) விலங்குகள் மற்றும் வனவிலங்குகள் 


(3) என் கனவு பள்ளி 


(4) தமிழ்நாட்டின் வரலாற்றுச் சின்னங்கள் 


(5) இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் 





2. கதை சொல்லுதல் 

(1) நட்பு 


(2) எனக்குப் பிடித்த விசித்திரக் கதை 


(3) ஒரு மாயாஜால இடத்திற்கு வருகை 


(4) பகிர்வின் முக்கியத்துவம் 


(5) ஒரு சிறந்த உலகத்திற்கான எனது கனவு 




3. மாறுவேட போட்டி 

(1) அழிந்து வரும் விலங்குகள் 


(2) தமிழ்நாட்டின் வரலாற்று தலைவர்கள் 


(3) சமூக உதவியாளர்கள் (மருத்துவர், காவல்துறை அதிகாரி, விவசாயி)


(4) பாரம்பரிய நடனக் கலைஞர்கள் அல்லது இசைக் கலைஞர்கள் 





4. கைவினை பொருட்கள் செய்தல் 

(1) உள்ளூர் விலங்குகள் அல்லது பறவைகளின் களிமண் மாடல் 


(2) பனை ஓலை அல்லது மூங்கில் கைவினைப் பொருட்களை உருவாக்குதல் 


(3) மறுசுழற்சி செய்யப்பட பொருட்களைப் பயன்படுத்தி சுற்றுச் சூழல் நட்பு கைவினை 


(4) பாரம்பரிய பொம்மைகள் 


(5) காகித கைவினை 




5. பாரம்பரிய நடனம் 

(1) கிராமிய நடனம் 

(8 மாணவர்கள் குழு)


(2) செவ்வியல் நடனம் 

(8 மாணவர்கள் குழு)




6. கருவி இசை இசைத்தல் 

(1) 

தோல்கருவி, 

கம்பிக்கருவி, 

காற்றுக்கருவி 





7. பாட்டுப்போட்டி 

(1) 

பாரதியார் பாடல்கள், 

தேசிய ஒற்றுமை பாடல்கள் 





8. கண்காட்சி 

பாரம்பரிய விளையாட்டு பொருட்கள் மற்றும் அறிவியல் செயல்திட்டம் 





9. பேச்சு போட்டி 

(1) எங்கள் ஊர் திருவிழா 

(2) எனக்கு பிடித்த விளையாட்டு 




10. நாட்டிய நாடகம் 

(1) விளையாட்டுகள் 

(2) சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் 




11. பலகுரல் 



மேலும் போட்டிகள் பற்றிய விவரம் அறியவும், தேர்வு முறைபற்றி அறியவும் கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும் 


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

































Wednesday 22 November 2023

"கனியன் கூத்து" போட்டியில் மாநில அளவில் முதல் இடம் பெற்று சாதனை அசத்திய தென்காசி மாவட்டம் நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்




 


JOIN OUR WHAT APP GROUP

👇👇

CLICK HERE TO JOIN


JOIN OUR TELEGRAM GROUP
TAMILNADU TEACHERS

👇👇




தென்காசி மாவட்டத்தில் நெட்டூர் அரசு பள்ளி, மாணவர்கள் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட கலைத்திருவிழா போட்டியில் தமிழக பாரம்பரிய கலையான "கனியன் கூத்து" போட்டியில் கலந்து கொண்டனர் 



தமிழகத்தின் பாரம்பரிய கலை இது.



ஆனால் தற்போது இந்த கலையானது அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது 



பழைய காலங்களில் கிராமப்புறக் கோவில் திருவிழாக்களில் இந்த நடனம் பெருவாரியான மக்களால் மிகுந்த பயபக்தியுடன் கண்டுகளிக்கப்படும் 



தற்போது கிராமங்களில் கூட இந்த கூத்தானது இடம் பெறுவது மிகவும் குறைந்து விட்டது 



இக்கால தலைமுறை மாணவர்கள் பலருக்கு இந்த கூத்து பற்றி தெரியாது 



ஆனால் நெட்டூர் அரசு பள்ளி மாணவர்கள் மீண்டும் இந்த நடனத்தை நம் கண் முன் அரங்கேற்றியுள்ளனர் 



இப்போட்டியில் மாணவர்கள் கடவுள் வேடம் இட்டும், பெண்கள் போல் வேடம் இட்டும் நடனம் ஆடினார்கள்.



மாணவர்களே  இசை அமைத்து பாடலையும் பாடினார்கள் 



மாணவர்கள் குழுவாக இந்த கனியன் கூத்து நிகழ்வை நடத்தினர் 



இது முதலில் வட்டாரம் அளவில் முதலிடம் பெற்றது. பின்பு தென்காசி மாவட்ட அளவிலும் முதலிடம் பெற்றது.



தற்போது மாநில அளவில் நடந்த போட்டியிலும் முதலிடம் பெற்று தென்காசி மாவட்டம் நெட்டூர் அரசுப் பள்ளிக்கு பெருமை தேடித்தந்துள்ளனர்.



போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் அனைவரும் பாராட்டினார்கள் 


மாவட்ட அளவில் கனியன் கூத்து நடனம் 

👇👇

CLICK HERE TO WATCH



மாநில அளவில் கனியன் கூத்து நடனம் 

👇👇

CLICK HERE TO WATCH



JOIN OUR WHAT APP GROUP

👇👇

CLICK HERE TO JOIN



JOIN OUR TELEGRAM GROUP
TAMILNADU TEACHERS

👇👇