Search This Blog

Friday, 17 July 2026

பள்ளிக் கல்வி - 2026-27 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமைகளை கொண்டாடும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - சார்ந்து இயக்குநர்களின் செயல்முறைகள்

 


பள்ளிக் கல்வி - 2026-27 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமைகளை கொண்டாடும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - சார்ந்து இயக்குநர்களின் செயல்முறைகள்



கலைத்திருவிழா என்பது பள்ளிகளில் ஆண்டுதோறும் நடத்தப்படும் முக்கியமான கலை மற்றும் பண்பாட்டு விழாவாகும்.




மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரவும், அவற்றை அடையாளம் கண்டு மேம்படுத்தவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.





பாடல் நடனம் ஓவியம் நாடகம் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்களில் மாணவர்கள் தங்களது படைப்பாற்றலையும் திறன்களையும் வெளிப்படுத்துவதன் மூலம் தன்னம்பிக்கை தலைமைத்துவம் போன்ற திறன்களை வளர்த்துக்கொள்கின்றனர் 





மேலும் இவ்விழாவானது மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை ஊக்குவிப்பதோடு அவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைகிறது 





2026-2027 ஆம் ஆண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகளை "இளையோர் தினம்" என்ற மையக்கருத்தினை அடிப்படையாகக்கொண்டு பள்ளி வட்டாரம் மாவட்டம் மற்றும் மாநில அளவில் பின்வரும் 5 பிரிவுகளில் அரசுப்பள்ளிகளுக்கு தனியாகவும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும் நடத்தப்படுகிறது 





கலைத்திருவிழா 2026-2027 போட்டிப் பிரிவுகள் மற்றும் எண்ணிக்கைகள் 



பிரிவு 1

1 மற்றும் 2 ஆம் வகுப்பு 

9 போட்டிகள் 



பிரிவு 2

3 முதல் 5 ஆம் வகுப்புகள் 

15 போட்டிகள் 



பிரிவு 3

6 முதல் 8 ஆம் வகுப்பு 

18 போட்டிகள் 





பிரிவு 4

9 மற்றும் 10 ஆம் வகுப்பு 

32 போட்டிகள் 




பிரிவு 5

11 மற்றும் 12 ஆம் வகுப்பு 

32 போட்டிகள் 




முக்கிய தேதிகள் 


11 மற்றும் 12 வகுப்புகளுக்கான போட்டிகள் தேதிகள் 

(மாநில போட்டிகள் நடைபெறும் இடம் விழுப்புரம் மாவட்டம்)

பள்ளியளவில் 

23.07.2026 முதல் 06.08.2026

வட்டார அளவில் 

11.08.2026 முதல் 14.08.2026

மாவட்ட அளவில் 

20.08.2026 முதல் 27.08.2026

மாநில அளவில் 

07.10.2026 (அரசு பள்ளிகள்)

08.10.2026 (அரசு உதவி பெரும் பள்ளிகள்)




9 மற்றும் 10 வகுப்புகளுக்கான போட்டிகள் தேதிகள் 

(மாநில போட்டிகள் நடைபெறும் இடம் தஞ்சாவூர் மாவட்டம்) 

பள்ளியளவில் 

23.07.2026 முதல் 04.08.2026

வட்டார அளவில் 

11.08.2026 முதல் 14.08.2026

மாவட்ட அளவில் 

20.08.2026 முதல் 27.08.2026

மாநில அளவில் 

07.10.2026  (அரசு பள்ளிகள்)

08.10.2026 (அரசு உதவி பெரும் பள்ளிகள்) 





6-8 போட்டிகள் தேதிகள் மற்றும் இடங்கள் 

(மாநில போட்டிகள் நடைபெறும் இடம் கோயமுத்தூர் மாவட்டம்)

பள்ளி அளவில் 

03.08.2026 முதல் 14.08.2026

வட்டார அளவில் 

01.09.2026 முதல் 09.09.2026

மாவட்ட அளவில் 

08.10.2026 முதல் 15.10.2026

மாநில அளவில் 

27.10.2026 (அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள்) 




3-5 போட்டிகள் தேதிகள் மற்றும் இடங்கள் 

பள்ளிகள் அளவில் 

03.08.2026 முதல் 14.08.2026

குருவள மையம் அளவில் 

19.08.2026 முதல் 21.08.2026

வட்டார அளவில் 

01.09.2026 முதல் 09.09.2026

மாவட்ட அளவில் 

08.10.2026 முதல் 15.10.2026

மாநில அளவில் 

28.10.2026 (மதுரை மாவட்டம்)




1 மற்றும் 2 வகுப்புகள் போட்டிகள் தேதிகள் 

பள்ளிகள் அளவில் 

03.08.2026 முதல் 14.08.2026

குருவள மையம் அளவில் 

19.08.2026 முதல் 21.08.2026

வட்டார அளவில் 

01.09.2026 முதல் 09.09.2026

மாவட்ட அளவில் 

08.10.2026 முதல் 15.10.2026

மாநில அளவில் 

28.10.2026 (மதுரை மாவட்டம்)



எந்தெந்த வகுப்புகளுக்கு என்னென்ன போட்டிகள் என்று கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி முழுமையான விளக்கத்தை பெறவும் 

👇

CLICK HERE
































































































No comments:

Post a Comment