Search This Blog

Thursday, 16 July 2026

பள்ளிக் கல்வி - 2026-27 ஆம் கல்வியாண்டின் மன்றச் செயல்பாடுகள் - துவக்க நிகழ்ச்சி மற்றும் மாணவர்களிடையே மன்றச் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் சுற்றறிக்கை


பள்ளிக் கல்வி - 2026-27 ஆம் கல்வியாண்டின் மன்றச் செயல்பாடுகள் - துவக்க நிகழ்ச்சி மற்றும் மாணவர்களிடையே மன்றச் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் சுற்றறிக்கை 





மாணவர்களின் கல்வி மற்றும் தனித்திறன் மேம்பாட்டில் மன்றச் செயல்பாடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணரவும், அவர்களின் பன்முக வளர்ச்சியை உறுதி செய்யவும் இந்த மன்றச் செயல்பாடுகள் ஒரு அடிப்படை தளமாக விளங்குகின்றன






அதன்படி, மன்றச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை இதற்கென தனி பாடவேளை ஒதுக்கீடு செய்யப்பட்டு இச்செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 






எனவே, இம்மன்றச் செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் வேறு எந்தவித செயல்பாடுகளுக்கும் இடமளிக்காமல், இச்செயல்பாடுகள் அனைத்தும் மகிழ்முற்றம் மாணவர் குழுக்கள் வாயிலாக நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும்.






மேலும், இந்த 2026-27 ஆம் கல்வியாண்டில், மன்றச் செயல்பாடுகளின் துவக்க நிகழ்ச்சியினை 28.07.2026 அன்று அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலை வணக்கக் கூட்டத்தின் போது நடத்திடத் தெரிவிக்கப்படுகிறது.







அதனடிப்படையில், இலக்கிய மன்றம், வினாடி-வினா மன்றம், சிறார் திரைப்பட மன்றம், கலை மற்றும் பண்பாட்டு மன்றம் (கலைத்திருவிழா) மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் போன்று பள்ளியளவில் செயல்படும் மன்றச் செயல்பாடுகளுக்கும் தனித்தனியாக ஒரு பொறுப்பாசிரியரையும், ஒவ்வொரு மன்றச் செயல்பாட்டிலும் சிறந்து விளங்கும் ஒரு மாணவரை அந்தந்த மன்றச் செயல்பாட்டிற்கான மாணவர் தூதுவராக (Student Ambassador) நியமித்தல் வேண்டும்.







மேலும், பின்வரும் நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றி ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து மன்றச் செயல்பாடுகளின் துவக்க நிகழ்ச்சியினை 28.07.2026 அன்று திட்டமிட்டு மேற்கொள்ளுதல் வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.




மன்றச் செயல்பாடுகள் துவக்க நிகழ்ச்சி நிரல் - 28.07.2026







இந்நிகழ்ச்சிக்கு 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களையும் அவரவர் மகிழ்முற்றம் குழுக்களின் அடிப்படையில் 5 குழுக்களாக வரிசைப்படுத்தவும்.







தலைமையாசிரியரின் வரவேற்புரை

2026-27 ஆம் ஆண்டில் பள்ளியளவில் செயல்படும் அனைத்து மன்றச் செயல்பாடுகளின் துவக்கத்தினை அறிவித்தல் மற்றும் அதன் குறிக்கோள்களை எடுத்துரைத்தல்

மன்றச் செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளையின் நாள் மற்றும் நேர விவரங்களை அறிவித்தல் மற்றும் அதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தல்








மாணவ கல்வி அமைச்சர்

மன்றச் செயல்பாடுகள் மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு (holistic development of students) உதவும் என்பதை எடுத்துரைத்தல்









குழுத் தலைவர்கள் (House Captains)

ஒவ்வொரு மன்றச் செயல்பாடுகளுக்கான பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவ தூதுவர்களை அறிமுகப்படுத்துதல்








ஒவ்வொரு மன்றப் பொறுப்பாசிரியர்கள்

மன்றப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை அங்கீகரித்தல்.








ஒவ்வொரு மன்ற மாணவ தூதுவர்கள்

அந்தந்த மன்றச் செயல்பாடுகளில் அவர்கள் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து இனிவரும் காலங்களில் அனைத்து மாணவர்களின் பங்கேற்பினை ஊக்குவித்தல்.









மகிழ்முற்றம் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்

மகிழ்முற்றம் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்றல்











வினாடி வினா மன்றப் பொறுப்பாசிரியர்

இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள வினாடி வினாவை மகிழ்முற்றம் குழுக்கள் வாரியாக நடத்துதல், மதிப்பெண் வழங்குதல் மற்றும் வெற்றி பெற்ற குழுவினை அறிவித்தல்.











இலக்கிய மன்றப் பொறுப்பாசிரியர்

இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை மாணவர்கள் முன்கூட்டியே தயார் செய்வதை உறுதி செய்தல். அப்படைப்புகளுக்கு குழு வாரியாக மதிப்பெண்கள் வழங்குதல். அவற்றை நிகழ்ச்சி அன்று காட்சிப்படுத்துதல்.










சிறார் திரைப்பட மன்றப் பொறுப்பாசிரியர்

மாணவர்கள் இவ்வாண்டு காட்சிப்படுத்தப்பட்ட சிறார் திரைப்படத்தின் அடிப்படையில் அவர்களுக்கு பிடித்த கதாபாத்திரத்தினைப் பற்றி எழுதுதல், சுவரொட்டி தயாரித்தல், போன்று ஏதேனும் ஒரு செயல்பாட்டினை செய்து அவற்றை நிகழ்ச்சி அன்று காட்சிப்படுத்துதல்.









சுற்றுச்சூழல் மன்றப் பொறுப்பாசிரியர்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்து ஏதேனும் செயல்பாட்டினை மாணவர்களை ஈடுபடுத்தி மேற்கொள்ளுதல்









கலைப் பண்பாட்டு மன்றப் பொறுப்பாசிரியர்

சென்ற ஆண்டு பள்ளியளவில் கலைத்திருவிழா போட்டியில் சிறந்து விளங்கிய மாணவர்களைக் கொண்டு ஏதேனும் ஒரு கலைநிகழ்ச்சியினை திட்டமிட்டு நடத்துதல்.









இந்த துவக்க நிகழ்ச்சியினைத் தொடர்ந்து, அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து மன்றங்களும் முறையாக அமைக்கப்பட்டு வாரந்தோறும் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாடவேளைகளில் மன்றச் செயல்பாடுகள் முறையாகவும், தொடர்ச்சியாகவும் நடைபெறுவதை அந்தந்த பள்ளி தலைமையாசிரியரும் மன்றப் பொறுப்பாசிரியர்களும், மாணவர் அமைச்சர்களும், மகிழ்முற்றம் குழுத் தலைவர்களும் உறுதி செய்தல் வேண்டும்.







மேலும், இவ்வாறாக பள்ளிகளில் மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்படும் செயல்பாடுகள் அனைத்தும் மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் திறனைப் பெறவும் உறுதுணையாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 






இவ்வகையான அனைத்து செயல்பாடுகளிலும் ஒவ்வொரு மாணவரின் பங்கேற்பினை உறுதிசெய்யும் நோக்கில் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் திட்டமிட்டு இந்நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து தலைமையாசிரியர்களும் மற்றும் ஆசிரியர்களும் இப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி, முழு கவனம் செலுத்தி, முனைப்புடன் செயல்படுத்தத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




மேலும் இது பற்றிய விவரம் அறியவும் வினாடி வினா போட்டியில் கேட்கப்படும் வினாக்கள் குறித்தும் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் சென்று PDF பதிவிறக்கம் செய்யவும் 

👇


No comments:

Post a Comment