தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை/மேல்நிலை/தனியார் பள்ளிகள்/ஆங்கிலோ இந்தியப்பள்ளிகள் சமூக பாதுகாப்புத்துறை/ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளினை ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கான மாநில அரசு விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது
விருது பெரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின விழாவில் ரூபாய் 10000/- ரொக்கப்பரிசும் வெள்ளிப்பதக்கமும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படுகிறது
விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்கள் உரிய படிவத்தில் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தெரிவித்தல் வேண்டும்
போதிய ஆசிரியர்கள் விண்ணப்பிக்கவில்லை வென்று தெரிவிக்காமல் ஆய்வு அலுவலர்கள் தங்கள் பள்ளிகள் பார்வையின் போது கண்டறிந்த சிறந்த ஆசிரியர்களை பள்ளித் தலைமையாசிரியரிடம் அறிவுறுத்தி இணையதளத்தில் பதிவு செய்திடல் வேண்டும்
முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு விண்ணப்பித்த அனைத்து ஆசிரியர்கள் செயல்பாடுகளை இணையதளத்தில் மதிப்பீடு செய்ய வேண்டும்
விண்ணப்பித்த ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் மற்றும் பிற சான்றுகள் மாவட்ட அளவில் உரிய அலுவலர்களால் சரிபார்க்கப்படவேண்டும்
விண்ணப்பித்த ஆசிரியர்கள் மாவட்டத் தேர்வுக்குழுவின் முன் நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு மதிப்பீடு செய்தல் வேண்டும்
மாவட்டத்தேர்வுக்குழுவினர் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் கருத்துருக்களை இணையவழியாக மதிப்பீடுகளின் அடிப்படையில் மாநிலத் தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்யப்பட வேண்டும்
மாநிலத் தேர்வுக்குழு மாவட்டக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இறுதி மதிப்பீடு செய்து தகுதியானவர்களின் பட்டியலை தயாரிக்க வேண்டும்
விருது வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய விவரங்கள் தேவைப்படுவோர் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்யவும்
👇
No comments:
Post a Comment