Search This Blog

Sunday, 19 July 2026

பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்க தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை


 



பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்க தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை




மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்க மற்றும் சினிமா தொழிலாளர்களின், 1ம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2026-27ம் நிதி ஆண்டில், ரூ.1000 முதல் 25000 வரை கல்வி உதவித் தொகை பெற, மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 






கீழ்கண்ட இரண்டு தேசிய கல்வி உதவித் தொகை வலைதளத்தில், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாணவர்கள் ஒரு முறை பதிவு மூலம் மட்டுமே சமர்ப்பிக்கலாம்.






LINK 1

👇

CLICK HERE




LINK 1

👇

CLICK HERE






ஒவ்வொரு மாணவரும், தங்களுக்கான, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின், மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்ப முறையில், தங்களுடைய சேமிப்புக் கணக்கானது தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருக்க வேண்டும். 





விண்ணப்பதாரர்கள், ஆதார் எண்ணை சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித் தொகை பெற தகுதியுடையவராக கருதப்படுவர். 





இத்திட்டத்தின் கீழ், கல்வி நிதி உதவித்தொகை பெற, விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்கு, மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.





கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு, மிகவும் முக்கியமானதாகும். பதிவு செய்யப்படாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கீழ்கண்ட லிங்க் மூலம் தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்தில் முதலில் பதிவு செய்ய வேண்டும் 



LINK 1

👇

CLICK HERE




LINK 2

👇

CLICK HERE




பின்பு, மேற் குறிப்பிட்ட வலை தளத்தில், குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து, ஒப்புதல் வழங்கி, தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும்.





வகுப்பு ஒன்று முதல் பத்து வரை விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் அடுத்த மாதம் 31ம் தேதி.





அனைத்து உயர்கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் 31.10.2026. 




மேலும் விளக்கங்கள் மற்றும் உதவி பெறுவதற்கு


மத்திய நல ஆணையர் அலுவலகம், 

தொழிலாளர் நல அமைப்பு, 

தரைத்தளம், 

சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம், 

திரு.வி.க.தொழில் பூங்கா கிண்டி, 

சென்னை - 600032. 




மின்னஞ்சல் 

👇

wclwo.chn-mole@gov.in 




தொலைபேசி எண்

👇

044-29530169

No comments:

Post a Comment