Search This Blog

Showing posts with label கலைத்திருவிழா 2024. Show all posts
Showing posts with label கலைத்திருவிழா 2024. Show all posts

Friday, 27 December 2024

மாநில அளவிலான கலைத்திருவிழா 6-8 மாணவர்களுக்கான திருத்திய போட்டி நடைபெறும் இடம் மற்றும் தேதிகள் அறிவிப்பு

 


6-8 மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது 




இது குறித்த செய்தி 

திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உயர்திரு.மீ. உதயகுமார்  அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ளார்கள் 







போட்டி நடைபெறும் மாவட்டம் 

திருப்பூர் 






போட்டிகள் நடைபெறும் நாள் 

04.01.2025






போட்டிகள் நடைபெறும் இடம் 

KANGEYAM INSTITUTE OF COMMERCE

EBET COLLEGE CAMPUS

NATHTHAKKADAIYUR

KANGEYAM

THIRUPUR DISTRICT






மாவட்ட அளவில் முதல் இடம் பெற்ற மாணவ ,  மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளவேண்டும் 





மாணவிகள் கலந்து கொள்ளும் போட்டிகளில் பெண் ஆசிரியர்கள் கண்டிப்பாக உடன் இருந்து அவர்கள் பாதுகாப்பினை உறுதி செய்திடல் வேண்டும் 





போட்டிகள் அரசு பள்ளிகளுக்கு தனியாகவும், அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு தனியாகவும் நடத்தப்படும் 






தங்குவதற்கு ஏற்ற வகையில் தேவையான ஆடைகள் போர்வை மற்றும் மருந்துகள் போன்றவற்றை உடன் கொண்டு வருமாறு மாணவ மாணவியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது 






போட்டிகளுக்கு மாணவர்கள் எவரும் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை 






மாநில அளவிலான போட்டிகளுக்கு மாணவ மாணவியர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து மீண்டும் அழைத்து செல்வது சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை பொறுப்பாகும் 






போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெறப்படுதல் வேண்டும் அக்கடிதங்களை முறையாக பராமரிப்பது தலைமை ஆசிரியர்களின் கடமையாகும் 






ஓவியம் தீட்டுதல் போட்டிக்கு வரைத்தாள் மட்டும் வழங்கப்படும் அது சார்ந்த மற்ற பொருள்களை போட்டியாளர்கள் கொண்டு வரவேண்டும் 






செவ்வியல் இசைக்கு சுருதி பெட்டி பயன்படுத்திக்கொள்ளலாம் போட்டியாளர்கள் தங்களுக்கு பிடித்த ராகத்தில் பாடலாம் 






கிராமிய நடனத்தில் அதற்கேற்ற கிராமிய தன்மை சார்ந்த உடைகளையே அணிதல் வேண்டும் மிகை ஒப்பனை அலங்கார ஆடைகள் அணிதல் கூடாது 






கிராமிய நடனம் / பரத நாட்டியம்/ குழு நடனம் போன்றவற்றுக்கு தேவையான பாடல்களை 5 மணித்துளிகள் பதிவிறக்கம் செய்து PENDRIVE அல்லது மொபைல் -ல் வைத்திருக்க வேண்டும் 





பின்புலபங்கேற்பாளர்கள்/பின்னிசை இசைப்போர் யாவரும் அந்தந்த பிரிவு வகைக்கான வயதுடையவர்களாகவே இருக்க வேண்டும் 






பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் ராகம்,  தாளம்,  தவிர புதிய ராகம்,  புதிய தாளம் மற்றும் மிகைப்படியான நாட்டிய அசைவுகள் முதலியன அனுமதிக்கப்படமாட்டாது 





பாரம்பரியக் கருவிகள் ,  உபகரணங்கள் (குத்துவிளக்கு செப்புக்குடம் )  எவையேனும் தேவைப்படின் அவற்றை போட்டியாளர்கள் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் 






களிமண் மணல் செதுக்குச்சிற்பம் செய்யும் மாணவர்கள் அனைத்து பொருட்களும் மாணவர்களே கொண்டு வரவேண்டும் 






தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள் 





T . செந்தாமரைக் கண்ணன் 

DC-8

கைபேசி எண்: 9894205103




A . முகமது ரஃபி 

DC -3

கைபேசி: 7339086667




S . ராம் பிரசாத் 

BRTE 

கைபேசி: 9566666122




















Tuesday, 13 August 2024

கலைத்திருவிழா 2024-25 பள்ளி அளவிலான போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்


கலைத்திருவிழா 2024-25 பள்ளி அளவிலான போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்


👉 கலைத்திருவிழா 2024-25 போட்டிகளின் மையக்கருத்து "சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு ". 


👉 இந்த மையக் கருத்தின் அடிப்படையிலேயே போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.





 👉 போட்டி நடைபெறும் நாட்கள் 

 22.08.2024 முதல் 30.08.2024 வரை 




👉 அரசுப் பள்ளிகளில் 1 - 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  1 - 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும்.




👉 கலைத் திருவிழா போட்டிகள் ஐந்து பிரிவுகளில் நடைபெறும்.


பிரிவு 1

1 மற்றும் 2ஆம் வகுப்பு




பிரிவு 2

3 முதல் 5 ஆம் வகுப்பு வரை 




பிரிவு 3

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 






பிரிவு 4

9 மற்றும் 10 ஆம் வகுப்பு 




பிரிவு 5 

11 மற்றும் 12 ஆம் வகுப்பு






வழிகாட்டுதல்கள் :


👉 அனைத்து பள்ளிகளும் கலைத்திருவிழா போட்டிகளில் பெரும்பான்மையான மாணவர்களை பங்கு பெறச் செய்தல் வேண்டும்.





👉 போட்டிகளை நடத்துவதற்கு பள்ளி அளவில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கலை ஆர்வலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அமைப்பு குழுவினை உருவாக்க வேண்டும்.






👉 பள்ளி அளவில் நடைபெறும் கலைத் திருவிழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், SMC உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் முழு ஈடுபட்டையும் ஒத்துழைப்பையும் பெறுதல் மிகவும் முக்கியம்.





👉 பள்ளி அளவிலான போட்டிகளில் நடுவர்களாக பணிபுரிய வல்லுநர்களை கண்டறிந்து அமைப்பு குழுவினரிடம் கலந்து ஆலோசித்து நடுவர் பட்டியலை தயார் செய்ய வேண்டும். அதற்கான முன் அனுமதியை வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து பள்ளித் தலைமை ஆசிரியர் பெற வேண்டும். இந்த பட்டியலில் இருந்து தான் நடுவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.






👉 பள்ளி அளவிலான அனைத்து போட்டிகளும் "சுழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு " என்ற மையக் கருத்தின் அடிப்படையிலேயே குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.






👉 ஒருவர் எவையேனும் மூன்று தனிப் போட்டிகள் மற்றும் இரண்டு குழுப்போட்டிகளில் மட்டுமே பங்கு பெற முடியும்.






👉  EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல் 





👉 போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களின் விவரங்களை சேகரித்து பள்ளி அளவில் போட்டி வாரியாக போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பாகவே EMIS - ல் பதிவு செய்ய வேண்டும்





👉 ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை போட்டி வாரியாக EMIS -ல் பதிவு செய்ய வேண்டும்.





👉 பள்ளி அளவில் முதலிடத்தில் வெற்றி பெறும் தனிநபர்/ குழு மட்டுமே வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற  தகுதி பெறுவர்.





👉 சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களை (CWSN) பெரும்பான்மையான அளவில் போட்டிகளில் பங்கு பெறுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.





👉 சில வகை மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு ( ID, ASD, CP) மட்டும் ஒரு சில போட்டிகள் தனியாக நடைபெறும். 





👉 இந்த போட்டிகளை சார்ந்த பள்ளிக்கான சிறப்பு பயிற்றுநர்களுடன் இணைந்து நடத்த வேண்டும்.





 👉 அட்டவணையில் குறிப்பிடப்படாத குறைபாடு உள்ள மாணவர்களை ஊக்குவித்து மற்ற மாணவர்களுடன் இணைந்து அனைத்து போட்டிகளிலும் பங்கு பெற செய்ய வேண்டும்.





👉 போட்டிகளில் பங்கேற்கும் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களின் படைப்புகளின் புகைப்படம் மற்றும் காணொளி சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் EMIS -ல் கட்டாயமாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.






👉 பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களையும் அனைத்து போட்டிகளிலும் பங்கு பெறச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.




மேலும் விவரம் அறிய pdf பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்