தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு அரசுப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உதவித் தொகை பெறும் வகையில் நடைபெறும் தேர்வு ஆகும்
இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் 500 நபர்கள் மற்றும் மாணவிகள் 500 நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மாதம் 1000 வீதம் 10 மாதங்களுக்கு அதாவது வருடம் 10000 ரூபாய் வழங்கப்படும். இந்த உதவித்தொகையானது மாணவர்கள் கல்லூரி இளநிலை படிப்பு முடியும் வரை வழங்கப்படும்
இந்த தேர்வானது இரண்டு பகுதியாக நடைபெறும் முதல் பகுதி தேர்வு கணக்கு தேர்வு இதில் 60 வினாக்கள் கேட்கப்படும் 60 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடைபெறும்
பகுதி 2 தேர்வானது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை உள்ளடக்கிய 60 வினாக்கள் கேட்கப்படும் 60 மதிப்பெண்களை உடையது
இரண்டிலும் சேர்த்து 120 மதிப்பெண்களுக்கு அதிக பட்ச மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களில் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்
இந்த ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு மாணவர்கள் தங்கள் விவரங்களை தேர்வுத்துறை வலைதளத்தில் பதிவேற்றும் செய்து விட்டார்கள்
தேர்வானது ஜனவரி 31 இல் நடைபெற உள்ளது. அது வரையில் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து மாதிரி தேர்வுகள் ஆன்லைன் வழியில் நடைபெறுகிறது
விருப்பம் உள்ள மாணவர்கள் தேர்வு எழுதி பயிற்சி பெறலாம்
தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு
சமூக அறிவியல் ஆன்லைன் தேர்வு 1
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
1. மனித பரிணாம வளர்ச்சியும், சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம்
2. பண்டைய நாகரிகங்கள்
👇
மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு தொடர்பான ஆன்லைன் வகுப்பு, குறிப்புகள், ஆன்லைன் தேர்வுகள் தேவைப்படுபவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் நமது வாட்ஸ் அப் சானலில் இணையவும்
👇

No comments:
Post a Comment