Search This Blog

Friday, 19 December 2025

NMMS Examination - விண்ணப்பிக்க 23.12.2025 வரை கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு

அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு 






2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் 2026 ஜனவரி மாதம் 10 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது 






தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித் தொகை 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது 






உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 10.01.2026 அன்று நடைபெறவுள்ளது 






பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்துடன் ONLINE கட்டணத்தொகை ரூபாய் 50 சேர்த்து தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 20.12.2025 என இருந்தது 





தற்போது மாணவர்களின் நலன் கருதி அதிக மாணவர்கள் பயன்பெறும் இத்தேர்விற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் 23.12.2025 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது 





மேலும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை பெறலாம் என்று சுற்றறிக்கை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது 




NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN


















No comments:

Post a Comment