Search This Blog

Showing posts with label மருத்துவ பரிசோதனை. Show all posts
Showing posts with label மருத்துவ பரிசோதனை. Show all posts

Tuesday 13 February 2024

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு16 வகையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி


அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு அறிவிப்பு வெளியிட்டார் 



 
அறிவிப்புக்கான அரசாணை தற்போது வெளியீடப்பட்டுள்ளது  




முதற்கட்டமாக 50 வயதைக் கடந்த 1.06 லட்சம் ஆசிரியர்களுக்கு16 வகையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது 




பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 106985. இந்த ஆசிரியர்களுக்கு மட்டும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள முதற்கட்டமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது 





GOLD என்ற திட்டத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள கீழ்கண்ட பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது 




1. Complete Haemogram



2. ESR, Urine Analysis



3. Blood Sugar F & PP



4. Urea, Creatinine, Uric Acid



5. LIPID profile



6. Total Cholesterol (HDL and LDL)



7. Triglycerides, Total Cholesterol/HDL ratio



8. LIVER function test



9. Serum Bilirubin (total & direct)



10. AST, ALT, SAP, total Protein & Albumin



11. HbsAg



12. Blood grouping & Typing



13. ECG



14. X-Ray Chest



15. USG Abdomen



16. Pap Smear




மேற்கண்ட சோதனைகள் 50 வயதைக்கடந்த 106985 ஆசிரியர்களை மூன்றாக பிரித்து ஆண்டு ஒன்றிற்கு சுமார் 35600 ஆசிரியர்களுக்கு முழுஉடல் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது 



ஆசிரியர்களுக்கு இந்த சோதனைகளுக்கு ஒரு ஆசிரியருக்கு gold திட்டத்தின் கீழ் ரூபாய் 1000 மட்டும் தேசிய ஆசிரியர் நலநிதியிலிருந்து வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது 




மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் pdf பதிவிறக்கம் செய்யவும் 

👇👇