👇👇
Search This Blog
Tuesday, 11 October 2022
காலாண்டு தேர்வின் மதிப்பெண்களை EMIS PORTAL -ல் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல்
1)
மதிப்பெண் பதிவேற்றம், ஆசிரியர்களின் தனிப்பட்ட EMIS ID (INDIVIDUAL 8 DIGIT ) பயன்படுத்தி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே வகுப்பாசிரியர்கள் மட்டுமே, தங்கள் வகுப்பு மாணவர்க்ளுக்கான மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
பொதுவான SCHOOL LOGIN -ல் உள்ளீடுக்கான வசதி இல்லை.
ஆசிரியர்கள் தாங்கள் பதிவேற்றம் செய்தவற்றை , SCHOOL LOGIN -ல் பார்க்க முடியும்.
2)
வகுப்பாசிரியர்கள் தங்கள் மாணவர்களின் மற்ற பாடங்களுக்கான மதிப்பெண்களை, அந்தந்த பாட ஆசிரியர்களிடம் கேட்டு பெற்று , பதிவேற்றத்தை முடிக்க வேண்டும்.
3)
தற்பொழுது அனைத்து வகுப்பாசிரியர்களுக்கு மட்டும் activate செய்யப்பட்டுள்ளது.
4)
அனைத்து படங்களுக்கான மதிப்பெண்களை தயார் செய்துகொண்டு, உள்ளீடுகளை மேற்கொள்ளவும், ஏனெனில், அனைத்து பாடங்களின் மதிப்பெண்களை உள்ளீடு செய்தால் மட்டுமே save செய்ய முடிகிறது.
5)
வகுப்பாசிரியர்கள் தங்களுடைய உள்நுழைவில்- 6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு ACADEMIC SCORES என்ற MENU -ன் கீழும்
10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு STUDENTS MARKS என்ற MENU -ன் கீழும் மதிப்பெண்களை உள்ளீடு செய்யவேண்டும்.
N.B.:
Class Teachers' Individual Login in
Browser / Not in the APP
Monday, 10 October 2022
Sunday, 9 October 2022
10.10.2022 முதல் அனைவரும் ஆசிரியர் மாணவர் வருகை பதிவு செய்ய வேண்டிய புதிய TNSED APP வெளியீடு பதிவிறக்கம் செய்ய DIRECT LINK
அனைவருக்கும் வணக்கம்..
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையினை பதிவு செய்வதற்காக மட்டுமே இந்த தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய செயலியானது இன்று முதல் (10.10.2022) பயன்பாட்டுக்கு வரும்.
எனவே கீழ்கண்ட புதிய செயலி மூலமாக இன்று (10.10.2022) முதல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை பதிவு செய்தல் வேண்டும்.
மேலும் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவித்து புதிய செயலி மூலம் மாணவர்களின் வருகையை பதிவு செய்ய தகவல் தெரிவிக்கப்பட்டு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
👇
Saturday, 8 October 2022
சர்வதேச விண்வெளி வாரவிழா இணையவழி வினாடி வினா போட்டிக்கான படிவம் (Google form)
சர்வதேச விண்வெளி வார விழா இணைய வழி வினாடி வினா
மேலும் தகவல்களுக்கு
கண்ணபிரான்
ஒருங்கிணைப்பாளர்
கலிலியோ அறிவியல் கழகம்
8778201926
Email: galilioscienceclub@gmail.com
படிவம் நிரப்ப கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇👇
Thursday, 6 October 2022
10 ஆம் வகுப்பு வேதியியல் அனைத்து மதிப்பெண்கள் வினா விடை
👉 ஒரு மதிப்பெண் வினா விடை
👉 இரு மதிப்பெண் வினா விடை
👉 4 மதிப்பெண் வினா விடை
👉 7 மதிப்பெண் வினா விடை
அனைத்தும் ஒரே pdf file ஆக பதிவிறக்கம்
செய்து மாணவர்களுக்கு அனுப்பி உதவுங்கள்
👇👇
எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம் தமிழ், ஆங்கிலம், கணக்கு TLM
படங்களை பதிவிறக்கம் செய்து
அப்படியே பயன்படுத்தலாம்
தமிழ்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
ஆங்கிலம்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
கணக்கு
👇👇
அங்கன்வாடி மையங்களில் செயல்படும் LKG, UKG வகுப்புகளை தொடர்ந்து நடத்த அனுமதி - ரூ.5000/- தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியீடு
Wednesday, 5 October 2022
தமிழில் முனைவர் பட்ட ஆய்வு (PhD) மேற்கொள்ள விரும்புவோருக்கு ஓர் அரிய வாய்ப்பு.
சென்னை SRM பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கணம், மொழியியல், இதழியல், கணித்தமிழ், தமிழ் கற்பித்தல், ஒப்பியல், கலை, பண்பாடு ஆகிய துறைகளில் முனைவர் பட்ட ஆய்வு (PhD) மேற்கொள்ள விரும்புவோர் கவனத்திற்கு.
NET/SET தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் உதவித்தொகையாக (Stipend) மாதந்தோறும் 31ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு (36 மாதங்கள்) வழங்கப்படும்.
NET-JRF தேர்ச்சி பெற்றவர்கள் பல்கலைக்கழக மானியக் குழுவால் UGC) வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் பிற வசதிகளையும் பெறலாம்.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 நாள்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்கலைக்கழகத்தில் இருக்க வேண்டும்.
உதவி ஆசிரியராக மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க வேண்டும்.
கல்வித் தகுதியாக முழுநேரமாக MA முடித்திருக்க வேண்டும்.
M.Phil. முடித்திருக்க வேண்டியது கட்டாயமில்லை.
முழுநேர (Full-time) ஆய்வுகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் 15.10.2022
மேலும் விவரங்களுக்கு
முனைவர் இல. சுந்தரம்
இணைப்பேராசிரியர்,
SRMIST.
செல்பேசி: 97 90 900 230
மின்னஞ்சல்: sundaral@srmist.edu.in
👇👇
மேலும் விபரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇
Monday, 3 October 2022
இந்திய வானிலை ஆய்வு மையத்தில் 990 அறிவியல் உதவியாளர் காலிப் பணியிடங்கள்
Friday, 30 September 2022
EMIS தெரிந்துக்கொள்ளவேண்டிய தகவல்கள்
1. TNSED attendance என்ற புதிய செயலி வருகையை பதிவு செய்வதற்காக மட்டும் வர உள்ளது. (This will be resolved attendance not marked issues)
2. App Version - will be Updated Every 2nd and 4th Week of Saturday if Necessary.
3. Leave Application Module - Edit வசதியுடன் வர இருக்கிறது.
Currently Available modules:
Health module :
அனைத்து அரசு பள்ளிகளும் பதிவு செய்து முடிக்க வேண்டும். எந்த பள்ளிகள் அனைத்து மாணவர்களையும் screening செய்து முடித்துள்ளீர்களோ அந்த பள்ளிகளுக்கு மட்டுமே Medical Team oct -10 லிருந்து வர உள்ளனர்.
Library module :
அனைத்து மாணவர்களுக்கும் புத்தகம் assign செய்யப்பட்டிருக்க வேண்டும்.
School stock:
இன்று முதல் தங்கள் பள்ளிக்கு எந்த பொருள் வாங்கினாலும் / பெறப்பட்டாலும் உடனடியாக எமிஸில் அன்றே பதிவு செய்திட வேண்டும். பழைய stock பதிவிட வேண்டாம்.
Tech Infra :
தங்கள் பள்ளியில் உள்ள கணினி, லேப்டாப், புரஜெக்டர், etc., சார்ந்த தகவல்கள் இந்த ஆண்டிற்கு update செய்யப்பட வேண்டும். (கடந்த ஆண்டு பதிவு செய்ததை தற்போது புதுப்பிக்க வேண்டும்)
SNA: SNA account details
பதிவு செய்து முடிக்க வேண்டும்.
Events and Tours:
பள்ளிகளில் கொண்டாடப்படும் முக்கிய தினங்கள், சிறப்பு நிகழ்வுகள், சுற்றுலா ஆகியவை சார்ந்த தகவல்கள் புகைப்படத்துடன் எமிஸில் அன்றே பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Clubs:
தங்கள் பள்ளியில் செயல்படுத்தப்படும் clubs(Scout, NSS, NCC, JRC) தகவல்கள், அதற்கான பொறுப்பு ஆசிரியர் - assign செய்யப்பட வேண்டும். பிறகு club பொறுப்பு ஆசிரியர் மாணவர்களை tag செய்யப்பட வேண்டும்.
Sanctioned post :
பள்ளியில் அரசு ஆணைப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்கள் பாட வாரியாக மற்றும் காலிப் பணியிடம் விபரங்கள் எமிஸில் பதிவு செய்யப்பட வேண்டும் .
Students Profile:
ஆதார் எண் பதிவேற்றம் செய்யாத மாணவர்களுக்கு ஆதார் எண்
students profile- ல் Update செய்ய வேண்டும்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நாள். 30.09.2022 நிகழ்வுகள் நினைவில் கொள்ளவேண்டியவை
அனைத்து வகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் காலை வணக்கம்
30.9.2022 இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தினை மாநில திட்ட இயக்குனர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடைய செயல்முறைகளின் படி செயல்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளி மேலாண்மை குழு கூட்ட நேரம் மாலை 4:30 முதல் 6:00 மணி வரை.
அழைப்பிதழ் அல்லது தொலைபேசி வாயிலாக அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பங்குபெறும் உறுப்பினர்கள் வருகையை TNSED Parents App- ல் வருகையை அன்றைய தினமே பதிவு செய்தல் வேண்டும் . பதிவிடாத தலைமை ஆசிரியர்கள் அது சார்ந்து இனிவரும் காலங்களில் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க நேரிடும்
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வருகையை பள்ளி மேலாண்மை குழு தலைவர் தொலைபேசி எண் மூலம் (Username & password )வருகை பதிவை update செய்தல் வேண்டும்.
மாநிலத் திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள கூட்டப் பொருட்களை அன்றைய தினம் தீர்மானமாக இயற்றப்பட வேண்டும் .
இக்கூட்டத்தில் கடந்த இரண்டு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வகைப்படுத்தி தேவைகளுக்கு ஏற்ப வரிசைப்படுத்தி விவாதிக்கப்பட வேண்டும்.
பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களை அக்டோபர் 02.10.2022 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.
வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் சவால்கள், பள்ளி இடை நின்ற மாணவர்கள், பள்ளியில் சேராத மாணவர்கள் பள்ளி கட்டமைப்பு வசதிகள், இல்லம் தேடிக் கல்வி செயல்பாடுகள், பள்ளிக்கும் சமூகத்திற்குமான தொடர்பு சார்ந்து கூட்டங்களில் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.
பள்ளி மேலாண்மைக் குழு மாதாந்திர கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருந்தால் அவற்றினுடைய விவரத்தை புகைப்படத்துடன் வட்டாரத்தின் வழியாக மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் இவை மாநில அளவில் தயாரிக்கப்படும் கையேட்டில் பிரசுரிக்கப்பட வாய்ப்புள்ளது.
அனைத்து தலைமை ஆசிரியர்களும் TNSED Parents app ல் 20 உறுப்பினர்களுடைய பெயர் பதிவை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உறுப்பினர்களுடைய பெயர்கள் விடுபட்டு இருந்தால் SCHOOL EMIS ல் login செய்து SMC Reconstitution சென்று பெயர்களை பதிவேற்றம் செய்திட கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் தங்கள் பள்ளி சார்ந்த தேவைகள் ஏதாவது ஒன்றினை (பள்ளி செயல்திட்டம் சார்ந்து) பள்ளி மேம்பாட்டு திட்ட TNSED parents app ல் SMC Module ல் அன்றைய தினமே பதிவேற்றம் செய்திட வேண்டும்.
அனைத்து செயல்பாடுகளுக்குமான காணொளி தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி தலைமையாசிரியர்கள் பள்ளி மேம்பாட்டு திட்டத்தினை update செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
சிறப்பாக செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழு நிகழ்வுகளை வீடியோ புகைப்படங்களாக அனுப்பவும் .
சிறப்பு தீர்மானங்கள் ஏதேனும் நிறைவேற்றி இருந்தால் அவற்றைச் சார்ந்த விவரத்தையும் நீங்கள் உடனுக்குடன் மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது
அனைத்து பள்ளி மேலாண்மைக் குழுக்களிலும் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை (ID Card) , Letter Pad தரமானதாக வாங்கி உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு கூட்டத்திலும் அனைத்து உறுப்பினர்களும் அடையாள அட்டை அணிந்து வருவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.