சென்னை SRM பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கணம், மொழியியல், இதழியல், கணித்தமிழ், தமிழ் கற்பித்தல், ஒப்பியல், கலை, பண்பாடு ஆகிய துறைகளில் முனைவர் பட்ட ஆய்வு (PhD) மேற்கொள்ள விரும்புவோர் கவனத்திற்கு.
NET/SET தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் உதவித்தொகையாக (Stipend) மாதந்தோறும் 31ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு (36 மாதங்கள்) வழங்கப்படும்.
NET-JRF தேர்ச்சி பெற்றவர்கள் பல்கலைக்கழக மானியக் குழுவால் UGC) வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் பிற வசதிகளையும் பெறலாம்.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 நாள்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்கலைக்கழகத்தில் இருக்க வேண்டும்.
உதவி ஆசிரியராக மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க வேண்டும்.
கல்வித் தகுதியாக முழுநேரமாக MA முடித்திருக்க வேண்டும்.
M.Phil. முடித்திருக்க வேண்டியது கட்டாயமில்லை.
முழுநேர (Full-time) ஆய்வுகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் 15.10.2022
மேலும் விவரங்களுக்கு
முனைவர் இல. சுந்தரம்
இணைப்பேராசிரியர்,
SRMIST.
செல்பேசி: 97 90 900 230
மின்னஞ்சல்: sundaral@srmist.edu.in
👇👇
மேலும் விபரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇
No comments:
Post a Comment