அனைத்து வகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் காலை வணக்கம்
30.9.2022 இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தினை மாநில திட்ட இயக்குனர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடைய செயல்முறைகளின் படி செயல்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளி மேலாண்மை குழு கூட்ட நேரம் மாலை 4:30 முதல் 6:00 மணி வரை.
அழைப்பிதழ் அல்லது தொலைபேசி வாயிலாக அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பங்குபெறும் உறுப்பினர்கள் வருகையை TNSED Parents App- ல் வருகையை அன்றைய தினமே பதிவு செய்தல் வேண்டும் . பதிவிடாத தலைமை ஆசிரியர்கள் அது சார்ந்து இனிவரும் காலங்களில் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க நேரிடும்
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வருகையை பள்ளி மேலாண்மை குழு தலைவர் தொலைபேசி எண் மூலம் (Username & password )வருகை பதிவை update செய்தல் வேண்டும்.
மாநிலத் திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள கூட்டப் பொருட்களை அன்றைய தினம் தீர்மானமாக இயற்றப்பட வேண்டும் .
இக்கூட்டத்தில் கடந்த இரண்டு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வகைப்படுத்தி தேவைகளுக்கு ஏற்ப வரிசைப்படுத்தி விவாதிக்கப்பட வேண்டும்.
பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களை அக்டோபர் 02.10.2022 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.
வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் சவால்கள், பள்ளி இடை நின்ற மாணவர்கள், பள்ளியில் சேராத மாணவர்கள் பள்ளி கட்டமைப்பு வசதிகள், இல்லம் தேடிக் கல்வி செயல்பாடுகள், பள்ளிக்கும் சமூகத்திற்குமான தொடர்பு சார்ந்து கூட்டங்களில் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.
பள்ளி மேலாண்மைக் குழு மாதாந்திர கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருந்தால் அவற்றினுடைய விவரத்தை புகைப்படத்துடன் வட்டாரத்தின் வழியாக மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் இவை மாநில அளவில் தயாரிக்கப்படும் கையேட்டில் பிரசுரிக்கப்பட வாய்ப்புள்ளது.
அனைத்து தலைமை ஆசிரியர்களும் TNSED Parents app ல் 20 உறுப்பினர்களுடைய பெயர் பதிவை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உறுப்பினர்களுடைய பெயர்கள் விடுபட்டு இருந்தால் SCHOOL EMIS ல் login செய்து SMC Reconstitution சென்று பெயர்களை பதிவேற்றம் செய்திட கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் தங்கள் பள்ளி சார்ந்த தேவைகள் ஏதாவது ஒன்றினை (பள்ளி செயல்திட்டம் சார்ந்து) பள்ளி மேம்பாட்டு திட்ட TNSED parents app ல் SMC Module ல் அன்றைய தினமே பதிவேற்றம் செய்திட வேண்டும்.
அனைத்து செயல்பாடுகளுக்குமான காணொளி தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி தலைமையாசிரியர்கள் பள்ளி மேம்பாட்டு திட்டத்தினை update செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
சிறப்பாக செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழு நிகழ்வுகளை வீடியோ புகைப்படங்களாக அனுப்பவும் .
சிறப்பு தீர்மானங்கள் ஏதேனும் நிறைவேற்றி இருந்தால் அவற்றைச் சார்ந்த விவரத்தையும் நீங்கள் உடனுக்குடன் மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது
அனைத்து பள்ளி மேலாண்மைக் குழுக்களிலும் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை (ID Card) , Letter Pad தரமானதாக வாங்கி உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு கூட்டத்திலும் அனைத்து உறுப்பினர்களும் அடையாள அட்டை அணிந்து வருவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment