வழக்கு எண் W.P (MD) No 6340/2019 மற்றும் பல வழக்குகள் Vs தமிழக அரசு. தீர்ப்பு நாள் 02.09.22 ஆசிரியர்கள் பணி நியமனங்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு.
2018ம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் பல்வேறு அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் செய்யப்பட்ட ஆசிரியர்கள் நியமனங்களுக்கு, உபரி ஆசிரியர் பணியிடங்களைக் காரணம் காட்டி பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணை G.O 165 ன் படி, ஒப்புதல் அளிக்காமல் தமிழகக் கல்வித்துறை இருந்து வந்தது.
அரசாணை 165 யை நீக்குறவு செய்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்ட பிறகும், தமிழக அரசு அந்த நீதிமன்ற ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி, தமிழகக் கல்வித்துறை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இருந்தது.
இந்நிலையில் இது தொடர்பான நூற்றுக்கணக்கான வழக்குகளை விசாரித்த மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதியரசர் திரு M.S ரமேஷ் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
வழக்கு எண் W.P (MD) No 6340/2019 மற்றும் பல வழக்குகள் Vs தமிழக அரசு.. தீர்ப்பு நாள் 02.09.22.
தீர்ப்பின் சாராம்சம்..
1) சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறையின் முன்னனுமதி வாங் வேண்டியதில்லை என்பதால் மேற்படி காரணத்தைச் சுட்டிக்காட்டி நியமன ஒப்புதல் வழங்காமல் இருக்கக்கூடாது.
2) சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு தேவையில்லை என்பதால் மேற்படி காரணத்தை சுட்டிக்காட்டி நியமன ஒப்புதல் வழங்காமல் இருக்கக்கூடாது.
3) உபரி பணியிடங்களைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு பள்ளியும் தனித்தனி அலகாகப் பார்க்க வேண்டும். மாவட்டத்தின் பிற பள்ளிகளில் உபரிப் பணியிடம் இருக்கின்றது என்பதால் மேற்படி காரணத்தை சுட்டிக்காட்டி நியமன ஒப்புதல் வழங்காமல் இருக்கக்கூடாது.
4) சிறுபான்மையினர் பள்ளிகளில் பணியிடங்களில் Subject மாற்றம் செய்து கொள்ள பள்ளி நிர்வாகத்திற்கே அதிகாரம் உண்டு என்பதால் மேற்படி காரணத்தை சுட்டிக்காட்டி நியமன ஒப்புதல் வழங்காமல் இருக்கக்கூடாது.
5) சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் இடைநிலையாசிரியர் பணியிடங்களை 6-8 வகுப்புகளில் அவர்களாகவே பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக மாற்றிக்கொள்ளலாம் என்பதால்.. மேற்படி காரணத்தை சுட்டிக்காட்டி நியமன ஒப்புதல் வழங்காமல் இருக்கக்கூடாது.
சிறுபான்மை உரிமையற்ற பள்ளிகளிலும் அரசாணை 165 மற்றும் மாவட்டத்தில் உள்ள உபரிப் பணியிடங்களைச் சுட்டிக்காட்டி ஒப்புதல் வழங்காமல் இருக்கக்கூடாது..
மேற்படி பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் முடிவுகளுக்குக் கட்டுப்படவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர்களது நியமன தேதி முதல் பணப்பலன்களை அளித்து நான்கு வாரத்திற்குள் அவர்களுக்கு நியமன ஒப்புதலை தமிழக அரசு வழங்க வேண்டும் ..