Search This Blog

Wednesday 6 October 2021

12 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களுக்கான புதுப்பிப்பு கட்டணம்‌ உயர்வு: மத்திய அரசு



8ம் வகுப்பு தனித்தேர்வு: அக்டோபர் 11ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

எட்டாம்‌ வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும்‌ தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்‌ வருகிற 11ம்‌ தேதி முதல்‌ ஆன்லைனில்‌ விண்ணப்பிக்கலாம்‌ என்று அரசுத்‌ தேர்வுகள்‌ துறை அறிவித்‌துள்ளது.

 இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ வெளியிட்டுள்ள அறிவிப்பு:    நவம்பர்‌ மாதம்‌ நடக்க இருக்கின்ற தனித்தேர்வர்களுக்‌கான எட்டாம்‌ வகுப்பு தேர்வுஎழுத விண்ணப்பிக்க விரும்பும்‌ மாணவர்கள்‌ அக்டோபர்‌ 1ம்‌தேதியுடன்‌ பன்னிரெண்டரை வயது நிரம்பியிருக்க வேண்டும்‌. அந்த வயுதுள்ளவர்கள்‌ 11ம்‌ தேதி முதல்‌ 18ம்‌ தேதி வரை www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில்‌ குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில்‌ சென்று ஆன்லைன்‌ மூலம்‌ பதிவு செய்ய வேண்டும்‌. அதுமட்டுமில்லாமல்‌ 20ம்‌ தேதி தக்கல்‌ திட்டத்தின்‌ கீழ்‌ ₹500 கூடுதலாக செலுத்தி விண்ணப்‌பிக்கலாம்‌. முதல்‌ முறையாக  8ஆம்‌ வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கும்‌ மாணவர்கள்‌ ஆன்லைன்‌ விண்‌ணப்பத்துடன்‌ சான்றிடப்பட்ட தங்கள்‌ பள்ளி மாற்றுச்‌ சான்‌றின்‌ நகல்‌, பதிவுத்தாள்‌ நகல்‌, பிறப்பு சான்றின்‌ நகல்‌, இவற்‌றில்‌ ஏதாவது ஒன்றை மட்டுமே இணைத்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்‌. ஏற்கனவே எட்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு எழுதி தோல்வி அடைந்த பாடத்தை தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள்‌, அதன்‌ மதிப்பெண்‌ சான்று நகல்‌களை கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்‌. தனித்‌ தேர்வர்கள்‌ ₹42 மதிப்‌புள்ள தபால்‌ தலை ஒட்டிய சுய முகவரியுடன்‌ கூடிய உறையை விண்ணப்பத்துடன்‌ இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்‌. 

இந்த தேர்வுகள்‌ குறித்த விரிவான விவரங்கள்‌  www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ பார்க்கலாம்‌.



7 மணி நேர முடக்கம்: நிமிடத்திற்கு 12 கோடி இழந்த Facebook-மொத்தம் 52ஆயிரம் கோடி அவுட்





NMMS SAT ONLINE CLASS 06.10.2021

Day 5 YouTube live link




Day 06/10/2021

Timing 6:00-7:00 pm

Resource person 

Mr. S.Ganesh Kumar

Bt asst teacher

Thiruvarur dt

Click here to join youtube live class

Tuesday 5 October 2021

பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள் இருப்பின் திருத்தம் செய்ய



இனி இந்த போன்களில் எல்லாம் whatsapp இயங்காது:வீடியோ






பொறியியல் படிப்பில் 7.5 % : அரசுப் பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது. தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் .

பொறியியல் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7. 5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. மேலும், இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு மாணவர்சேர்க்கைக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது பேசிய அவர், 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின்கீழ் பொறியியல் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை அரசே ஏற்கும் என அறிவித்தார். 

இந்நிலையில், அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் தொழில்நுட்ப கல்வி இயக்கம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்புகளில் சேரும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளிடம் எந்தவித கட்டணத்தையும் வசூலிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை அரசே செலுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மீறி மாணவ,மாணவிகளிடம் கட்டணம் வசூலித்தால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்


பொருள் :தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி-மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு 12 : 10.2021 அன்று நடைபெறுதல்-சார்ந்து
பார்வை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்  31.08.2021 

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி , வகுப்பு IV ன் கீழுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு 12.10.2021 அன்று பிற்பகல் 5,00 மணியளவில் மாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது . மாவட்டக் கல்வி அலுவலர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் நாளில் , மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த அனைத்துப் பணியிடங்களும் காலிப் பணியிடமாகக் ( Zero Vacancy ) கருதப்பட்டு , அவர்கள் தற்போது பணிபுரியும் அலுவலகத்தில்  பணியேற்றுள்ள பணிமூப்பின் அடிப்படையில் ( Station Seniority ) மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது .



கற்கண்டு கணிதம் NMMS வழிகாட்டுதல் பயிற்சி வாட்ஸ் அப் குழு

 குறிப்பு

1. ஏதேனும் ஒரு குழுவில் இணையவும்

2. 1முதல் 15 வரை உள்ள குழுவில் இணைந்தவர்கள் இந்தக்குழுக்களில் இணைய வேண்டாம்


*Nmms online class group 16*

👇👇

Group 16 இணைய இதை அழுத்தவும்

*Nmms online class group
17*

👇👇

Group 17 இணைய இதை அழுத்தவும்

*Nmms online class group
18*

👇👇

Group 18 இணைய இதை அழுத்தவும்

INSPIRE AWARD விண்ணப்பிக்க அக்டோபர் 15 ம் தேதி கடைசி நாள். பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்.

 






NMMS தேர்வில் வெற்றி பெற எளிய வழிகள்


மாலை 6 மணி

YouTube நேரலை

👇👇

நேரலையில் கலந்துகொள்ள இதை அழுத்தவும்

12-18 வயது சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி அவசியம்:எய்ம்ஸ் இயக்குனர் Dr.ரன்தீப் குலேரியா



இம்பாக்ட் ஐஏஎஸ் அகாடமி இலவசமாக நடத்தும் TNPSC புதிய பாடத் திட்டம் குறித்த கருத்தரங்கு

சென்னை அண்ணா நகரில் இயங்கிவரும்  இம்பாக்ட் ஐஏஎஸ் அகாடமியில் நாளை(அக்-6) முதல்  TNPSC நடத்தும் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.

தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என  TNPSC சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில் இம்பாக்ட் ஐஏஎஸ் அகாடமியில் சிறந்த ஆசிரியர்களைக்கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதில் தமிழில் அடிப்படைகளை எவ்வாறு மேம்படுத்தலாம், தமிழ் கேள்விகளை எதிர்கொள்வது  எப்படி எனும் கருத்தரங்கம் நாளை காலை அக்-6 காலை 10:30 மணிக்கு இம்பாக்ட் பயிற்சி மையத்தில் நடக்க உள்ளது.

இந்த கருத்தரங்கில் தமிழக பாடநூல் கழக மறு சீரமைப்புக் குழுவில் 9 மற்றும் 10-ஆம் வகுப்புக்கான உறுப்பினராக அங்கம் வகிக்கும் தமிழ் ஆசிரியர் எம்.பாலகிருஷ்ணன் பங்கேற்று மாணவர்களுக்கு வழிகாட்ட உள்ளார்.இந்த இணைய கருத்தரங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இம்பாக்ட் ஐஏஎஸ் அகாடமி நடத்தும் தொடர் தேர்வு கால அட்டவணை இலவசமாக வழங்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு 9840557455 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

ஓட்டல்களில் உணவருந்த தடுப்பூசி கட்டாயம்

 


STATE BANK OF INDIA PROBATIONARY OFFICERS EXAM 2021, 2056 POST

👇👇
CLICK HERE TO DOWNLOAD SBI PO NOTIFICATION PDF