பொறியியல் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7. 5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. மேலும், இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு மாணவர்சேர்க்கைக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது பேசிய அவர், 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின்கீழ் பொறியியல் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை அரசே ஏற்கும் என அறிவித்தார்.
இந்நிலையில், அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் தொழில்நுட்ப கல்வி இயக்கம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்புகளில் சேரும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளிடம் எந்தவித கட்டணத்தையும் வசூலிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை அரசே செலுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மீறி மாணவ,மாணவிகளிடம் கட்டணம் வசூலித்தால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment