இளம் கவிஞர் விருது - கவிதைப் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
Search This Blog
Wednesday, 13 November 2024
Tuesday, 12 November 2024
TNSED SCHOOLS APP UPDATE NEW VERSION 0.2.5
*TNSED SCHOOLS APP UPDATE NEW VERSION 0.2.5*
👉STUDENT VOCATIONAL VISIT Module Changes
👉Bug Fixes & Performance Improvements
Sunday, 10 November 2024
Saturday, 9 November 2024
NMMS நேரடிப் பயிற்சி வகுப்பில் தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்
NMMS நேரடிப் பயிற்சி வகுப்பில் தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்
தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிதேர்வு இலவச பயிற்சி வகுப்பு. தென்காசி ஐ சி ஐ அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வைத்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் திரு.ரா மாரியப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது
09.11.2024 இன்று நடைபெற்ற NMMS நேரடிப் பயிற்சி வகுப்பிற்கு தென்காசி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் திருமதி. ரெஜினி அவர்கள் வருகை புரிந்து இன்றைய மாதிரித்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டி அறிவுரைகள் வழங்கினார்கள்
பயிற்சி வகுப்பில் நடைபெற்ற தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகள்
சங்கமித்ரா,
அரசு மேல்நிலைப் பள்ளி,
நெடுவயல்
பிரசாந்த்,
ரத்னா உயர் நிலைப் பள்ளி,
கடையநல்லூர்,
கனிஷ்கா,
அயன் குறும்பலாப்பேரி
ஆகியோருக்குப் பாராட்டும், பரிசும் வழங்கப்பட்டது.
கருத்தாளர்களாக
திரு நெல்சன்,
பட்டதாரி ஆசிரியர்,
ருக்குமணி உயர்நிலைப்பள்ளி,
மங்களாபுரம்,
தென்காசி மாவட்டம்
ஆசிரியர் திருமதி சுலேகா பேகம்,
பட்டதாரி ஆசிரியர்
செங்கோட்டை ஒன்றியம்
தமிழ்செல்வி,
பத்மா,
வைரக்கண்ணன்,
ஆகியோர் கலந்து கொண்டனர்.
பயிற்சி ஆனது ராமநாதாபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் பட்டதாரி ஆசிரியர் திரு மோகன் அவர்கள் ஒருங்கிணைப்பில் உருவாகி சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் உதவியுடன் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பொற்கரங்களால் வெளியிடப்பட்ட அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கணக்கு கையேடுகள் அடிப்படையில் நடைபெறுகிறது
மேலும் தேர்வுகள் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் பட்டதாரி ஆசிரியர் திரு.மோகன் மற்றும் ஆசிரியர்கள் குழு தயாரித்து மாநிலம் முழுவதும் வழங்கி வரும் வினாத்தாள்கள் அடிப்படையில் நடைபெற்று வருகிறது
தென்காசி மாவட்டம் சார்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் வகுப்பில் கலந்து கொண்டனர்.
இந்த அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி தந்த தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி . ரெஜினா அவர்களையும், பயிற்சியின் ஒருங்கிணைப்பாளராக பங்காற்றிவரும் வாசுதேவநல்லூர் ஒன்றியம் வட்டாரக்கல்வி அலுவலர் திரு.மாரியப்பன் அவர்களையும், தொடர்ந்து அறிவுரையும் ஊக்கமும் அளித்து வரும் மாவட்டக்கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களையும் பெற்றோர்கள் பாராட்டினார்கள்
பயிற்சி தொடர்ந்து சிறப்பாக நடைபெற வேண்டிய உதவிகள் செய்து வரும் தென்காசி ICI மாதிரி மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் திரு . முத்துக்குமார் அவர்களையும் பெற்றோர்கள் பாராட்டி சென்றனர்.
இந்த இலவச பயிற்சி மற்றும் மாதிரித் தேர்வுகள் தொடர்ந்து தேர்வு காலம் வரை நடைபெறும்
Tuesday, 29 October 2024
கலைத் திருவிழா மாவட்ட அளவில் நடைபெறும் தேதி குறித்து மாநில திட்ட இயக்குனர் அவர்கள் செயல்முறைகள்
கலைத் திருவிழா மாவட்ட அளவில் நடைபெறும் தேதி குறித்து மாநில திட்ட இயக்குனர் அவர்கள் செயல்முறைகள்
ஒவ்வொரு போட்டியிலும் வட்டார அளவில் முதலிடம் பெற்ற வெற்றியாளர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்
மாவட்ட அளவிலான போட்டிகளை 11.11.2024 முதல் 20.11.2024 வரை திட்டமிட்டு நடத்திடல் வேண்டும்
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்களில் முதல் மூன்று இடங்களை பெரும் மாணவர்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்திடல் வேண்டும்
மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் இடம் பெரும் ஒரு மாணவர் மட்டும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள முடியும்
வட்டார அளவில் நடத்தப்பட்ட 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான போட்டிகளில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் இடம் பெற்ற மாணவர்கள் அல்லது மாணவர்கள் குழு மட்டும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்
மாவட்ட அளவிலான போட்டிகள் அரசு பள்ளிகளுக்கு தனியாகவும் , அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு தனியாகவும் நடத்திட வேண்டும்
போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை
மாவட்ட அளவிலான போட்டிகளை திட்டமிட்டு நடத்துவது உதவித் திட்ட அலுவலரின் பொறுப்பாகும்
மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து மீண்டும் கொண்டு வந்து சேர்த்தல் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பாகும்
மாவட்ட போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பெற்றோர்களிடம் கட்டாயம் ஒப்புதல் கடிதம் பெறவேண்டும்
பெற்றோர்களிடம் இருந்து பெறப்பட்ட ஒப்புதல் கடிதங்களை முறையாக தலைமை ஆசிரியர் பராமரித்திட வேண்டும்
மாணவர்களை மாவட்ட போட்டிகளுக்கு அழைத்து செல்லும் போது ஆண் ஆசிரியர் ஒருவர் மற்றும் பெண் ஆசிரியர் ஒருவர் உடன் செல்லவேண்டும்
நடுவர்களாக பங்கு பெரும் ஆசிரியர்களின் பள்ளி மாணவர்கள் அதே போட்டியில் கலந்து கொள்ளும் போது அவர் அந்த போட்டிக்கு நடுவராக நியமிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்
மேலும் மாவட்ட அளவிலான போட்டிகள் குறித்த விவரங்கள் பெற கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை - தமிழ்நாடு அரசு.
*BREAKING:*
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்வி நிலையங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவிப்பு.
ஏற்கனவே தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை அரைநாள் விடுமுறை.
Sunday, 27 October 2024
TNSED SCHOOLS APP NEW UPDATE VERSION 0.2.3 UPDATED ON 25.10.2024
TNSED SCHOOLS APP
Version 0.2.3
What's New
Schemes Module Changes.
கீழே உள்ள லிங்க் மூலம் சென்று UPDATE செய்து கொள்ளவும்
👇👇
Saturday, 26 October 2024
NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST 11
NMMS SAT
VIII - SCIENCE
ONLINE MODEL TEST 11
இந்த தேர்வுக்கான
பாடப்பகுதிகள்
8 ஆம் வகுப்பு அறிவியல்
👇👇
1. உயிரினங்களின் ஒருங்கமைவு
👉 122 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது
👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள்
👉 அனைத்து 122 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம்
👉 இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை 9952329008 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள்
தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும்
👇👇
ONLINE EXAM வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம்
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2
👇👇
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3
👇👇
CLICK HERE TO JOIN NMMS GROUP 3Friday, 25 October 2024
TNSED PARENTS APP NEW VERSION 0.0.38 UPDATE LINK
TNSED PARENTS APP
NEW VERSION 0.0.38
UPDATE LINK
கீழே உள்ள லிங்க் மூலம் சென்று Update செய்யவும்
👇
Click hereWhat's New ?
SMC First resolution meeting for the year 2024 - 2025 changes
Wednesday, 23 October 2024
வகுப்பு 4,5 அலகு எண் 3 எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு தமிழ் வழி
வகுப்பு 4, 5
அலகு எண் 3
எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு
(தமிழ் வழி)
வகுப்பு 4 - நன்னெறி
வகுப்பு 5 - திருக்குறள்
👇👇
வகுப்பு 4, 5 அலகு எண் 3 எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு (ஆங்கில வழி)
வகுப்பு 4, 5
அலகு எண் 3
எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு
(ஆங்கில வழி)
வகுப்பு 4 - நன்னெறி
வகுப்பு 5 - திருக்குறள்
👇👇
வகுப்பு 1, 2, 3 - அலகு 3 எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு
வகுப்பு 1, 2, 3
அலகு 3
எண்ணும் எழுத்தும்
பாடக்குறிப்பு (தமிழ் மற்றும் ஆங்கில வழி)
👇👇
Saturday, 19 October 2024
தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் வட்டாரக்கல்வி அலுவலர் திரு.இரா மாரியப்பன் அவர்கள் தலைமையில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் வட்டாரக்கல்வி அலுவலர் திரு.இரா மாரியப்பன் அவர்கள் தலைமையில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
NMMS எனப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு ஆண்டுதோறும் 8 வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது
இந்த தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு 48000 ரூபாய் மாணவர்களின் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்படும்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் வட்டாரக்கல்வி அலுவலராக பணியாற்றிவரும் திரு . இரா . மாரியப்பன் அவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேல் ஒவ்வொரு ஆண்டும் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து மாணவர்களுக்கு NMMS தேர்வுக்கான பயிற்சியை இலவசமாக நடத்தி வருகிறார்.
மேலும் பயிற்சிக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் ஒவ்வொரு வாரமும் மாதிரித் தேர்வும் நடத்தி வருகிறார். தேர்வில் கலந்து கொள்ள இயலாத மாணவர்களுக்கு வாட்ஸ் அப் குழுவில் தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைகள் அனுப்பி அவர்களை தேர்வு எழுத உதவி வருகிறார்
இந்த பயிற்சியானது தென்காசி அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெறுகிறது. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தலைமையில் மாணவர்கள் அழைத்து வரப்பட்டு பாதுகாப்பான முறையில் பயிற்சி நடைபெற்று வருகிறது
தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் தொடர்ந்து பயிற்சிக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார்கள்
தென்காசி மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களில் இருந்தும் மாணவர்கள் இங்கு வந்து பயிற்சி பெற்று செல்கின்றனர்
இன்று 19.10.24 தென்காசி ஐ சி ஐ அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வைத்து வட்டாரக் கல்வி அலுவலர் திரு.ரா மாரியப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் நடைபெற்ற NMMS மாதிரித் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகள் சங்கமித்ரா, பாலமித்ரன், மாலினி தானுஸ்ரீ ஆகியோருக்குப் பாராட்டும்,பரிசும் வழங்கப்பட்டது.
கருத்தாளர்களாக தென்காசி மாவட்டம் மங்கலாபுரம் ருக்குமணி அம்மாள் உயர்நிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் திரு. நெல்சன், தென்காசி மாவட்டம் , செங்கோட்டை ஒன்றியம் தெற்குமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் திருமதி.சுலேகாள் பேகம் ஆகியோர் கலந்து கொண்டு கணிதம் மற்றும் MAT பாடப்பகுதியில் வகுப்புகள் நடத்தினர்.
தென்காசி மாவட்டம் சார்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் 150 பேருக்கும் மேல் வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளித்து மாண்புமிகு முதல்வர் உத்தரவு பிறப்பிப்பு
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1 ஆம் தேதி (தீபாவளிக்கு மறுதினம்) அரசு விடுமுறை அளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்
அனைத்து அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அனைத்து வகையான பள்ளிகள், கல்லூரிகள், போன்றவற்றுக்கு இந்த விடுமுறை விடப்பட்டுள்ளது
தீபாவளி வியாழன் வருவதால் அதற்கு மறுதினம் விடுமுறை அளிக்கப்பட்டால் தொடர்ந்து நான்கு தினங்கள் விடுமுறை கிடைக்கும் . வெளி மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறையில் தங்கள் ஊர்களுக்கு வந்த செல்ல வசதியாக இருக்கும் என பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் அரசிடம் கோரிக்கை வைத்தன
அதனை ஏற்ற தமிழ்நாடு முதலமைச்சர் தீபாவளிக்கு மறுதினம் அரசு விடுமுறையாக இன்று அறிவித்து உள்ளார்கள்
மேலும் விடுமுறை விடப்பட்ட நாளுக்கு ஈடு செய்ய 09.11.2024 அன்று பணி நாளாக அறிவித்து முதலமைச்சர் உத்தரவு
இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது