NMMS நேரடிப் பயிற்சி வகுப்பில் தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்
தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிதேர்வு இலவச பயிற்சி வகுப்பு. தென்காசி ஐ சி ஐ அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வைத்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் திரு.ரா மாரியப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது
09.11.2024 இன்று நடைபெற்ற NMMS நேரடிப் பயிற்சி வகுப்பிற்கு தென்காசி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் திருமதி. ரெஜினி அவர்கள் வருகை புரிந்து இன்றைய மாதிரித்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டி அறிவுரைகள் வழங்கினார்கள்
பயிற்சி வகுப்பில் நடைபெற்ற தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகள்
சங்கமித்ரா,
அரசு மேல்நிலைப் பள்ளி,
நெடுவயல்
பிரசாந்த்,
ரத்னா உயர் நிலைப் பள்ளி,
கடையநல்லூர்,
கனிஷ்கா,
அயன் குறும்பலாப்பேரி
ஆகியோருக்குப் பாராட்டும், பரிசும் வழங்கப்பட்டது.
கருத்தாளர்களாக
திரு நெல்சன்,
பட்டதாரி ஆசிரியர்,
ருக்குமணி உயர்நிலைப்பள்ளி,
மங்களாபுரம்,
தென்காசி மாவட்டம்
ஆசிரியர் திருமதி சுலேகா பேகம்,
பட்டதாரி ஆசிரியர்
செங்கோட்டை ஒன்றியம்
தமிழ்செல்வி,
பத்மா,
வைரக்கண்ணன்,
ஆகியோர் கலந்து கொண்டனர்.
பயிற்சி ஆனது ராமநாதாபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் பட்டதாரி ஆசிரியர் திரு மோகன் அவர்கள் ஒருங்கிணைப்பில் உருவாகி சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் உதவியுடன் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பொற்கரங்களால் வெளியிடப்பட்ட அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கணக்கு கையேடுகள் அடிப்படையில் நடைபெறுகிறது
மேலும் தேர்வுகள் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் பட்டதாரி ஆசிரியர் திரு.மோகன் மற்றும் ஆசிரியர்கள் குழு தயாரித்து மாநிலம் முழுவதும் வழங்கி வரும் வினாத்தாள்கள் அடிப்படையில் நடைபெற்று வருகிறது
தென்காசி மாவட்டம் சார்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் வகுப்பில் கலந்து கொண்டனர்.
இந்த அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி தந்த தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி . ரெஜினா அவர்களையும், பயிற்சியின் ஒருங்கிணைப்பாளராக பங்காற்றிவரும் வாசுதேவநல்லூர் ஒன்றியம் வட்டாரக்கல்வி அலுவலர் திரு.மாரியப்பன் அவர்களையும், தொடர்ந்து அறிவுரையும் ஊக்கமும் அளித்து வரும் மாவட்டக்கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களையும் பெற்றோர்கள் பாராட்டினார்கள்
பயிற்சி தொடர்ந்து சிறப்பாக நடைபெற வேண்டிய உதவிகள் செய்து வரும் தென்காசி ICI மாதிரி மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் திரு . முத்துக்குமார் அவர்களையும் பெற்றோர்கள் பாராட்டி சென்றனர்.
இந்த இலவச பயிற்சி மற்றும் மாதிரித் தேர்வுகள் தொடர்ந்து தேர்வு காலம் வரை நடைபெறும்
No comments:
Post a Comment