Search This Blog

Tuesday, 21 November 2023

இன்று நவம்பர் 21 - உலகத் தொலைக்காட்சி நாள் World Television Day தொலைக்காட்சி பெட்டி கடந்துவந்த பாதை முழுவிபரம்




நன்றி:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்


நவம்பர் 21 - உலகத் தொலைக்காட்சி நாள் *

*World Television Day*

                                                                                                                          1936-ல் கருப்பு வெள்ளை ஒளிபரப்பு



தொலைக்காட்சி புரட்சிக்கு 1925-ல் வித்திட்டவர் இங்கிலாந்து நாட்டின் ஜான்லோகி பெயர்டு என்ற அறிவியலாளர். 



27.01.1926-ல் தான் கண்டறிந்த கருவியைபுகழ்பெற்ற அறிவியல் அறிஞர்கள் மத்தியில் இயக்கிக் காட்டினார்.

                                                                                                                                                                                        அவரைத் தொடர்ந்து அறிஞர்கள் பலரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டதன் விளைவாக, 1936-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் தொலைக்காட்சியில் கருப்பு வெள்ளை ஒளிபரப்பு நடைமுறைக்கு வந்தது.

                                                                                                                                                                                     'Television' என்பதற்கு தமிழில் பட ரேடியோ, வானொளி என்று பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், இச்சொல் தொலைவில் உள்ளதை காண்பது என்ற பொருள் தந்ததால், தொலைக்காட்சி என்பதே நிலைபெற்றது.

                                                                                                                                                                                        நவீன தொலைக்காட்சி பெட்டிகள்

உலக நிகழ்வுகளை வீடுகளுக்குள் கொண்டு வந்து காட்சிப்படுத்திய, தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பானது ஆன்டெனாவில் தொடங்கி,  தற்போது டிஷ், கேபிள், இணையம் என பல்வகை ஊடகங்களில் நிலைபெற்று விட்டது.

                                                                                                                                                                                அறிவியல், தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப நெகிழ்வுதன்மையுடன் காணப்படுவதால், ஒளிபரப்பு பல்வகை ஊடகங்களுக்குள் ஊடுருவி நிலை நிறுத்திக்கொண்டுள்ளது. 



சிறிய பெட்டி வடிவில் கருப்பு வெள்ளை திரையுடன் தயாரிக்கப்பட்டு, பின்னர் பெரிய அளவிலும், வண்ணத்திரையுடனும் தயாரிக்கப்பட்டுது.



20 ஆண்டுகளுக்கு மேலாக காட்சியளித்த தொலைக்காட்சிகள், 2010-க்கு பிறகு எல்இடி,எல்சிடி என அதிநவீன தொழில்நுட்பத்தில் சிறியது முதல் பெரிய திரைகளுடன் தயாரிக்கப்பட்டு, வீடுகளை அலங்கரித்து வருகின்றன.

                                                                                                                                                                                  பிரம்மாண்ட திரைகள்

திரையரங்கத்தின் திரையைப் போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும், பிரம்மாண்ட திரை கொண்ட தொலைக்காட்சிகளும் தற்போது தயாரிக்கப்படுகின்றன. 



அதேநேரத்தில் ஆரம்ப காலத்தில் பயன்படுத்தி வந்த பெட்டியைப் போன்ற தொலைக்காட்சி பெட்டிகளில் பெரும்பாலும் விடைபெற்று விட்டன.

                                                                                                                                                                                                24 X 7 செய்திச் சேனல்கள்

தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் வருகைக்குப் பிறகான காலக்கட்டத்தில் ஏற்பட்ட போட்டியானது நிகழ்ச்சிகளையும், செய்திகளையும் மக்களுக்கு அதிகளவில் கொண்டு சேர்க்கத் தொடங்கின. 




நாள்தோறும் சில மணி நேரங்கள் மட்டுமே அளிக்கப்பட்ட ஒளிபரப்பானது, 



பின்னாளில் 24 X 7 என்ற 24 மணி நேரமாக மாறி நிற்கிறது. 24 மணி நேர செய்தி தொலைக்காட்சிகள் பெருகி விட்டன.

                                                                                                                                                                            இணையத்தில் தொலைக்காட்சி

நவீன தகவல் தொடர்புச் சாதனங்களில் இணையம் இன்றியமையாததாகி விட்டது. அனைத்து தகவல் தொடர்புச் சாதனங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது இணையம். 



பொதுமக்கள் தொலைக்காட்சி பெட்டிகளில் பல்வேறு சேனல்களைப் பார்த்து வரும் வேளையில், இணையம் என்ற ஊடகத்தின் வழியாகவும் பல்வேறு சேனல்களை காணும் வாய்ப்பை இன்று நாம் பெற்றுள்ளோம்.

                                                                                                                                                                                      இணைய பயன்பாட்டை ஏற்றுக்கொள்ளும் கணினி, ஆண்ட்ராய்டு செல்போன், டேப்லாய்டு போன்ற மின்னணு சாதனங்கள் மூலமாக தொலைக்காட்சிகளைக் கண்டுகளிக்க முடியும். 



அதேநேரத்தில் வீடியோ பதிவுகளை, பல டாட்.காம் மூலமாக பதிவேற்றம் செய்து, ‘வெப். டி.வி.’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் இணையத்தில் உலவவிடப்படுகின்றன. 




இதை தொலைக்காட்சியாக அங்கீகரிக்கலாமா என்பதை காட்சித் தொடர்பியல், தகவல் தொடர்பியல் ஆய்வாளர்கள்தான் நிரூபிக்க வேண்டும்.

                                                                                                                                                                                      தொலைக்காட்சி வரலாற்று தகவல்கள்

1. 1976 ஜனவரி 1 - வானொலியில் இருந்து தொலைக்காட்சி பிரிந்து, தனித் தகவல் தொடர்பு சாதனமானது.



2. 1977 ஆகஸ்ட் 17 - தொலைக்காட்சிக்கு தன்னாட்சி அந்தஸ்து கொடுப்பதற்கான வாய்ப்புகளை ஆராய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 1978-ல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.



3. 1981 நவம்பர் 17 - சோதனை முறையிலான வண்ண ஒளிபரப்பு தொடங்கி, இன்சாட்-1 ஏ செயற்கைக்கோள் வண்ண ஒளிபரப்பைத் தொடங்கியது. அதே ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி இச்செயற்கைக்கோள் செயலிழந்தது.



4. 1983 மார்ச் - தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தரத்தை உயர்த்துவதற்கு குழு ஏற்படுத்தப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் மாதம் இன்சாட் 1-பி செயற்கைக்கோள் மூலம் நிகழ்ச்சிகள் அதிக நேரம் ஒளிபரப்பப்பட்டன.



5. 1984 ஏப்ரல் 2 - பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதியுதவியுடன் தினமும் முற்பகல் 1 மணி நேரமும், பிற்பகல் 1 மணி நேரமும் கல்வி ஒளிபரப்பு தொடங்கியது.



6. 1988 ஜூலை 6 - சென்னை தொலைக்காட்சியின் 2-வது அலைவரிசை அறிமுகப்படுத்தப்பட்டது.



7. 1989 பிப்ரவரி 6 - தூர்தர்ஷன் மத்திய நிகழ்ச்சி தயாரிப்பு மையம் டெல்லியில் உள்ள ஆசிய விளையாட்டு அரங்கில் நிறுவப்பட்டது.



8. 1990 செப்டம்பர் 6 - தொலைக்காட்சிக்கும் வானொலிக்கும் தன்னாட்சி அந்தஸ்து வழங்க வகை செய்யும் ‘பிரச்சார் பாரதி’ மசோதா மக்களவையில் நிறைவேறியது.



9.1996-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி நடைபெற்ற அனைத்துலகத் தொலைக்காட்சிக் கருத்தரங்கின் பரிந்துரையின்படி, ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21-ம் தேதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது.

                                                                                                                                                                                              நாடு முழுவதும் ஒளிபரப்பான நிகழ்ச்சி

இந்திய அரசு திட்டமிட்டவாறு தொலைக்காட்சியில் சிறுவர் கல்வி, உடல் நலம், தாய்சேய் நலம் தொடர்பான நிகழ்ச்சிகள் 'சைட்' செயற்கைக்கோள் மூலம் ஒளிபரப்பப்பட்டன. 



காலை 10 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 6.30 மணி முதல் 8.50 மணி வரையிலும் ஒளிபரப்பு நேரம் அதிகரிக்கப்பட்டது. 



இவற்றில் 40 நிமிடம் கன்னடம் அல்லது தெலுங்கு நிகழ்ச்சிகளும், 20 நிமிடங்கள் இந்தி நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பட்டன. 



1975-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய நிகழ்வும், 1976-ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியும் நாடுமுழுவதும் ஒளிபரப்பப்பட்டது.

                                                                                                                                                                                இந்தியாவில் தோற்றம் - வளர்ச்சி

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உதவியுடனும், யுனெஸ்கோவின் ஆதரவுடனும் இந்தியாவில் முதல் முறையாக 1959-ம் ஆண்டு அக்டோபர் 15-ம்நாள், இந்திய அரசு டெல்லியில் தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கியது.

                                                                                                                                                                                  தொடக்க காலத்தில் வாரம் இரு நாட்களும், பின்னர் நாள்தோறும் 20 நிமிடங்களும் என 40 கி.மீ. சுற்றளவில் மட்டுமே தெரியும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. 



முதலில்சமுதாய மேம்பாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய இந்திய அரசு, அதன் பின்னர் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்க முடிவு செய்தது.

                                                                                                                                                                                      மக்கள் ஆதரவு பெருகவே தொலைக்காட்சி பெட்டிக்கான உதிரி பாகங்களைதயாரிப்பதற்கு, 1965-ல் இந்திய அரசு உற்பத்தியாளர்களுக்கு அனுமதியளித்தது. 



இது இந்திய தொலைக்காட்சியின் வளர்ச்சியில் ஓர் மைல்கல்லாகஅமைந்தது. 



1967 ஜனவரி மாதம்விவசாய நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர் நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது.

                                                                                                                                                                                                                                                                                                        நிகழ்ச்சிகளைத் தடையின்றி பார்க்கும் வகையில் ஒளிபரப்பின் ஆற்றல்அதிகரிக்கப்பட்டது. 



1970-ல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு 3 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டது.




குறுகிய காலத்தில் வேகமாக வளர்ச்சி கண்ட தொலைக்காட்சி ஒளிபரப்பானது, 1972-ல் மும்பையிலும், 1975-ல் கொல்கத்தா மற்றும் சென்னையிலும் விரிவுபடுத்தப்பட்டது.

                                                                                                                                                                                                                                                     

1975-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் தொலைக்காட்சி பெட்டிகள் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது. 




அகில இந்திய வானொலி நிலையத்துடன் இணைந்து செயல்பட்ட தொலைக்காட்சி ஒளிபரப்பு 1976 ஜனவரியில், தூர்தர்ஷன் என்ற தனித்த அடையாளத்துடன் இயங்கத் தொடங்கியது.

                                                                                                                                                                                            1980-ல் இந்தியாவில் 9.5 லட்சம் தொலைக்காட்சி பெட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் வேளைகளில், தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சலுகை விலையிலும், தவணைத் திட்டங்களிலும் விற்க ஆரம்பித்ததன் விளைவு, தொலைக்காட்சி பெட்டிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது.                  



தொலைக்காட்சி வர்த்தகத்தில் கிரிக்கெட் போட்டி ஏற்படுத்திய தாக்கம் மிகவும் அதிகம்.

                                                                                                                                                                                                                                                                                                                              செயற்கைக்கோள் வழி ஒளிபரப்பு

செயற்கைக்கோள் வழி தொலைக்காட்சி ஒளிபரப்பு திட்டம், இந்தியாவில் தொலைக்காட்சியின் வளர்ச்சியில் அடுத்தகட்ட நகர்வாக இருந்தது. 



யுனெஸ்கோ குழு, துணைக்கோள்களின் வழி ஏற்படும் தகவல் தொடர்பு வளர்ச்சியால் இந்தியாவின் கிராமங்கள் வளர்ச்சி அடையும் என்று கருதியது.

                                                                                                                                                                                        அதன் அடிப்படையில் இந்திய அரசின் அணு ஆற்றல் துறை, அமெரிக்க தேசிய வான்வழி மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி, 1975 ஆகஸ்ட் மாதம் ஏடிஎஸ்-6 என்ற துணைக்கோள் ஆப்பிரிக்காவின் தென்கோடி முனைக்கு மேல் நிலைநிறுத்தப்பட்டது.

                                                                                                                                                                                            இது மகாராஷ்டிர மாநில நிலையத்தில் இருந்து ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளை கர்நாடகா, ஆந்திரா, மத்தியபிரதேசம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைத்ததில், சுமார் 2,500 கிராமங்கள் பயனடைந்தன.

                                                                                                                                                                                                            

கூடுதல் செயற்கைக்கோள்கள்

தொலைக்காட்சி நிலையங்களால் 80 கி.மீ. வரை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடியும் என்பதால், இந்தியாவில் உள்ள 5.6 லட்சம் கிராமங்கள் பயன்பெற அதிக செலவில் ஒளிபரப்பு நிலையங்கள் அமைக்க வேண்டியிருந்தது. இதனால் 1982-ல் இன்சாட்-1 ஏ செயற்கைக்கோளை இந்தியா செலுத்தியது. அதைத்தொடர்ந்து பல்வேறு செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வருகின்றன.

Monday, 20 November 2023

75000-க்கும் அதிகமான காவல்துறை சார்ந்த பணியிடங்கள் staff selection commission அறிவிப்பு

 



பணியிடங்கள் விவரம் 


1. Constable in Border Security Force (BSF)

2. Central Industrial Security Force (CISF)

3. Central Reserve Police Force ((CRPF)

4. Indo Tibetan Border Police (ITBP)

5. Sashastra Seema Bal (SSB)

6. Secretariat Security Force  (SSF)

7. Rifleman in Assam Rifles (AR)

8. Sepoy in NIA (National Investigation Agency)

போன்ற பணிக்கான பணியிடங்களை SSC அறிவித்துள்ளது 


இந்த தேர்வானது கீழே உள்ள படிநிலைகளைக் கொண்டது 


1. Computer Based Examination

2. Physical Efficiency Test

3. Physical Standard Test

4. Medical Examination 

5. Document Verification


VACANCIES LIST 


BSF VACANCIES

MALE - 24806

FEMALE - 3069


CISF VACANCIES

MALE - 7877

FEMALE - 721


CRPF VACANCIES

MALE - 22196

FEMALE - 3231


SSB VACANCIES

MALE - 4839

FEMALE - 439


ITBP VACANCIES

MALE - 2564

FEMALE - 442


AR VACANCIES

MALE - 4624

FEMALE - 152


SSF VACANCIES

MALE - 458

FEMALE - 125


NIA VACANCIES

TOTAL - 225


மொத்த பணியிடங்கள் 75768


IMPORTANT DATES 


Dates for submission of online application - 24.11.2023-28.12.2023

Last date and time for receipt of online application 28.12.2023 (23:00)

Last date and time for generation of offline challan 28.12.2023 (23:00)

Last date and time for making online fee payment 29.12.2023 (23:00)

Last date for payment through challan 29.12.2023

Schedule of Computer Based Examination - February, 2023




மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


















































































Sunday, 19 November 2023

NMMS EXAM SOCIAL SCIENCE LINE BY LINE ONE WORD QUESTION AND ANSWER "மொகலாயப் பேரரசு" மற்றும் "விஜயநகரம் மற்றும் பாமினிப் பேரரசு"



NMMS EXAM 

SOCIAL SCIENCE 

LINE BY LINE ONE WORD QUESTION AND ANSWER 

"மொகலாயப் பேரரசு" 

👇👇

CLICK HERE



NMMS EXAM 

SOCIAL SCIENCE 

LINE BY LINE ONE WORD QUESTION AND ANSWER

விஜயநகரம் மற்றும் பாமினிப் பேரரசு

👇👇

CLICK HERE


தொடர்ந்து இதுபோல் வீடியோ, குறிப்புகள், வினா விடை பெற வாட்ஸஅப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 


NMMS GROUP 1 LINK

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP


*FORWARD YOUR STUDENTS*

Friday, 17 November 2023

NMMS சமூக அறிவியல் மாதிரி தேர்வு 10 முதல் 18 வரையிலான வினாத்தாள் ஆசிரியர்கள் அப்படியே பிரிண்ட் எடுத்து தேர்வு நடத்தலாம்

 

அன்புள்ளம் கொண்ட ஆசிரியர்களே/மாணவர்களே 

8 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதும் NMMS தேர்வுக்கு தேவையான பல வினா விடை தொகுப்புகள், குறிப்புகள், வலைதள தேர்வு, யூ டியூப் லிங்க் போன்றவற்றை நமது ramanibabu.blogspot.com வலைத்தளம் மூலம் செய்து வருகிறோம் 


அந்த வகையில் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பகுதியில் இருந்து மாதிரி வினாத்தாள்கள் பாட வாரியாக உருவாக்கப்பட்டு 1 முதல் 9 பாடங்களுக்கான தேர்வு வினாத்தாள்களை இதே வலை தளம் மூலம் வெளியிட்டுள்ளோம் 


தற்போது 10 முதல் 17 வரையிலான பாடங்களுக்கான வினாத்தாள்கள் வெளியிட்டுள்ளோம் 


இந்த வினாத்தாள்கள் அனைத்தும் ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் வரி வரியாக தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே இது மாணவர்களுக்கு முழுப்பாடத்தையும் படித்து தெரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும் 


ஆசிரியர்கள் பாட வாரியாக தேர்வு நடத்துவதற்கு இந்த வினாத்தாள்கள் மிக மிக உதவியாக இருக்கும் 


வரக்கூடிய தினங்களில் 7 மற்றும் 8 வகுப்புகளுக்கான அனைத்து பாடங்களும், பாட வாரியாக வினாத்தாள்கள் வெளியிடப்படும் 


இந்த  ramanibabu.blogspot.com வலைத்தளத்தை உங்கள் இ.மெயில் முகவரி உதவியுடன் follow செய்து கொள்ளுங்கள். அப்போது தான் நாங்கள் வெளியிடும் அனைத்து புதிய செய்திகளும் உங்களை உடனடியாக வந்து சேரும் 


கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் குழுவிலும் இணைந்து நீங்கள் புதிய செய்திகளை பெறலாம் 


NMMS WHATS APP குழு 

👇👇

CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP




NMMS தேர்வு 10

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



NMMS தேர்வு 11

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




NMMS தேர்வு 12

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

புவியின் உள்ளமைப்பு  

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




NMMS தேர்வு 13

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

நிலத்தோற்றங்கள்   

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




NMMS தேர்வு 14

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

சமத்துவம் மற்றும் அரசியல் கட்சிகள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




NMMS தேர்வு 15

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

 மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 16

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

 உற்பத்தி 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




NMMS தேர்வு 17

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

வளங்கள் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




NMMS தேர்வு 18

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

சுற்றுலா 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



சமூக அறிவியல் தேர்வு 1 முதல் 9 வரையிலான வினாத்தாள் பெறுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO VISIT AND DOWNLOAD








தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர்களுக்கு 30 நாள்கள் பயிற்சி தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

 






































Thursday, 16 November 2023

பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு (10, 11, 12) தேர்வு குறித்த தேதிகள் முழு விவரம்


பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு (10, 11, 12) தேர்வு குறித்த தேதிகள் முழு விவரம்


செய்முறைத் தேர்வு தேதிகள்


10ம் வகுப்பு பிப்ரவரி 23 - 29 வரை 


11ம் வகுப்பு பிப்ரவரி 19 - 24 வரை


12ம் வகுப்பு பிப்ரவரி 12 - 17 வரை




10,11, 12ம் வகுப்புகள் பொதுத் தேர்வு தேதிகள்


10ம் வகுப்பு மார்ச் 26 - ஏப்ரல் 08 வரை


11ம் வகுப்பு  மார்ச் 04 - 24 வரை


12ம் வகுப்பு மார்ச் 01 - மார்ச் 22 வரை



10, 11, 12ம் வகுப்புகள் தேர்வு முடிவுகள்


10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10


11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 14


12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6












Wednesday, 15 November 2023

TRB - கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு



TRB - கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.


பள்ளிக் கல்வி இயக்கத்திற்கு 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் 2222 பட்டதாரி ஆசிரியர் / வட்டாரவள மைய பயிற்றுநர் தெரிவிற்கான அறிவிக்கை 03 / 2023 நாள் : 25.10.2023 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.


இதனை தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்ககம் , தொடக்ககல்வி இயக்ககம் மற்றும் இணையதளத்தில் சென்னை மாநகராட்சி ஆகியவற்றில் நிரப்பப்படவேண்டிய 360 பணியிடங்களுக்கான  கூடுதல் காலிப்பணியிட விவரங்கள் வெளியிடப்படுகிறது.


மேலும் விவரம் அறிய


CLICK HERE


TNSED SCHOOL APP NEW UPDATE VERSION 0.0.91 DIRECT LINK FOR UPDATE

 


TNSED SCHOOL APP NEW UPDATE VERSION 0.0.91 DIRECT LINK FOR UPDATE


UPDATED ON 14-11-2023


WHAT'S NEW?


COUNSELING TRACKING MODULE ADDED


OOSC & ENNUM EZHUTHUM MODULE   CHANGES





BUG FIXES & PERFORMANCE IMPROVEMENTS


👇🏾


CLICK HERE TO UPDATE


NMMS EXAM ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் டெல்லி சுல்தானியம் வினா விடை

 

*NMMS EXAM*

*7 ஆம் வகுப்பு*

*சமூக அறிவியல்*

*டெல்லி சுல்தானியம்*

👇

CLICK HERE TO WATCH

இல்லம் தேடி கல்வி ITK APP NEW UPDATE-0.68- Date 15.11.23



ITK Books material PDF & Resource material latest video added. Attendance module changes.


 App Update Direct Link

👇🏾

CLICK HERE



Tuesday, 14 November 2023

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா - 2023-24 - மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும் மாவட்டங்கள் தெரிவித்தல்- நிதி விடுவித்தல் - சார்ந்து

அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா 2023-24 போட்டிகள் கடந்த மாதத்தில் பள்ளி அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில் என நடந்தன 


பள்ளி அளவில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் இடம் பிடித்த தனிநபர்/குழு வட்டார அளவில் நடந்த போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்


வட்டார அளவில் நடந்த போட்டிகளில் இரு இடங்களை பிடித்த தனிநபர்/குழு மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு அழைக்கப்பட்டனர் 


போட்டியில் வெற்றி பெற்ற தனிநபர்/குழு EMIS இணையத்தில் பதிவு செய்யப்பட்டனர் 


 EMIS இணையத்தில் பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே அடுத்த நிலைக்கு அனுமதிக்கப்பட்டனர் 


தற்போது அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான போட்டிகள் முடிவடைந்த நிலையில் மாநில அளவிலான போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன 


மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான முன்னேற்பாடு செலவினங்களும் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது 


மாவட்ட போட்டிகளில் முதல் இடத்தில் வெற்றி பெற்ற பள்ளிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தயார் நிலையில் மாணவர்களை தயார் செய்யவும் 


மாநில அளவில் போட்டி நடைபெறும் தினங்கள் 

21.11.23

22.11.23

23.11.23

24.11.23


மாநில அளவிலான போட்டி நடைபெறும் இடங்கள் 


6 முதல் 8 வரையிலான வகுப்புகள் 

வேலூர் மாவட்டம் 


9 முதல் 10 வரையிலான வகுப்புகள் 

செங்கல்பட்டு மாவட்டம் 


11 முதல் 12 வரையிலான வகுப்புகள் 

திருச்சிராப்பள்ளி மாவட்டம் 



மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும் மாவட்டங்கள் தெரிவித்தல்- நிதி விடுவித்தல் - சார்ந்து


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குனரின் ஆணை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

CPS ACCOUNT STATEMENT (2022-2023) வெளியீடு



பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அவர்களது ஊதியத்தில் 10 சதவீதம் அரசால் பிடித்தம் செய்யப்படும் 


இந்த பணம் பிடித்தம் செய்யப்பட்டதற்கான ரசீது ஆண்டுக்கு ஒரு முறை GOVERNMENT DATA CENTRE மூலம் வெளியிடப்படும் 


இதில் அரசு ஊழியர்கள்/ஆசிரியர்கள் தங்கள் சம்பளப் பணத்தில் ஆண்டு தோறும் பிடித்தம் செய்யப்பட்டுள்ள தொகை, பிடித்தம் செய்யாமல் விடுபட்டுள்ள தொகை போன்றவற்றை தெரிந்துகொள்ள முடியும் 


ஏதேனும் மாதத்தில் CPS தொகை பிடித்தம் செய்யாமல் விடுபட்டு இருந்தாலோ அல்லது பிடித்தம் செய்யப்பட்டு ACCOUNT SLIP-ல் விடுபட்டு இருந்தாலோ குறிப்பிட்ட ஆசிரியர்கள்/அரசு ஊழியர்கள் தங்களுக்கு சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களை அணுக வேண்டும் 


கடந்த ஆண்டுக்கான (2022-2023) CPS பிடித்தம் செய்யப்பட்டதற்கான ACCOUNT SLIP தற்போது வெளியிடப்பட்டுள்ளது ஆசிரியர்கள் தங்களது CPS எண் மற்றும் தங்கள் பிறந்த தினம் அளித்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் 



CPS ACCOUNT SLIP பதிவிறக்கம் செய்ய 

👇👇

இங்கே அழுத்தவும்

Wednesday, 8 November 2023

1000 ரூபாய் உதவித்தொகை "தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு" (TRUST EXAM) 9 ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க அரசுத் தேர்வுகள் இயக்குனர் உத்தரவு


👉 ஊரகத் திறனாய்வுத் தேர்வு கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுண்சிப் பகுதியில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுதலாம் 


👉 நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இத்தேர்வு எழுத முடியாது 


👉 இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் 


👉 இத்தேர்வுக்கு மாணவர்கள் ரூபாய் 10 மட்டும் தேர்வுக்கட்டணமாக கட்டவேண்டும் 


👉 விண்ணப்பங்களை 14.11.2023 முதல் 24.11.2023 வரை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யலாம் 


👉 இத்தேர்வானது 16.12.2023 அன்று நடைபெறுகிறது 


👉 மாணவர்கள் நிரப்பி தரும் விண்ணப்பத்துடன் வருமான சான்றிதழையும் 24.11.2023க்குள் தலைமை ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் 


👉 17.11.2023 முதல் 28.11.2023 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் 


👉 ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் 100 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு (50 மாணவியர்+50 மாணவர்கள்) அவர்களுக்கு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டு தோறும் ரூபாய் 1000 வழங்கப்படும் 



விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை CLICK செய்யவும் 

👇👇

CLICK HERE



அரசுத் தேர்வுகள் இயக்குனர் கடிதம் பெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE



























Tuesday, 7 November 2023

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்களுடைய குறைகளை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

 



ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் காணொளிக்கான Link

👇

CLICK HERE



அலுவலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் காணொளி Link

👇

CLICK HERE

NEET மற்றும் JEE தேர்வுகளுக்கான பழைய வினாத்தாள் தொகுப்பு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பள்ளிக் கல்வித்துறை வலைதளத்தில் வெளியீடு

 


Please find the link for the previous year JEE, NEET questions (available in both English and Tamil) for your reference. 


This is a wonderful work done by the school education department. 



Please make use of it. 



Kindly forward it to your schools concerned. 


👇

CLICK HERE