Search This Blog
Tuesday, 7 November 2023
தமிழ்நாடு அரசு "சிறந்த பள்ளி" கேடயம் பெறும் பள்ளிகள் விவரம் மாவட்டப் பட்டியல் வெளியீடு
ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு மாநில அளவில் சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் வழங்கி வருகிறது
இந்த ஆண்டுக்கான சிறந்த பள்ளி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது
தென்காசி மாவட்டத்தில்
தென்காசியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி (7வது வார்டு),
செங்கோட்டையில் உள்ள கச்சேரிகாம்பவுண்டு அரசு நடுநிலைப்பள்ளி
மற்றும்
கீழப்பாவூர் ஒன்றியத்தில் உள்ள வெள்ளகால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
ஆகிய மூன்று பள்ளிகளும் தேர்வு பெற்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக அரசின் கேடயம் பெறுகிறது
இதற்கான விழா 14.11.2023 அன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகிறது
விழாவில் விருது பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர் ஒருவர், வட்டாரக் கல்வி அலுவலர் ஆகிய மூவரும் கலந்து கொண்டு கேடயம் பெறுகிறார்கள்
Monday, 6 November 2023
தீபாவளி முன்னிட்டு 13.11.2023 அன்று விடுமுறை - 18.11.2023 அன்று வேலை நாள்
தீபாவளிக்கு மறுநாளான 13ம் தேதி பொதுவிடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
👇👇
10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - 7 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு
பணியிட மாறுதல் பெற்றுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள்
1. இரா.முருகன்
முதன்மைக்கல்வி அலுவலர்
கன்னியாகுமரி
மாறுதல் பெற்றுள்ள இடம்மற்றும் பதவி
முதன்மைக்கல்வி அலுவலர்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
2. கோ.கிருஷ்ணப்பிரியா
முதன்மைக்கல்வி அலுவலர்
கள்ளக்குறிச்சி
மாறுதல் பெற்றுள்ள இடம்
முதன்மைக்கல்வி அலுவலர்
திருச்சி
3. மு.சிவக்குமார்
முதன்மைக்கல்வி அலுவலர்
திருச்சி
மாறுதல் பெற்றுள்ள இடம் மற்றும் பதவி
துணை இயக்குனர் (சட்டம்)
தொடக்கக்கல்வி இயக்ககம்
சென்னை-6
4. கே.குணசேகரன்
முதன்மைக்கல்வி அலுவலர்
தருமபுரி
மாறுதல் பெற்றுள்ள இடம் மற்றும் பதவி
துணை இயக்குனர் (மின் ஆளுமை)
பள்ளிக்கல்வி இயக்ககம்
சென்னை-6
5. ஜே.ஏ. குழந்தை ராஜன்
முதன்மைக்கல்வி அலுவலர்
ஈரோடு
மாறுதல் பெற்றுள்ள பதவி மற்றும் இடம்
துணை இயக்குனர்
ஆசிரியர் தேர்வு வாரியம்
சென்னை-6
6. த.இராமன்
முதன்மைக்கல்வி அலுவலர்
விருதுநகர்
மாறுதல் பெற்றுள்ள பதவி மற்றும் இடம்
துணை இயக்குனர்
ஆசிரியர் தேர்வு வாரியம்
சென்னை-6
7. ஜி.சரஸ்வதி
முதன்மைக்கல்வி அலுவலர்
திருவள்ளூர்
மாறுதல் பெற்றுள்ள இடம் மற்றும் பதவி
துணை இயக்குனர்
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
சென்னை-6
8. கே. பாலதண்டாயுதபாணி
நிர்வாக அதிகாரி
தஞ்சாவூர் சரபோஜி நூலகம் மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தஞ்சாவூர்
மாறுதல் பெற்றுள்ள இடம் மற்றும் பதவி
முதன்மைக்கல்வி அலுவலர்
கன்னியாகுமரி
9. டி. சம்பத்
துணை இயக்குனர்,
தனியார் பள்ளிகள் இயக்கம்
சென்னை-6
மாறுதல் பெற்றுள்ள பதவி மற்றும் இடம்
முதன்மைக்கல்வி அலுவலர்
ஈரோடு
10. அ. சின்ன ராஜு
முதன்மைக்கல்வி அலுவலர்
திருநெல்வேலி
மாறுதல் பெற்றுள்ள இடம் மற்றும் பதவி
துணை இயக்குனர்
தனியார் பள்ளிகள் இயக்கம்
சென்னை-6
தற்காலிக பதவி உயர்வு பெற்றுள்ள மாவட்டக்கல்வி அலுவலர்கள்
1. ஆர்.வளர்மதி
மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி)
திண்டுக்கல்
தற்காலிக பதவி உயர்வு பெற்றுள்ள பதவி மற்றும் மாவட்டம்
முதன்மைக்கல்வி அலுவலர்
விருதுநகர்
2. ஜி.முத்துசாமி
மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி)
சிவகங்கை
தற்காலிக பதவி உயர்வு பெற்றுள்ள பதவி மற்றும் மாவட்டம்
திருநெல்வேலி
3. பி.இரவிச்சந்திரன்
மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி)
திருவல்லிக்கேணி
சென்னை மாவட்டம்
தற்காலிக பதவி உயர்வு பெற்றுள்ள பதவி மற்றும் மாவட்டம்
திருவள்ளூர்
4. சி.கற்பகம்
மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி)
பொன்னேரி
திருவள்ளூர் மாவட்டம்
தற்காலிக பதவி உயர்வு பெற்றுள்ள பதவி மற்றும் மாவட்டம்
முதன்மைக்கல்வி அலுவலர்
செங்கல்பட்டு
5. ஐ.ஜோதி சந்திரா
மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி)
ஈரோடு
ஈரோடு மாவட்டம்
தற்காலிக பதவி உயர்வு பெற்றுள்ள பதவி மற்றும் மாவட்டம்
முதன்மைக்கல்வி அலுவலர்
தருமபுரி
6. ஜி.ஆர்.ராஜசேகரன்
மாவட்டக்கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்)
விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம்
தற்காலிக பதவி உயர்வு பெற்றுள்ள பதவி மற்றும் மாவட்டம்
துணை இயக்குனர்
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்
சென்னை-6
7. எ. கலாவதி
மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி)
தேனி, தேனி மாவட்டம்
தற்காலிக பதவி உயர்வு பெற்றுள்ள பதவி மற்றும் மாவட்டம்
தஞ்சாவூர் சரபோஜி நூலகம் மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தஞ்சாவூர்
Sunday, 5 November 2023
NMMS EXAM சமூக அறிவியல் பாடவாரியான தேர்வு நடத்துவதற்கு தேவையான வினாத்தாள்
👉 NMMS தேர்வுக்கு தேவையான வினாக்கள் அடங்கிய தொகுப்பு இது
👉 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இருந்து தயாரிக்கப்பட்டது
👉 ஒவ்வொரு பாடத்திலும் LINE BY LINE வினாக்கள் எடுக்கப்பட்டுள்ளது
👉 ஆசிரியர்கள் இதனை அப்படியே பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம்
👉 இப்போது 9 பாடங்கள் வினாக்களாக கொடுக்கப்பட்டுள்ளது
👉 தொடர்ந்து அனைத்து பாடங்களும் வெளியிடப்படும்
👉 எந்தெந்த பாடத்தில் இருந்து வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது என பாடத்தின் தலைப்பு வழங்கப்பட்டுள்ளது
👉 நீங்கள் தொடர்ந்து இது போல் வினாக்கள் பெற எங்கள் வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
👉 இங்கு 9 மாதிரி தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வு நடத்துவதற்கு ஆசிரியர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்
👉மாணவர்களாக இருந்தால் கீழே விடையுடன் இந்த 9 வினாத்தாளை சேர்த்து கொடுத்துள்ளேன் அதனை பயன்படுத்திக்கொள்ளலாம்
எங்கள் வாட்ஸ் அப் குழுவில் இணைவதற்கு லிங்க் கீழே உள்ளது
👇👇
NMMS தேர்வு
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
தென்னிந்திய புதிய அரசுகள்: பிற்கால சோழர்களும், பாண்டியர்களும்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
டெல்லி சுல்தானியம்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
விஜயநகரம் பேரரசு
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
பாமினி பேரரசு
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
மொகலாயர்கள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
👉 பிறருக்கும் அனுப்பி உதவுங்கள்
👉 இது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் 9952329008 எண்ணுக்கு ஒரு சிறு செய்தி அனுப்புங்கள்
👉 மேலும் வினாத்தாள் வடிவமைப்பு எப்படி இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என அறிவுரை அனுப்புங்கள்
கீழே உள்ள லிங்க் மூலம் சென்று விடைகளை தெரிந்து கொள்ளுங்கள்
👇👇
Saturday, 4 November 2023
வருமான வரி கணக்கீடு குறித்த விழிப்புணர்வு பதிவு
வருமான வரி கணக்கீடு குறித்த விழிப்புணர்வு பதிவு
இவ்வாண்டு வருமான வரி கணக்கிட நமக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன.
ஒன்று பழைய முறையில் வருமான வரி கணக்கிடுவது. மற்றொன்று புதிய முறையில் வருமான வரி கணக்கிடுவது.
இதில் எது லாபமானது?
1.
CPS ல் பணிபுரிந்து வருபவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சம் முதல் 11 இலட்சம் எனில் அவர்கள் புதிய முறையில் வருமான வரி கணக்கிடும் போது, பழைய முறையை விட புதிய முறையில் சுமார் 4000 முதல் 5000 வரை குறைவாக வருமான வரி கட்டும் வாய்ப்பு வரும்.
2.
இதேபோன்று, ஆண்டு வருமானம் 11 லட்சம் முதல் 12 லட்சம் வரை பெறுபவர்கள் புதிய வருமான வரி கணக்கீட்டு முறை முறையில் 8000 முதல் 11000 வரை குறைவாக வருமான வரி கட்டும் வாய்ப்பு வரும்.
3.
இதே நிலையில் ஆண்டு வருமானம் 12 லட்சம் முதல் 13 லட்சம் வரை பெறுபவர்களுக்கு புதிய வருமான வரி கணக்கீட்டு முறையில் சுமார் 12,000 முதல் 15000 வரை குறைவாக வருமான வரி கட்டும் வாய்ப்பு வரும்.
4.
ஆண்டு வருமானம் 13 லட்சம் முதல் 14 லட்சம் வரை பெறுபவர்களுக்கு புதிய வருமான வரி கணக்கீட்டு முறையில் சுமார் 20000 முதல் 23000 வரை வருமான வரி குறைய வாய்ப்பு உள்ளது.
5.
ஆண்டு வருமானம் 15 லட்சம் ரூபாய் உள்ளவர்களுக்கு புதிய வருமான வரி கணக்கீட்டு முறையில் 30 ஆயிரம் முதல் 34 ஆயிரம் வரையும் வருமான வரி குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.
6.
GPF முறையில் பணி நியமனம் பெற்றவர்கள் ஆண்டு வருமானம் 14 லட்சம் முதல் 15 லட்சம் என இருந்தால் அவர்களுக்கு சுமார் 40 ஆயிரம் வரை புதிய கணக்கீட்டு முறையில் வருமான குறைய வாய்ப்பு உள்ளது.
7.
எனவே, புதிய வருமான வரி கணக்கீட்டு படிவத்தையும் - பழைய வருமான வரி கணக்கிட்டு படிவத்தையும் ஒப்பிட்டு பார்த்து ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் புதிய வருமான வரி கணக்கீட்டு படிவத்தை (NEW TAX REGIME) தேர்ந்தெடுத்து நமக்கு எவ்வளவு வருமான வரி வரும் என்பதை இப்பொழுதே கணக்கிட்டு அதற்கேற்றவாறு தொகையினை பிடித்தம் செய்து கொள்ளுங்கள்
8.
அதிகமான தொகையை நீங்கள் பிடித்தம் செய்தால் அதை திரும்பி வாங்குவது கடினமான ஒன்றாகிவிடும்.
9.
ஏனெனில் நமக்கு ஏற்கனவே இன்கம் டேக்ஸ் டிமாண்ட் நோட்டீஸில் வருமான வரி அபராதத்துடன் கட்ட வேண்டும் என காட்டப்பட்டு உள்ளதால் அதிகமான தொகையை நீங்கள் பிடித்தும் செய்தால் அதை வருமான வரித்துறை அதைப் பிடித்து வைத்துக் கொள்வார்கள்.
10.
எனவே இப்பொழுதே திட்டமிட்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தயாராகுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
11.
வீட்டுக் கடன் பெற்று அதற்கு வட்டியாக ரூபாய் 2 லட்சம் செலுத்துபவர்களுக்கு பழைய வருமான வரி கணக்கீட்டு முறை பயனுள்ளதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்
12.
எனவே வீட்டுக் கடன் வட்டியை கழிப்பவர்கள் இரண்டு முறைகளையும் பயன்படுத்தி அதாவது இரண்டு லட்சத்திற்கு கீழாக வட்டி கழிப்பவர்கள் இரண்டு முறைகளையும் பயன்படுத்தி, எது குறைவாக வருகிறதோ அதை பயன்படுத்திக் கொள்ளவும்.
13.
ஆண்டு வருமானம் 7 லட்சம் அதற்கு கீழ் உள்ளவர்களுக்கு இரண்டு முறைகளிலுமே வருமான வரி கட்டத் தேவையில்லை.
14. புதிய வருமான வரி கணக்கிட்டு படிவத்தின் படி,
50,000 STANDARD DEDUCTION உண்டு.
மேலும்,
UPTO 3 LAKHS NIL TAX
3 LAKH TO 6 LAKH 5%
6 LAKH TO 9 LAKH 10%
9LAKH TO 12 LAKH 15%
12 LAKH TO 15 LAKH 20%
ABOVE 15 LAKH 30 %
நன்றி
பகிர்வு: முத்தமிழ் மன்றம்
NMMS EXAM MODEL QUESTIONS (SCIENCE - ENGLISH MEDIUM)
அரசு பணி போட்டி தேர்வுக்கு தயாராகும் நண்பர்களுக்கு FREE TAMIL TEST 7 organized By Dr APJ Free Coaching Centre Thiruvannamalai
School Books Free Test 7
Syllabus:8th Standard
தமிழ்:30 questions
Current affairs-July 2023:10 questions
Maths :10 questions
Total Questions 50
Duration 40 min
Answer key & Rank List will be released Sunday night
click here to write exam
👇
Friday, 3 November 2023
கனமழை காரணமாக நாளை (04.11.2023) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
கனமழை காரணமாக தேனி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது
கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று ஒருநாள் மட்டும் மதுரை மாவட்டப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது
கனமழை காரணமாக இன்று ஒருநாள் சென்னை மாவட்டப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது
கனமழை காரணமாக இன்று ஒருநாள் மட்டும் மயிலாடுதுறை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
கனமழை காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் சிவகங்கை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை 04.11.2023 திண்டுக்கல் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்
தென்காசி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நாளை (04.11.23) மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் (சிறப்பு வகுப்புகள் உட்பட) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நாளை (04.11.23) மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை (04.11.23) மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
1-5 வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
1,2,3 வகுப்புகளுக்கான
எண்ணும் எழுத்தும்
பாடக்குறிப்பு
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
4,5 வகுப்புகளுக்கான
எண்ணும் எழுத்தும்
பாடக்குறிப்பு
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு
நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்புகள்
நவம்பர் இரண்டாம் வாரம்
06.11.23 to 10.11.23
தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி
👇👇
Thursday, 2 November 2023
NMMS EXAM 7-வது தேர்வு மாதிரி வினாத்தாள் (அறிவியல் & சமூக அறிவியல் )
👉இந்த வினாக்கள் அனைத்தும் NMMS மோகன் அவர்களின் குழுவினரால் உருவாக்கப்பட்டு மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது
👉ஒவ்வொரு வினாத்தாளை 50-60 வினாத்தாள்களை கொண்டது
👉 அறிவியல், சமூக அறிவியல் வினாத்தாள்கள் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளது
👉 ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அப்படியே பிரிண்ட் எடுத்து தேர்வு நடத்தலாம்
👉 ஒவ்வொரு வினாத்தாளும் குறிப்பிட்ட சில பாடங்களை கொண்டது
👉 வினாத்தாள் எந்த பாடத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என பாடத்தின் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது
👉 இதற்கான விடை ஓரிரு நாளில் வெளியிடப்படும்
👉 மொத்தம் 19 வகையான தேர்வு வினாத்தாள் உள்ளது. ஏற்கனவே 6 வினாத்தாள் கொடுக்கப்பட்டது
👉 இது 7 வது வினாத்தாள். கீழே pdf வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது
7- வது மாதிரி வினாத்தாள்
அறிவியல்
(7,8 வகுப்பு-இயற்பியல்)
ஒளியியல்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
7- வது மாதிரி வினாத்தாள்
சமூக அறிவியல்
டெல்லி சுல்தானியம்
நீரியல் சுழற்சி
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்
அப் குழுவில் இணைந்து கொள்ளவும்
👇👇
Wednesday, 1 November 2023
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு முழுக்கூடுதல் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக்கல்வி இயக்குனர் ஆணை
கீழ்கண்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் பணியிடத்தில் முழுக்கூடுதல் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் ஆணை பிறப்பித்துள்ளார்
1. காஞ்சிபுரம்
2. செங்கல்பட்டு
3. கள்ளக்குறிச்சி
4. மதுரை
5. விழுப்புரம்
6. கன்னியாகுமரி
TNSED Schools APP New version Version: 0.0.90 updated on 31.10.2023
NEW UPDATE
Ennum Ezhuthum Module Changes. Bug Fixes & Performance Improvements.