தமிழ்நாடு வனத்துறை நெல்லை
வன உயிரின சரணாலயம்,
குற்றாலம் வனச்சரகம்
திருநெல்வேலி வனக்கோட்டம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
தேசிய பசுமைப்படை,
ஆகாஷ் ஃப்ரெண்ட்ஸ் ஐஏஎஸ் அகாடமி
இணைந்து மார்ச் 21 உலக வன நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வனம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட வன அலுவலர் Dr. முருகன் உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலர் பாலகிருஷ்ணன் ஏற்பாட்டின் படி பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆதிவாசிகள் என்ற தலைப்பில் மாறுவேட போட்டியும்
ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காடு தந்த சீதனங்கள் என்ற தலைப்பில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டியும்
11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வன உயிரிகள் என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும் சுற்றுச்சூழல் மற்றும் வன வள பாதுகாப்பு என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டியும்
கல்லூரி மாணவர்களுக்கு மழை என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும் இலைகளைக் கொண்டு உருவாக்கும் வன உயிர்கள் உருவாக்கும் போட்டியும்
பொதுமக்களுக்கு சூழல் சமநிலை காக்க சண்டை இல்லாத உலகம் வேண்டும் என்ற தலைப்பில் ரங்கோலி போட்டியும் நடைபெற்றது
போட்டிகளில் அனைத்து வகை பள்ளி கல்லூரிகள் என 60 பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளை USP கல்வி நிறுவன தலைவர் செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்கினார் USP கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் கயற்கண்ணி முன்னிலை வகித்தார் அறிவியல் இயக்கம் அருள் விண்ணரசு அறிவியல் பாடல் பாடினார்
கல்லூரி செயலாளர் சகாயமேரி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு குற்றாலம் வனவர் பிரகாஷ், செங்கோட்டை வேளாண் உதவி அலுவலர் ஷேக் முகைதீன் வாழ்த்துரை வழங்கினர்.
வினாடி-வினா வினை டாக்டர் ரங்கநாதன் நடத்தினார்
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ செல்வங்களுக்கு வனத்துறை சார்பில் பாராட்டு சான்று வழங்கப்பட்டது.
வெற்றி பெற்றோருக்கு ஆகாஷ் அகடமி சார்பில் பாராட்டு பரிசு 21ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.
மாவட்ட தலைவர் சுரேஷ் குமார் வரவேற்றார்
அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்
இப்போட்டியில் சிறப்பாக பங்கேற்ற மாணவர்களை
ஆகாஷ் ஃப்ரெண்ட்ஸ் ஐஏஎஸ் அகாடெமி
நிர்வாக இயக்குநர்
மாரியப்பன்
பாராட்டினார்.