Search This Blog
Friday, 8 October 2021
கற்கண்டு வழங்கும் NMMS தேர்வு ONLINE பயிற்சி 6 நாட்கள் நடந்த பயிற்சியின் youtube link
மாணவர்கள் தொடர்ச்சியாக இந்த வீடியோக்களை பார்த்துவருவீர்களேயானால் நிச்சசயமாக NMMS தேர்வில் வெற்றிப் பெற முடியும்
DAY 6 LINK
👇👇
DAY 5 LINK
👇👇
DAY 4 LINK
👇👇
DAY 3 LINK
👇👇
DAY 2 LINK
👇👇
DAY 1 LINK
👇👇
Thursday, 7 October 2021
மத்திய திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து வழங்கும் கண்காணிப்பு கேமிரா பொருத்துதல் மற்றும் தொழில்நுட்பம் இலவச பயிற்சி
பயிற்சி காலம் : 50 நாட்கள்
வயது : 18-40 (ஆண் பெண்)
கல்வித்தகுதி : 8க்கு மேல்
பயிற்சி நடைபெறும் இடம்
புஷ்பம் சாரிடபிள் டிரஸ்ட் திறன் பயிற்சி மையம் சென்னை
தங்கும் இடம் மற்றும் 3 வேலை உணவு இலவசம்
மேலும் விவரங்களுக்கு
👇👇
Wednesday, 6 October 2021
8ம் வகுப்பு தனித்தேர்வு: அக்டோபர் 11ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வருகிற 11ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: நவம்பர் மாதம் நடக்க இருக்கின்ற தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு தேர்வுஎழுத விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அக்டோபர் 1ம்தேதியுடன் பன்னிரெண்டரை வயது நிரம்பியிருக்க வேண்டும். அந்த வயுதுள்ளவர்கள் 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் 20ம் தேதி தக்கல் திட்டத்தின் கீழ் ₹500 கூடுதலாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். முதல் முறையாக 8ஆம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் சான்றிடப்பட்ட தங்கள் பள்ளி மாற்றுச் சான்றின் நகல், பதிவுத்தாள் நகல், பிறப்பு சான்றின் நகல், இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமே இணைத்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தோல்வி அடைந்த பாடத்தை தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள், அதன் மதிப்பெண் சான்று நகல்களை கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். தனித் தேர்வர்கள் ₹42 மதிப்புள்ள தபால் தலை ஒட்டிய சுய முகவரியுடன் கூடிய உறையை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தேர்வுகள் குறித்த விரிவான விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.