54 ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட "தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு" மற்றும் "தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கான கையேடுகள் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பொற்கரங்களால் வெளியீடு
தமிழ்நாட்டில் உள்ள தன்னலம் கருதாது அர்ப்பணிப்புமிக்க 54 ஆசிரியர்கள் உருவாக்கிய தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு மற்றும் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வுகளுக்கான கையேடுகளை 04.10.2025 அன்று சென்னை வேளச்சேரி அரிமா சங்கம் சார்பில் நடந்த விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது பொற்கரங்களால் வெளியிட்டார்
தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் pdf வடிவில் உருவாக்கிய தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு மற்றும் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வுகளுக்கான கையேடுகள் வேளச்சேரி அரிமா சங்கத்தின் கல்வி பணிகளுக்கான Innovative Education Project சேர்மன் திரு.ஹரிகிருஷ்ணன், திரு.செல்வகுமார் மற்றும் ஆலோசகர் திரு.வெங்கட்ராமன் அவர்களின் முன்னெடுப்பால் புத்தகம் வடிவில் வெளியிடப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் விழாவில் கலந்துகொண்டு தனது பொற்கரங்களால் கையேடுகளை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்கள்
கையேடுகளின் முதல் பிரதிகளை அரிமா மாவட்ட கவர்னர் மற்றும் அரிமா சங்கத்தின் தலைவர் திரு . ராஜா அவர்கள் பெற்றுக்கொண்டனர்
முன்னதாக அரிமா திரு.செல்வகுமார் அவர்கள் கொடிவணக்கம் வழங்கினார்கள்
அரிமா சங்கத்தின் தலைவர் திரு.ராஜா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்
அரிமா திரு.வெங்கடராமன் அவர்கள் வேளச்சேரி அரிமா சங்கத்தின் கல்வி சார்பான உதவிகள், பள்ளிச்சார்ந்த உதவிகள் பற்றி எடுத்துக்கூறினார் மேலும் தங்களது பங்களிப்புடன் வெளியிடப்பட்ட NMMS தேர்வுக்கான கையேடுகளின் உதவியுடன் பயனடைந்த மாணவர்கள் பற்றி விளக்கினார்
அரிமா திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள் கையேடு குறித்தும் அவை விலையில்லா கையேடுகளாக மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகள் பற்றியும் எடுத்துக்கூறினார்கள்
தென்காசி மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் திரு.இள.பாபு வேலன் கையேடு உருவாக்கம் பற்றியும் 54 ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிகள் குறித்தும், தமிழ்நாடு அரசின் மாணவர்கள் சார்ந்த திட்டங்களை கிராமப்புற மாணவர்கள் வரை கொண்டு சேர்ப்பதில் தங்களுக்கான கடமைகள் குறித்தும் கல்விச்சார்ந்த அரசின் திட்டங்களை வெற்றி பெறச்செய்வதில் ஆசிரியர்களின் பங்களிப்பு பற்றியும் எடுத்துக்கூறினார்கள் மேலும் அர்பணிப்புமிக்க ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டு வேளச்சேரி அரிமா சங்கத்தின் உதவியுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சரின் பொற்கரங்களால் வெளியிடப்பட்ட NMMS தேர்வுக்கான கையேடுகளின் வெற்றி குறித்தும் விளக்கிக்கூறினார்கள்.
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கையேடுகளை வெளியிட்டு 54 ஆசிரியர்களின் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பு பற்றி பாராட்டி பேசினார்கள். வேளச்சேரி அரிமா அமைப்பின் Innovative Education Project சேர்மன் திரு.ஹரிகிருஷ்ணன், திரு.செல்வகுமார் மற்றும் ஆலோசகர் திரு.வெங்கட்ராமன் ஆகியோர்களின் கல்விசார்ந்த பணிகள் குறித்து பாராட்டினார்கள். வேளச்சேரி அரிமா சங்கம் முன்னெடுக்கும் கல்விசார்ந்த பணிகளுக்கு என்றும் அரசு துணை நிற்கும் என்றும் அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார். ஒவ்வொரு மாணவனையும் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற ஆசிரியர்கள் தயார் செய்ய வேண்டும் என்றும் அதற்கு அரசு உங்களுடன் எப்போதும் துணை நிற்கும் என்றும் வாக்குறுதி அளித்தார்கள்
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கையேடுகளை உருவாக்கிய 54 ஆசிரியர்களையும் பாராட்டி தனது கரங்களால் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்
அரிமா மாவட்ட கவர்னர் அவர்கள் கையேடுகளின் முதல் பிரதிகளை பெற்றுக்கொண்டு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மாணவர்கள் சார்ந்து கொண்டுவந்துள்ள திட்டங்களை பாராட்டி பேசினார்கள். வேளச்சேரி அரிமா சங்கத்தின் கல்விசார்ந்த பணிகள் குறித்து பாராட்டினார்கள். 54 ஆசிரியர்களின் கையேடு உருவாக்கம் பற்றி பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்
ஆசிரியர்களின் சார்பில் திரு.பழனிச்சாமி அவர்கள் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார்கள்.
ஆசிரியர்களின் சார்பில் திருமதி.இந்துமதி சார்பில் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது
ஆசிரியர்கள் சார்பில் கையேடுகளை வெளியிட்ட அமைச்சர் அவர்களுக்கும், உறுதுணையாக நின்ற வேளச்சேரி அரிமா INNOVATIVE CHAIRMAN திரு.ஹரிகிருஷ்ணன், திரு.செல்வகுமார், திரு.வெங்கடராமன் மற்றும் அரிமா தலைவர் உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்து ஆசிரியர் திருமதி.ராஜேஸ்வரி அவர்கள் பேசினார்கள்
அரிமா சங்கம் சார்பில் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும், கையேடு உருவாக்க காரணமான ஒருங்கிணைப்பாளர்கள் திரு.நெல்சன், திரு.வின்சென்ட் மற்றும் கையேடுகளை உருவாக்கிய 54 ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்து அரிமா பொருளாளர் திரு.கில்பர்ட் பேசினார்கள்
இந்த கையேடுகள் புத்தக வடிவில் விலையில்லா கையேடுகளாக வேளச்சேரி அரிமா சங்கத்தின் INNOVATIVE EDUCATION PROJECT தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மற்றும் PDF வடிவில் அனைத்து வாட்ஸ் அப் குழு, வெப்சைட், BLOG அனைத்திலும் வெளியிடப்பட்டுள்ளது
இந்த கையேடுகள் மாணவர்கள் மட்டுமின்றி TNPSC, TET, POLICE போன்ற தேர்வுகளுக்கு உதவிடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது
தற்போது தமிழ் கையேடு மட்டும் PDF வடிவில் வெளியிடப்படுகிறது அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
கையேடு வெளியீட்டின் சிறப்பான புகைப்படங்கள்