Search This Blog

Sunday 15 May 2022

தென்காசி அரசு பள்ளிகள் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் மூலிகைத்தோட்டம் அமைக்கும் பணி தொடக்கம்


இன்று (15.05.22) தென்காசி மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனை 


வளாகத்தில் தென்காசி 13 வார்டு நடுநிலைப்பள்ளி மற்றும் 


கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுற்றுச்சூழல் 


மன்றம் சார்பில்  மூலிகைத்தோட்டம் அமைக்கும் பணி இனிதே தொடங்கி 


வைக்கப்பட்டது. 




நிகழ்வுக்கு தலைமை தாங்கி, முதல் மூலிகைச்செடியை தென்காசி அரசு 


தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர்  திரு.ஜெஸ்லின் அவர்கள் 


பொற்கரங்களால் நட்டு தொடங்கி வைத்தார்.  


உறைவிட மருத்துவர் திரு.ராஜேஷ் அவர்கள் முன்னிலை வகித்தார்.  




நிகழ்வில் தென்காசி 13 வார்டு  நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 


திருமதி.கற்பகம், சுற்றுச்சூழல்  ஒருங்கிணைப்பாளர் திரு.வின்சென்ட்


கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுற்றுச்சூழல் 


ஒருங்கிணைப்பாளர் திரு. பாபு வேலன்தென்காசி அரசு மருத்துவமனை 


QPMS பணியாளர்கள் கலந்துக்கொண்டனர். 




மூலிகை தோட்டம் அமைக்கும் பணியை தென்காசி பசுமை இயக்கம் 


நிறுவனர் திரு. முஸ்தபா, பசுமை இலத்தூர் அமைப்பைச்சேர்ந்த 


திரு.கனகராஜ், திரு.உதயக்குமார், திரு.கவியரசு, திரு.சதீஸ்குமார் 


ஆகியோர் சிறந்த  முறையில் அமைத்து தந்து உதவினார்கள். 


முடிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் திரு.ஜெஸ்லின் அவர்கள் 


அனைவருக்கும் நன்றி கூறி  உரையாற்றினார்.














































No comments:

Post a Comment