மத்திய அரசின் வழிகாட்டுதல் படி நமது பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறியும் ஒரு செயல்முறையே PRASHAST (Pre-Assessment Holistic Screening Tool) ஆகும்.
இந்த செயலி NCERT மற்றும் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு செயலி ஆகும். இதன் நோக்கம் மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் ஆரம்பக்கல்வியை பெறுவதில் எந்த விதமான தடையும் இருக்கக்கூடாது என்பதற்காகவும் அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும் இந்த APP உருவாக்கப்பட்டுள்ளது
2016 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் படி (RPwD Act 2016) அங்கீகரிக்கப்பட்டுள்ள 21 வகையான குறைபாடுகளை (பேச்சு குறைபாடு, கற்றல் குறைபாடு, தசை குறைபாடு, பார்வை குறைபாடு) இதன் மூலம் கண்டறியமுடியும்
ஆசிரியர்கள் இந்த APP பயன்படுத்தி மாணவர்களை கண்டறிந்து அடுத்த கட்ட சோதனைக்கு பிறகு மாணவர்களுக்கு மாற்று திறனாளி சான்றிதழ் கிடைக்க வழி வகை செய்கிறது
இது இரு வகையில் (APP மற்றும் வலைத்தளம்) வழங்கப்பட்டுள்ளது
கீழ்கண்ட விளக்கத்தின் அடிப்படையில் செயல்பட்டு இதில் கொடுக்கப்பட்டுள்ள 10 வீடியோக்களை அனைத்து வகை ஆசிரியர்களும் பார்வையிட வேண்டும்.
இதன் மூலம் 21 வகையான மாணவர்களின் குறைபாடுகளை கண்டறிய முடியும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் PRASHAST வலைதளத்தில் நுழைந்த உடன் video tutorials என ஒரு option இருக்கும் அதை கிளிக் செய்த உடன் login with OTP என்ற ஒரு கட்டம் தோன்றும் அதில் பள்ளியின் udise code மற்றும் உங்கள் மொபைல் எண்ணை பதிவிடவேண்டும்
அல்லது
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் PLAY STORE சென்று அதில் PRASHAST என்று டைப் செய்து அந்த அப்பை பதிவிறக்கம் செய்யவேண்டும் அதனுள் நுழைந்த உடன் video tutorials என ஒரு option இருக்கும் அதை கிளிக் செய்த உடன் login with OTP என்ற ஒரு கட்டம் தோன்றும் அதில் பள்ளியின் UDISE CODE மற்றும் உங்கள் மொபைல் எண்ணை பதிவிடவேண்டும்
உங்கள் எண்ணுக்கு ஒரு OTP வரும் அதனை மறுபடி நீங்கள் உள்ளீடு செய்தால் வீடியோ பார்க்கும் option வரும் அதில் உள்ள 10 வீடியோக்களையும் பார்க்க வேண்டும் அதன் பிறகே மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறியும் SCREENING பெற முடியும்
அனைத்து ஆசிரியர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு screening செய்வதற்கு முன் PRASHAST 2.O app ல் கொடுக்கப்பட்ட 10 வீடியோக்களை முழுமையாக பார்த்தல் மட்டுமே தங்களுடைய ஐடி ல் screening பண்ணக் கூடிய மாணவர்கள் பெயர்கள் வரும். எனவே அனைத்து ஆசிரியர்களும் மேற்கண்ட video பார்க்க அறிவுறுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது
LAST DATE ஜூலை 31.7.26
அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் மேல் நிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி பள்ளிகளில் உள்ள தலைமைஆசிரியர்கள்,பள்ளி ஆசிரியர்கள்,கால முறை ஊதியத்தில் இருக்கும் இசை, ஓவியம், தையல், விளையாட்டு ஆசிரியர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்
ஆசிரியர்கள் இணையதளம் மற்றும் app பதிவிறக்கம் செய்து வீடியோ பார்க்கலாம்
👉முக்கிய இணையதள முகவரி (Official Link)
Website Link
👇
CLICK HEREAPP DOWNLOAD LINK
👇
CLICK HERE
