தமிழ்நாடு தொடக்கக்கல்வி 2026-2027 ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 2026 மாதத்தில் நடத்துதல் மற்றும் விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகாமை (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து அறிவுரைகள் வழங்கியது தொடர்பாக திருத்திய ஆணை தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரால் வழங்கப்பட்டுள்ளது
04.07.2026 அன்று ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I (TET PAPER I) நடைபெற உள்ளதால் ஆசிரியர்களின் நலன் கருதி இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 06.07.2026 மற்றும் 07.07.2026 ஆகிய இரு நாட்களில் மட்டுமே நடைபெறும்
இதர கலந்தாய்வுகள் ஏற்கனவே வழங்கப்பட்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி நடைபெறும்
இவ்வாறு தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment