Search This Blog

Tuesday, 23 June 2026

தொடக்கக்கல்வி இயக்ககம் புதிதாக வெளியிட்டுள்ள பணி நிரவல் கலந்தாய்வு 2026-2027 - வழிகாட்டு நெறிமுறைகள்


தொடக்கக்கல்வி இயக்ககம் புதிதாக வெளியிட்டுள்ள பணி நிரவல் கலந்தாய்வு 2026-2027 - வழிகாட்டு நெறிமுறைகள்




பணிநிரவல் கலந்தாய்வானது ஒன்றியத்திற்குள், கல்வி மாவட்டத்திற்குள் மற்றும் வருவாய் மாவட்டத்திற்குள் என நடைபெறவுள்ளது.




EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யும் முறை:



👉உபரி ஆசிரியர்களின் பெயர்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யும்போது, "DEE-2026-2027-SGT DEPLOYMENT (Within Block)" என்ற தலைப்பில் மட்டுமே பதிவேற்றம் செய்யவேண்டும்.



👉எக்காரணத்தைக் கொண்டும் "DEE-2026-2027-SGT DEPLOYMENT (Within Education District)" அல்லது "DEE-2026-2027-SGT DEPLOYMENT (Within Revenue District)" ஆகிய தலைப்புகளில் பதிவேற்றம் செய்யக்கூடாது.



மேலும், இதற்கென முன்னுரிமை எண் வழங்கவேண்டும்.




பணிநிரவல் வழிமுறைகள்:


👉வருவாய் மாவட்ட அளவில் உள்ள நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்கள் மற்றும் கூடுதல் தேவை (Need) பணியிடங்களின் எண்ணிக்கையை விட, உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பின், அனைத்து உபரி ஆசிரியர்களின் பெயர்களையும் ஒன்றியத்திற்குள் நடக்கும் கலந்தாய்வில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.




👉வருவாய் மாவட்ட அளவில் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் கூடுதல் தேவை எண்ணிக்கையை விட உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பின், வருவாய் மாவட்ட அளவில் முன்னுரிமைப் பட்டியலைத் தயார் செய்து, காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப இளையோராக (Junior) உள்ள ஆசிரியர்களின் பெயர்களை மட்டும் அந்தந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள் "DEE-2026-2027-SGT DEPLOYMENT (Within Block)" என்ற தலைப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.




👉பணிநிரவல் விதிவிலக்குகள் (அரசாணை எண். 176, நாள் 17.12.2021): கீழ்க்கண்ட ஆசிரியர்களுக்குப் பணிநிரவலிலிருந்து விலக்கு அளிக்கலாம்




👉40% மற்றும் அதற்கு மேல் கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள்.



👉இந்த கல்வியாண்டில் ஓய்வு பெறுபவர்கள்.




👉NCC பொறுப்பில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள்.




👉ஏற்கெனவே பணிநிரவல் செய்யப்பட்டு மூன்று கல்வியாண்டுகள் முடியாத நிலையில், மீண்டும் உபரியாக இருக்கும் ஆசிரியர்கள்.




இவர்களில் எவரேனும் உபரியாகக் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு விலக்கு அளித்து, அவர்களுக்குப் பதிலாக அதே பள்ளியில் அடுத்த நிலையில் உள்ள இளையவரை (Next station junior) உபரியாகத் தெரிவு செய்து பணிநிரவலுக்கு உட்படுத்த வேண்டும்.





முன்னுரிமை (Priority) வரிசை:

👉மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்.



👉சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவர்கள், இருதய அல்லது மூளைக்கட்டி அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோயாளிகள்.



👉இராணுவத்தில் பணிபுரிபவர்களின் மனைவியர்.





விதவைகள் / மனைவியை இழந்தவர்கள், 40 வயதைக் கடந்த திருமணம் செய்துகொள்ளாத பெண் பணியாளர்கள், சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண் ஆசிரியர்கள்.





Deployment Seniority நிர்ணயம் செய்யும் முறை: 

i) முன்னுரிமை (Priority)

ii) தற்போதைய பணியில் (SGT) சேர்ந்த தேதி / யூனிட் மாறுதல்

iii) பள்ளி கல்வித்துறையில் பணியில் சேர்ந்த தேதி (Date of joining). iv) பிறந்த தேதி (Date of Birth).




மேலும், 01.08.2025-ல் உபரி என கண்டறியப்பட்டு, தற்போது அப்பள்ளியில் காலிப்பணியிடம் ஏற்பட்டாலோ அல்லது மாணவர் எண்ணிக்கை (EMIS படி) அதிகரித்தாலோ, அந்த உபரி ஆசிரியருக்குப் பணிநிரவலில் விலக்கு அளிக்கலாம்.


No comments:

Post a Comment