Search This Blog

Sunday, 21 June 2026

TAPS இடைக்கால நிவாரணம் பற்றி அடிக்கடி எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விளக்கம் நன்றி க.செல்வக்குமார் தலைமை ஆசிரியர் மதுரை மாவட்டம்



நண்பர்களே வணக்கம்

TAPS FAQ


1) நான் 25/4/26 இல் மறு நியமனத்தில் இருந்து ஓய்வு பெற்றேன். எனக்கு TAPS பொருந்துமா?


1.1.26 க்கு பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு மட்டும் தான் தற்போதைய அறிவிப்பு. 1.1.26 முன் பணியில் இருந்து ஓய்வு எனில் interim Payout இல்லை 





2) TAPS திட்டம் நல்லதா? சிறந்ததா?


தற்போது TAPS திட்ட விதிமுறைகள் எதுவும் வரவில்லை..

தற்போது வெளியிடப்பட்டது இடைக்கால நிவாரணம் ( interim Payout) மட்டுமே... 

முழுமையான திட்ட விவரங்கள் வரவில்லை 





3) interim Payout வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துவிட்டால். நமது CPS தொகையை தரமாட்டார்களா?


தங்களுக்கு CPS தொகை தான் மொத்தமாக வேண்டும் எனில் இப்போதே விண்ணப்பித்து மொத்த தொகையையும் பெற்றுக்கொள்ளலாம். (TAPS கோர இயலாது...) அல்லது தற்காலிக இடைக்கால நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். TAPS திட்டம் முழுமையாக வெளிவந்த பிறகு அதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனில் அந்த சமயத்திலும் வெளியேறலாம் ( பெற்ற இடைக்கால நிவாரணம் வட்டியுடன் கழித்து விட்டு மீதி தொகை கிடைக்கும்) 








4) நீங்க எனக்கு எதை பரிந்துரை செய்வீர்கள்?

TAPS ஆ CPS ஆ...


TAPS விதிமுறைகள் வரும் வரை அதன் சாதக பாதகம் சொல்ல இயலாது. இருப்பினும் இப்போது TAPS இல் இருந்து இப்போதே வெளியேற்றம் அல்லது விதிமுறைகள் வந்து பிறகு வெளியேற்றம் என இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. எனவே எனது தனிப்பட்ட பரிந்துரை. இப்போது TAPS இல் வெளியேறுவதை விட அந்த விதிமுறைகள் பார்த்து விட்டு பலன் இருப்பின் தொடருங்கள் அல்லது அப்போது வெளியேறுங்கள். இப்போது வெளியேறி விட்டீர்கள் எனில் TAPS rules வந்து பிறகு மீண்டும் அதில் உள்ளே செல்ல வழிவகை இல்லை எனவே எனது தனிப்பட்ட பரிந்துரை TAPS rules வரும் வரை interim Payout வாங்க option கொடுக்கலாம்...





5) 

10 ஆண்டுகள்

15 ஆண்டுகள்

20 ஆண்டுகள் 

23 ஆண்டுகள்

பணி புரிந்த எல்லோருக்கும் ஓரே தொகை தானா? 30%?


ஆம் இது இடைக்கால நிவாரணம் தான் எனவே 1.1.26 க்கு பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு Last Basic pay இல் 30%. Fixed 









6) அந்த 30% க்கு DA உண்டா? 


ஆம்  ஓய்வு ஊதிய காரர்களுக்கு DA என்று சொல்ல மாட்டார்கள் Dearness Relief (DR) என்பார்கள். இந்த 30% க்கு 60% DR உண்டு 






7) interim Payout எப்படி கணக்கிடுவது?


கடைசி மாத ஊதியம் x 0.48 இந்த தொகை தான் இடைக்கால நிவாரணம்.






8) கடைசி வரை இதே தொகை தானா?


இல்லை.. TAPS rules வரும் போது அதற்கு ஏற்ப மாறுபடும். DA அதிகரிக்கும் போது DR அதிகரிக்க வாய்ப்பு உள்ளது..






9) இடைக் கால நிவாரணம் ஒப்பளிக்க தகுதியானவர் யார்?


Group B, C & D பணியாளருக்கு நியமன அலுவலர்கள்


தலைமை ஆசிரியருக்கு- Director 

PGT - JD (HS)

BT - JD (P)







10) இடைக் கால நிவாரண தொகை பள்ளிகளில் இருந்து வழங்கப்படுமா?


கருவூலத்தின் மூலம் தனியரது வங்கி கணக்கில் ECS மாதாமாதம் வரவு செய்யப்படும்.






11) கருவூலத்தில் தனியே விண்ணப்பிக்க வேண்டுமா?


தற்போது தான் அரசாணை வந்துள்ளது. விண்ணப்பங்கள் பகிரப்பட்டுள்ளன விண்ணப்பிக்க 60 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது. விரைவில் கருவூலத்துறையில் இருந்து விரிவான வழிகாட்டுதல் வழங்கப்படும் / operation procedure 






12) 1.1.26 க்கு பிறகு பணியில் இருக்கும் போது மரணம் அடைந்தவர்/ பணி ஓய்வு பெற்று CPS தொகை பெறாமல் மரணம் அடைந்தவர் குடும்பம் இந்த interim Payout பெற இயலுமா?


ஆம் 1.1.26 க்கு பிறகு மரணம் எனில் தகுதியான குடும்ப உறுப்பினர்கள் இந்த இடைக் கால நிவாரண தொகை பெற இயலும்...






13) 1.1.26 முன் மரணம். இந்த இடைக் கால நிவாரண தொகை பெற இயலுமா?


இல்லை பெற இயலாது







14) TAPS அறிவிப்பு ஜனவரியில் வந்த போது...

1.1.26 முன் CPS இருந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு கருணைத் தொகை வழங்கப்படும் என சொன்னார்கள் இதில் அது பற்றி எதுவும் இல்லையே?


ஆம் இது முற்றிலும் interim Payout அறிவிப்பு தான். TAPS rules and regulations வரும் போது தான் மற்ற தகவல்கள்  கிடைக்கப்பெறும் .






15) அரசாணை 111 இல் நான்கு form ( விருப்ப கடிதம்) உள்ளது நான்கையும் பூர்த்தி செய்து தர வேண்டுமா?


இல்லை ஒரே ஒரு form மட்டுமே... தங்களுக்கு பொருத்தமான/விருப்பமான விண்ணப்பம்





Form I- 

TAPS Interim Monthly payout வேண்டும் என விருப்பம் தெரிவிக்க 




Form II-

1.1.26 க்கு பிறகு இறந்த போன பணியாளர் குடும்ப உறுப்பினர்கள் Interim Monthly payout வேண்டும் என விருப்பம் தெரிவிக்க





Form III-

CPS final settlement பெற்றுக் கொள்கிறேன் ( TAPS திட்டம் வேண்டாம்) என விருப்பம் தெரிவிக்க




Form IV-

இறந்த போன பணியாளர் குடும்ப உறுப்பினர் CPS final settlement பெற்றுக் கொள்கிறேன் என விருப்பம் தெரிவிக்க


1.1.26 பிறகு ஓய்வு/இறப்பு எனில் 


இந்த நான்கு விண்ணப்பத்தில்

ஏதேனும் ஒன்றை 

Form I/ II or Form III/IV கட்டாயம் 60 நாட்களுக்குள் முடிவு செய்து வழங்கிட வேண்டும்...






16) ஒரு WhatsApp பதிவில் TAPS இல் 50% ஓய்வு ஊதியம் 30% ஆக குறைப்பு? என வந்தது


தவறான புரிதல் TAPS ஓய்வூதிய அறிவிப்பு வரவில்லை. தற்போது 30% என்பது இடைக்கால நிவாரணம் முழுமையான TAPS rules வரும் போது இந்த தொகை (கூடுதலோ /குறைவோ) சரி கட்டப் படும் என்று தான் சொல்லி உள்ளார்கள்...





17) TAPS/OPS எதிர்பார்த்து 1.1.26 க்கு முன் ஓய்வு பெற்ற நான் CPS தொகை பெறாமல் உள்ளேன்?


1.1.26 க்கு பிறகு ஓய்வு என்றால் மட்டுமே இந்த TAPS interim Payout option வழங்கப்பட்டுள்ளது. 1.1.26 முன் ஓய்வு எனில் CPS final settlement வாங்கி இருந்தாலும்/ வாங்காமல் இருந்தாலும் இந்த interim Payout option விருப்ப கடிதம் வழங்க வாய்ப்பு இல்லை 





18) 1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்து தற்போது CPS இல் உள்ள அனைவரும் இந்த விருப்ப கடிதத்தை வழங்க வேண்டுமா?


இல்லை 1.1.26 முதல் ஓய்வு பெற்றவர்கள். அல்லது ஓய்வு பெற உள்ளார்கள் மட்டுமே 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் CPS இல் இருக்கும் அனைவரிடமும் விருப்ப கடிதம் எதுவும் கோரப்படவில்லை...






19) 1.1.26 க்கு பிறகு ஓய்வு. ஆனால் பணிக்காலம் பத்து ஆண்டுகளுக்கு குறைவு. Interim Payout option உண்டா?


இல்லை. 10 ஆண்டிற்கு குறைவான பணிக் காலத்தில் ஓய்வு பெறுபவர்களுக்கு (1.1.26 க்கு பிறகு ஓய்வு பெற்றாலும்) இந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.







20) TAPS interim Payout வந்துள்ளது... எனவே இனி  TAPS மட்டும் தானா? OPS?


1.1.26 பிறகு ஓய்வு பெற்ற 8000 மேற்பட்டவர்கள் உரிய பலன்களை பெறாமல் தவிக்கிறார்கள் என பத்திரிகை செய்தி.


OPS 

CPS

TAPS 

அல்லது வேறு ஒரு புதிய திட்டம்...

எது என்றாலும்

அது அரசின் கொள்கை முடிவு 👍🙏


தமிழக அரசு PFRDA வில் இதுவரை இணையவில்லை ...

அரசு நினைத்தால் நமக்கு எதுவும் சாத்தியமே 🙏


தகவலுக்காக

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

மதுரை மாவட்டம் 🙏

21/6/26

No comments:

Post a Comment