நூலக பாட வேளைகளில் வாசிப்பு இயக்கப் புத்தகங்களை மாணவர்கள் வாசிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு
இது குறித்தான தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் 18.06.2026 அன்று மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கீழ்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
பள்ளிக் குழந்தைகளிடம் உரையாடலை தொடங்கவும், இயல்பாக உரையாடவும், வாசிப்பு தான் வாசலாக அமையும்.
வாசிப்பின் வாயிலாக சமூக சிந்தனையை தூண்டவும், உளப்பாடுகளை வெளிக் கொண்டு வரவும் "மாபெரும் வாசிப்பு இயக்கம்" என்ற நிகழ்வு செயல்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் வாசிப்பு இயக்கத்திற்கான கதைப் புத்தகங்கள் நுழை, நட, ஓடு, பற என்ற வகையில் முதற்கட்டமாக 53 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது
இரண்டாம் கட்டமாக 70 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது
மூன்றாம் கட்டமாக 81 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது
நான்காம் கட்டமாக 57 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது
மொத்தம் 261 புத்தகங்கள் (174 தமிழ் வழி புத்தகங்கள் மற்றும் 87 ஆங்கில மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட புத்தகங்கள்) அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட வாசிப்பு இயக்கப் புத்தகங்களை 2026-27 கல்வியாண்டிலும் பள்ளி நூலக பாடவேளைகளில் மாணவர்கள் முறையாக வாசித்து பயன்பெறும் வகையிலும், மாணவர்களை கதை சொல்லிகளாகவும் எழுத்தாளர்களாகவும் உருவாக்கும் வகையில் நடைமுறைப்படுத்த தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அறிவுறுத்தவும், இப்பொருள் சார்ந்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளவும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்


No comments:
Post a Comment