👉பயிற்சி காலம்:
08.06.2026 முதல் 30.06.2026 வரை (திங்கள் முதல் வெள்ளி வரை)
👉வகுப்பு நேரம்:
மாலை 06:30 மணி முதல் இரவு 08:00 மணி வரை .
👉பயிற்சி முறை:
முழுவதுமாக இயங்கலை (Online - YouTube Live) மூலம் மட்டுமே நடத்தப்படும் .
👉பயிற்சி வழங்குவோர்:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET)
👉அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தற்பொழுது பணியாற்றி, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் (தாள் 1) மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் (தாள் 2) இப்பயிற்சியில் கலந்துகொள்ளலாம் .
👉விருப்பமுள்ள ஆசிரியர்கள் சுற்றறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள Google Form Link அல்லது QR Code மூலமாகத் தங்களது விவரங்களை (பெயர், EMIS எண், மின்னஞ்சல், கைபேசி எண் போன்றவற்றை) துல்லியமாகப் பதிவு செய்ய வேண்டும் .
👉முன்பதிவு செய்யும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வகுப்பில் இணைவதற்கான டெலிகிராம் (Telegram) குழு வழியாக அனுப்பி வைக்கப்படும்
👉இப்பயிற்சி ஒரு வழிகாட்டுதல் (Orientation) மட்டுமே. இதில் எந்தவிதமான குறிப்புப் பொருட்களோ (Reference materials) அல்லது விடைகளோ வழங்கப்பட மாட்டாது. ஆசிரியர்கள் நேரலை வகுப்பின் போது சுய குறிப்புகளை (Notes) எடுத்துக்கொள்ள வேண்டும்
👉ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் தேர்வில், இந்தப் பயிற்சியில் நடத்தப்படும் பகுதிகள் மட்டுமே கேள்விகளாக வரும் என எதிர்பார்க்கக் கூடாது. எனவே, ஆசிரியர்கள் பாடப்புத்தகங்களைக் கொண்டு தங்களது சுய தயாரிப்பையும் தொடர வேண்டும் .
👉வழக்கமான பள்ளிப் பணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம், மாலை நேரத்தில் வழங்கப்படும் இந்த வாய்ப்பினை ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் .
👉பயிற்சியில் பதிவு செய்ய கீழே உள்ள google form மூலம் இணையவும்
👇
👉பயிற்சியில் பதிவு செய்ய கீழே உள்ள TELEGRAM LINK மூலம் இணையவும்
👇
மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் PDF பதிவிறக்கம் செய்யவும்
👇

No comments:
Post a Comment