மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்து அறிவியல் கணிதம் புத்தகங்களில் இடம்பெற்ற பாடங்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அனிமேஷன் வீடியோக்களாக கற்கும் ஒவ்வொருவரும் நன்கு திட்டமிட்ட வழிகாட்டுதலுடன் கூடிய கற்றல் பயணத்திற்கு வழிவகுப்பதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒவ்வொரு பாடப்பொருளையும் மிகத்தெளிவாகவும் உள்ளார்ந்த புரிதலுடனும் கற்க இயலும்
எனவே அனைத்து பள்ளி ஆசிரியர்களும் இந்த அனிமேஷன் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து தங்களின் வகுப்பறை கற்றல் செயல்பாட்டில் பயன்படுத்திட வேண்டும்
பள்ளி மேலாண்மைக் கூட்டத்தில் பங்கேற்க வரும் மாணவர்களின் பெற்றோர்களிடத்தில் மணற்கேணி செயலி குறித்து விழிப்புணர்வை அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஏற்படுத்தவேண்டும்
மணற்கேணி செயலியை பள்ளி மேலாண்மைக் கூட்டம் நடைபெறும் அன்றே பெற்றோர்களின் கைபேசியில் google play store மூலம் பதிவிறக்கம் செய்து கொடுத்து அதனை மாணவர்கள் வீட்டில் பயன்படுத்தி எவ்வாறு பாடங்களை கற்க வேண்டும் என்பதை கூறவேண்டும்
எவ்வாறு தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
மேலும்
ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்பினை நல்கியுள்ள ஆசிரியர்களை ஓர் ஒன்றியத்தில் இருந்து ஒவ்வொரு வகுப்பிற்கும் 5 ஆசிரியர்கள் வீதம் 40 ஆசிரியர்களை கண்டறிந்து தெரிவு செய்திடல் வேண்டும் எனவும் அவர்கள் பற்றிய விவரங்களை ஆங்கிலத்தில் மட்டும் excel படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்
No comments:
Post a Comment