Search This Blog

Saturday, 24 December 2022

பள்ளிக் கலைத் திருவிழாவை சிறப்பாக நடத்திய பொறுப்பாளர்களுக்கு பாராட்டு அசத்திய விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலர்



தமிழக அரசு, அரசு  பள்ளி மாணவர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதத்தில் அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளும் வண்ணம்  50 க்கும் மேற்பட்ட போட்டிகளை அறிவித்தது.


கொரோனா  இடைவெளியில் இருந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் மகிழ்ச்சியுடன் இணைக்கும் உளவியல் அடிப்படை பாலமாக இக்கலைத் திருவிழா நடந்தேறியது


பல மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகியோரின் சீரிய முயற்சியால் அந்தந்த படிநிலைப்படி குழுக்கள் அமைக்கப்பட்டு கல்விதௌதுறையின் கலைத்திருவிழா  சிறப்பாக நடந்தேறியது.


குழுவில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களும் சிறப்பாக செயல்பட்டு அரசின் உண்மையான நோக்கம் நிறைவேற முழுமையான ஒத்துழைப்பு வழங்கி பங்கு பெற்று வெற்றி பெற்றனர்.


ஒரு சில மாவட்டங்களில் தேவையற்ற நபர்களை குழுவில் கொண்டு சிக்கல்களையும் சந்தித்தனர் கல்வி அலுவலர்கள்.


விழுப்புரம் மாவட்டத்தில் திறமையான நபர்களை கொண்டு குழு அமைத்து எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல் போட்டிகள் நடுநிலையாக நடத்தப்பட்டு நியாயமான தீர்ப்புகள் வழங்கப்பட்டு வெற்றி பெற்ற பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.


குறிப்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் நல்லாசிரியர் திரு.செல்லையா அவர்கள் திறம்பட செயல்பட்டு விழுப்புரம் மாவட்டக் கலைத்திருவிழா சிறப்பாக நடைபெற தம் குழுவினருடன் பணியாற்றினார்.


இன்று நடந்த விழாவில் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிறப்பாக செயல்பட்ட கல்வித்திருவிழா ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்









மாநில அளவிலான கலைத்திருவிழா திருநெல்வேலி மாவட்டக் கல்வித்துறை அசத்தலான ஏற்பாடு

மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த 6,7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்கள் மேற்காண் அட்டவனையில் உள்ளவாறு தங்களுக்கான போட்டிகள் நடைபெறுகின்ற இடத்திற்கு செல்லுகின்ற பேருந்தில் (BUS NO ) ஏறி போட்டிகள் நடைபெறுகின்றன நாளுக்கு முந்தைய நாள் இரவே  அந்த இடத்திற்குச் சென்று தங்கள் வருகையை பதிவு செய்யவேண்டும்.


இதன் பொருட்டு27.12.2022 அன்று நடைபெறவுள்ள போட்டிகளுக்கு  26.12.2022 அன்று  பிற்பகல் 2.30 மணிக்கு ஒரு பேருந்தும் 28.12.2022 அன்று நடைபெறவுள்ள போட்டிகளுக்கு  27.12.2022 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஒரு பேருந்தும் பாளையங்கோட்டை காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இருந்து புறப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 SS,திருநெல்வேலி


இது போன்று ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு பேரூந்து ஏற்பாடு செய்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அலைச்சலை குறைத்த மாவட்ட கல்வி  நிர்வாகத்தை அனைத்து ஆசிரியர்களும் பாராட்டி வருகின்றனர்.


ஆனால் பல மாவட்டங்களில் இன்னும் மாவட்ட அளவில் போட்டி முடிவுகள் வெளியிடப்படாமல் மௌனம் காத்து வருகின்றன


போட்டியில் கலந்து கொண்ட பள்ளிகள் தாங்கள் மாணவர்கள் வெற்றி பெற்றனரா? இல்லையா என முடிவு தெரியாமல் தவித்து வருகின்றன.


எந்த போட்டிகள் என்றாலும் அதன் முடிவுகள் பகிரங்கமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி காலம் தாழ்த்தாமல் அறிவிக்க வேண்டும்


முடிவுகள் ரகசியமாக வைக்கும் போது அந்த முடிவுகள் நம்பகத் தன்மையை இழந்து விடுகின்றன


திருநெல்வேலி மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் போட்டியிலும் வெற்றி பெற மாவட்ட ஆசிரியர் வாழ்த்துகிறார்கள்


பேருந்து ஏற்பாடு செய்து ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைத்த மாவட்ட கல்வி நிர்வாகத்தை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாராட்டினார்கள்


திருநெல்வேலி மாவட்டம் சார்பில் மாநில போட்டிகளில் கலந்துகொள்ளும் ஆசிரியர் மாணவர் பட்டியல்




Friday, 23 December 2022

NMMS தேர்வு அறிவிப்பு வெளியானது


👉2022-23 ஆம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான "தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு" அறிவிப்பு வெளியானது 


👉தேர்வானது 25.02.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது 


👉இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை 26.12.2022 முதல் 20.01.2023 வரை இத்துறையின் கீழ்கண்ட இணையத்தளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


👉விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய 

கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD NMMS APPLICATION


👉பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கவேண்டிய கடைசி நாள் 24.01.2023


👉தேர்வுக் கட்டணத்தொகை 50 ருபாய் 


👉வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெறும் 


👉மேலும் விவரம் அறிய 

அரசுத் தேர்வுகள் இயக்குனர் 

செயல்முறைகள் பதிவிறக்கம் செய்ய 

கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF







01.01.23 புதிய TNSED ATTENDANCE APP அனைத்து மாவட்டங்களும் செயல்முறைப்படுத்த தொடக்க கல்வி இயக்குநர் செயல்முறைகள்


தமிழ்நாட்டில்  அரசு/அரசு நிதியுதவி பெரும் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவுகள் TN SE D Schools செயலி மூலம் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.


எளிமையான முறையில் வருகையினை பதிவேற்றம் செய்வதற்காக ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் வருகைப்பதிவுக்கென மட்டும் தனியாக TNSE D Attendance என்ற செயலி உருவாக்கப்பட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 2 மாதங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது 

இந்நிலையில் வரும் 01.01.2023 முதல் இதனை பிற மாவட்டங்களுக்கும் நடைமுறைப்படுத்திட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர் 


இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் 

1. ஏற்கனவே உள்ள TNSED Schools செயலியில் இருந்து வெளியேற வேண்டும் 


2. டிசம்பர் 31.12.2022 முதல் இந்த செயலி செயல்படாது 


3. Google play store - ல் கீழ்கண்ட இணைப்பினை பயன்படுத்தி புதிதாக வருகைப்பதிவுக்கென உருவாக்கப்பட்டுள்ள TNSED Attendance செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் 


TNSED Attendance 

DOWNLOAD link 

👇👇

CLICK HERE TO DOWNLOAD NEW APP


4. ஏற்கனவே உள்ள பள்ளி/ஆசிரியர்களின் Username/password - ஐ பயன்படுத்தி உள்நுழைவு செய்ய வேண்டும் 


5. உள்நுழைவுக்குப்பின் (log in) working status Fully working என முன் இருப்பு தகவல் இருக்கும் 


6. பள்ளி உள்ளூர் விடுமுறை/அரைநாள் நாள் வேலைநாள் என்று இருப்பின் அதற்க்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ள வேண்டும் 


7. ஆசிரியர்கள்/ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு இரு வேளைகள் வருகை பதிவு செய்ய வேண்டும் 


8. புதிய செயலியில் CWSN மாணவர்களுக்கும் வருகை பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது 


9. புதிய செயலி auto sync ஆகிவிடும் என்பதால் தனியாக sync செய்ய வேண்டிய அவசியம் இல்லை 


10. இணைய சேவை இல்லாத நேரங்களில் வருகைப் பதிவேடு கைபேசியில் பதிவாகும். 


11. இணைய சேவை தொடர்பு ஏற்படும்போது அனைத்து தரவுகளும் தானாகவே UPDATE ஆகிவிடும் 


12. இணைய சேவை இல்லாத நேரங்களில் வருகைப்பதிவு மேற்கொண்ட பிறகு கீழ்க்காண் நடைமுறைகளை தவறாது பின்பற்றிடல் வேண்டும் 

i) Do not log o~t from the app

ii) Do not click on the sync

iii) Do not clear the app data or app caches


13. User manual DOWNLOAD

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



14. User video 

👇👇

CLICK HERE TO WATCH VIDEO



மேலும் விவரம் 

அறிய 

தொடக்கக் கல்வி 

இயக்குனரின் 

செயல்முறைகள் 

பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

தமிழக அரசு விடுமுறை அறிவிப்பு

2023 ஜனவரி 2,3,4 தேதிகளில் "எண்ணும் எழுத்தும்"  நடைபெறுவதால். 1,2,3 வகுப்பு ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். 


02.01.2023 முதல் 4,5 வகுப்பு ஆசிரியர்கள் பள்ளி செல்லவேண்டும்.


1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளி திறக்கும் நாள் 05.01.2023


மேலும் விவரம் அறிய 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


Thursday, 22 December 2022

பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் பள்ளி மாதாந்திர மேம்பாட்டு திட்டம் தயாரித்து பதிவேற்றம் செய்வது எப்படி?


23.12.2022 அன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் தங்கள் பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற வசதிகளை TNSED parents app ல் login செய்து பள்ளி மாதாந்திர மேம்பாட்டு திட்ட பதிவேற்றம் குறித்த தகவல்:


1. அதற்கு முன் திட்டமிடல் மிக அவசியம், தங்கள் பள்ளிக்குத் தேவையான  கட்டமைப்பு வசதிகளை குறித்து வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.


 2. சக  ஆசிரியர்களுடன் கலந்துரையாடி  தகவல் பெறுதல் வேண்டும்.


3. நாளை நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினருடன் விவாதித்து தங்கள் பள்ளிகளின் தேவைகளை குறிப்பு  எடுத்துக்கொள்ள வேண்டும்.


4.TNSED parents app ஐ login செய்து பள்ளி மாதாந்திர மேம்பாட்டு திட்ட பகுதிக்குச் சென்று , தங்கள் பள்ளிக்குத் தேவையான நான்கு உட்கூறுகளில் அல்லது நான்கு உட்கூறுகளையும் தேர்வு செய்ய வேண்டும்.


5. உட்கூறுகளில் கேட்கப்பட்டிருக்கக்கூடிய விபரங்களுக்கு அத்தியாவசிய தேவைகளை அதில் பதிவேற்றம்  செய்திட வேண்டும்.


6. அனைத்து அரசு   பள்ளிகளும் நாளை நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளி

மேம்பாட்டு திட்டத்தை(School Development  Plan )பதிவேற்றம் செய்ய வேண்டும்.


7. நீங்கள் பதிவேற்றம் செய்யும் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை பொறுத்து தான் வரும் கல்வியாண்டில் (2022-23) தங்கள் பள்ளிக்கு  தங்கள் பள்ளிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும்.


8. பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வித்துறைக்கு உட்கட்டமைப்பு வசதிகளுக்கு  ஒதுக்கப்பட்ட ரூபாய் 7000 கோடி, பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் பதிவிட்ட  பள்ளிகளுக்கு  பதிவின் அடிப்படையில் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


9. பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் அரசின் நிதி உதவி கோரப்படாத( சைக்கிள் செட், விளையாட்டு மைதானம் பராமரித்தல், உணவு கூடம் அமைத்தல், சோலார் இயந்திரம் அமைத்தல், பிற வகையான  உட்கட்டமைப்பு வசதிகள் ) பட்சத்தில் தனியார் பங்களிப்புகள் மூலம் ( CSR,நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் ) தாங்கள் நிதி உதவி  கோரலாம். அதற்கான பகுதியும் பள்ளியும் மேம்பாட்டு திட்டத்தில் நான்கு உட்கூறுகளில் கொடுக்கப்பட்டுள்ளது.


9. அனைத்து வகை அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் நாளை  நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்ட நிகழ்வுகளை கால அட்டவணையை பின்பற்றி சிறப்பாக நடத்திடவும், வருகை பதிவு மற்றும் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை TNSED parent app ல் பதிவேற்றம் செய்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




மேலும் விவரங்களுக்கு 

கீழேயுள்ள லிங்க் மூலம் 

வீடியோ பார்க்கவும் 

👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்


பள்ளிக்கல்வித்துறை மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, திருவள்ளூர் போட்டிகள் நடைபெறும் இடம் மற்றும் விவரம்

போட்டிகள் நடைபெறும் மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளுக்கான கலந்துகொள்ளும் போட்டிகள், மாவட்டங்கள், நாள், மற்றும் இடம் விவரங்கள் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர்கள் தங்கள் மாணவர்கள் கலந்துகொள்ளும் போட்டிகளுக்கு ஏற்றவாறு பதிவிறக்கம் செய்து பார்த்துக்கொள்ளவும் 



மதுரை 

கலைத்திருவிழா 

விவரம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


செங்கல்பட்டு 

கலைத்திருவிழா 

விவரம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



திருவள்ளூர்  

கலைத்திருவிழா 

விவரம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



காஞ்சிபுரம்  

கலைத்திருவிழா 

விவரம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Tuesday, 20 December 2022

நம்ம ஸ்கூல் திட்டம் தொடக்கம் - செய்தி வெளியீடு


👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடத்த உத்தரவு மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்





 👉 இம்மாதம் பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம் 23.12.2022 அன்று நடத்தப்பட வேண்டும் 


👉 பிற்பகல் 4.30 மணிக்கு கூட்டம் நடத்தப்பட வேண்டும் 


👉 வருகைப்பதிவு தலைவர் மட்டுமே பெற்றோர் செயலியில் (TNSED PARENT APP) செய்ய வேண்டும் 


👉 வருகைப்பதிவினை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும் 


👉 பள்ளிமேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பெற்றோர் செயலியில் (TNSED PARENT APP) வாயிலாக பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்படுதலை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும் 


👉 பள்ளி செல்லா /இடைநிற்றல் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை கண்டறியும் கணக்கெடுக்கும் பணி 19.12.2022 முதல் 11.01.2023 வரை நடைபெற்று வருவதை தெரியப்படுத்த வேண்டும் 


👉 பள்ளிமேலாண்மை குழு உறுப்பினர்களும் இக்கணக்கெடுப்பு பணியில் கலந்துகொண்டு 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா மாணவர்களை கண்டறிய உதவிட கேட்டுக்கொள்ள வேண்டும் 


👉 இல்லம் தேடி ஆசிரியர்களுடன் குறைதீர் கற்பித்தல் குறித்தும் மாணவர்களின் கற்றல்நிலை குறித்தும் தன்னார்வலரும் ஆசிரியரும் கலந்துரையாட வேண்டும் 


👉 அதிக கவனம் தேவைப்படும் மாணவர்களின் விவரங்களை தன்னார்வலர்கள் ஆசிரியர்களிடம் கேட்டறிந்த குறைத்துக்கொள்ள வேண்டும் 


👉 தன்னார்வலர்கள் இல்லம் தேடி கல்வி மையத்திற்கு தொடர்ந்து வருகை புரியாத மாணவர்களின் பெயர்களை ஆசிரியரிடம் பகிர்ந்து தொடர்ந்து அம்மாணவர் மையத்திற்கு வர ஆசிரியர் வழி ஊக்கப்படுத்த வேண்டும் 


👉 வங்கி கணக்கு தேவைப்படும் மாணவர்கள் விவரங்களை கூட்டத்தில் கலந்தாலோசித்து விரைவாக வங்கி கணக்கு தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் 


👉 மேற்குறிப்பிட்ட கூட்டப்பொருள்கள் தவிர்த்து தங்கள் பள்ளி சார்ந்து ஏதேனும் தேவைகள் இருப்பின் அவை சார்ந்த கூட்டப்பொருளை சேர்த்து பள்ளிமேலாண்மைக் கூட்டத்தில் விவாதித்து தீர்மானத்தை செயலி மூலம் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் 


👉 பள்ளி மேலாண்மைக்குழு பார்வையாளர்கள் கூட்டம் நடைபெறும் அன்று பிற்பகல் 2.00 மணிக்கு பள்ளிக்கு சென்றுவிட வேண்டும் 


👉 பள்ளி மேலாண்மை பற்றிய ஊக்கமூட்டும் காணொளிகள் திரையிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் 


👉 பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்து முடியும் வரை பார்வையாளர்கள் பள்ளியில் இருத்தல் வேண்டும் 


👉பார்வையாளருக்கென தரப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து குட்ட நாளன்றே இரவு 8.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் 


காணொளிகள் 

பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்த சிறந்த செயல்பாடுகளுக்கான காணொளிகள் 


ATTENDANCE

👇👇

CLICK HERE TO WATCH VIDEO



Planning Part 1

👇👇

CLICK HERE TO WATCH VIDEO


Planning Part 2

👇👇

CLICK HERE TO WATCH VIDEO



Planning Part 3

👇👇

CLICK HERE TO WATCH VIDEO


Playlist link

பள்ளி மேலாண்மைக்குழு 

வழிகாட்டு வீடியோக்கள் 

👇👇

CLICK HERE TO WATCH VIDEO


பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்காண் வீடியோக்களை கூட்டத்தில் காண்பிப்பதை உறுதி செய்ய வேண்டும் 


கூட்ட நிகழ்வுகள் 

4.30-4.35

ஊக்கமூட்டும் காணொளிகள் 


4.35-4.45

பள்ளி வளாகத்தை பார்வையிடுதல் 


4.45-4.50

வருகை பதிவு 


4.50-4.55

வரவேற்பு 


4.55-5.05

இல்லம் தெடிக் கல்வி 

தன்னார்வலர்கள் 

பங்கேற்பு 


5.05-5.25

கூட்டப்பொருள் தயாரித்தல் 

கூட்டத்தின் நோக்கத்தை 

தலைமை ஆசிரியர் கூறுதல் 



5.25-5.55

கூட்டப்பொருள் மீதான விவாதம் 

தீர்மானங்களை செயலி மற்றும் 

பதிவேட்டில் பதிவு செய்தல் 

கையொப்பம் பெறுதல் 


5.55-600

கூட்டம் நிறைவு செய்தல் 



மேலும் விவரங்களுக்கு 

PDF பதிவிறக்கம் செய்ய 

கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF























TNSED SCHOOLS APP UPDATE NEW VERSION 0.0.51

 

👇

CLICK HERE TO UPDATE


Join our WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN