மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த 6,7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்கள் மேற்காண் அட்டவனையில் உள்ளவாறு தங்களுக்கான போட்டிகள் நடைபெறுகின்ற இடத்திற்கு செல்லுகின்ற பேருந்தில் (BUS NO ) ஏறி போட்டிகள் நடைபெறுகின்றன நாளுக்கு முந்தைய நாள் இரவே அந்த இடத்திற்குச் சென்று தங்கள் வருகையை பதிவு செய்யவேண்டும்.
இதன் பொருட்டு27.12.2022 அன்று நடைபெறவுள்ள போட்டிகளுக்கு 26.12.2022 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஒரு பேருந்தும் 28.12.2022 அன்று நடைபெறவுள்ள போட்டிகளுக்கு 27.12.2022 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஒரு பேருந்தும் பாளையங்கோட்டை காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இருந்து புறப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
SS,திருநெல்வேலி
இது போன்று ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு பேரூந்து ஏற்பாடு செய்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அலைச்சலை குறைத்த மாவட்ட கல்வி நிர்வாகத்தை அனைத்து ஆசிரியர்களும் பாராட்டி வருகின்றனர்.
ஆனால் பல மாவட்டங்களில் இன்னும் மாவட்ட அளவில் போட்டி முடிவுகள் வெளியிடப்படாமல் மௌனம் காத்து வருகின்றன
போட்டியில் கலந்து கொண்ட பள்ளிகள் தாங்கள் மாணவர்கள் வெற்றி பெற்றனரா? இல்லையா என முடிவு தெரியாமல் தவித்து வருகின்றன.
எந்த போட்டிகள் என்றாலும் அதன் முடிவுகள் பகிரங்கமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி காலம் தாழ்த்தாமல் அறிவிக்க வேண்டும்
முடிவுகள் ரகசியமாக வைக்கும் போது அந்த முடிவுகள் நம்பகத் தன்மையை இழந்து விடுகின்றன
திருநெல்வேலி மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் போட்டியிலும் வெற்றி பெற மாவட்ட ஆசிரியர் வாழ்த்துகிறார்கள்
பேருந்து ஏற்பாடு செய்து ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைத்த மாவட்ட கல்வி நிர்வாகத்தை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாராட்டினார்கள்
திருநெல்வேலி மாவட்டம் சார்பில் மாநில போட்டிகளில் கலந்துகொள்ளும் ஆசிரியர் மாணவர் பட்டியல்
No comments:
Post a Comment