தமிழ்நாட்டில் அரசு/அரசு நிதியுதவி பெரும் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவுகள் TN SE D Schools செயலி மூலம் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
எளிமையான முறையில் வருகையினை பதிவேற்றம் செய்வதற்காக ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் வருகைப்பதிவுக்கென மட்டும் தனியாக TNSE D Attendance என்ற செயலி உருவாக்கப்பட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 2 மாதங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது
இந்நிலையில் வரும் 01.01.2023 முதல் இதனை பிற மாவட்டங்களுக்கும் நடைமுறைப்படுத்திட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்
இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள்
1. ஏற்கனவே உள்ள TNSED Schools செயலியில் இருந்து வெளியேற வேண்டும்
2. டிசம்பர் 31.12.2022 முதல் இந்த செயலி செயல்படாது
3. Google play store - ல் கீழ்கண்ட இணைப்பினை பயன்படுத்தி புதிதாக வருகைப்பதிவுக்கென உருவாக்கப்பட்டுள்ள TNSED Attendance செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்
TNSED Attendance
DOWNLOAD link
👇👇
CLICK HERE TO DOWNLOAD NEW APP
4. ஏற்கனவே உள்ள பள்ளி/ஆசிரியர்களின் Username/password - ஐ பயன்படுத்தி உள்நுழைவு செய்ய வேண்டும்
5. உள்நுழைவுக்குப்பின் (log in) working status Fully working என முன் இருப்பு தகவல் இருக்கும்
6. பள்ளி உள்ளூர் விடுமுறை/அரைநாள் நாள் வேலைநாள் என்று இருப்பின் அதற்க்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ள வேண்டும்
7. ஆசிரியர்கள்/ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு இரு வேளைகள் வருகை பதிவு செய்ய வேண்டும்
8. புதிய செயலியில் CWSN மாணவர்களுக்கும் வருகை பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது
9. புதிய செயலி auto sync ஆகிவிடும் என்பதால் தனியாக sync செய்ய வேண்டிய அவசியம் இல்லை
10. இணைய சேவை இல்லாத நேரங்களில் வருகைப் பதிவேடு கைபேசியில் பதிவாகும்.
11. இணைய சேவை தொடர்பு ஏற்படும்போது அனைத்து தரவுகளும் தானாகவே UPDATE ஆகிவிடும்
12. இணைய சேவை இல்லாத நேரங்களில் வருகைப்பதிவு மேற்கொண்ட பிறகு கீழ்க்காண் நடைமுறைகளை தவறாது பின்பற்றிடல் வேண்டும்
i) Do not log o~t from the app
ii) Do not click on the sync
iii) Do not clear the app data or app caches
13. User manual DOWNLOAD
👇👇
14. User video
👇👇
மேலும் விவரம்
அறிய
தொடக்கக் கல்வி
இயக்குனரின்
செயல்முறைகள்
பதிவிறக்கம் செய்யவும்
👇👇
No comments:
Post a Comment