அரசு பள்ளிகளை மேம்படுத்த "நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்" எனும் புதிய திட்டத்தை முதல்வர் நாளை (19.12.2022) தொடங்கிவைக்கிறார்
மாண்புமிகு தொழிற்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் முன்னிலை வகிக்கிறார்
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்கள்
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் திருமதி.காகர்லா உஷா மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் திரு.நந்தகுமார் ஆகியோர் நன்றியுரை ஆற்றுகிறார்கள்
இந்த திட்டத்தின் தலைவராக திரு.வேணு சீனிவாசன் (டிவிஎஸ் மோட்டார்ஸ்) அவர்கள் செயல்படவிருக்கிறார்
புதிய திட்டத்தின் நல்லெண்ணத் தூதுவராக திரு.விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் செயல்படவிருக்கிறார்
இந்த திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் பயின்று தற்போது தொழில் அதிபர்களாக இருப்பவர்கள் (முன்னாள் மாணவர்கள்) தங்களது சமூக பொறுப்புணர்வு நிதி (சி.எஸ்.ஆர்) மூலம் அரசு பள்ளிகளை தத்தெடுத்து தாங்கள் பயின்ற பள்ளியின் உட்கட்டமைப்பை மேம்படுத்திட உதவிட வேண்டும்
பள்ளியில் சுற்று சுவர் கட்டுதல், பள்ளியில் வர்ணம் பூசுதல், பள்ளியில் இணைய வசதி ஏற்படுத்தி தருதல், ஆய்வகம் உருவாக்குதல், நூலகம் உருவாக்குதல், சுகாதாரமான கழிப்பறை கட்டி தருதல் போன்ற அடிப்படை பணிகளை தாம் பயின்ற அரசு பள்ளிக்காக நிறைவேற்றி தரமுடியும்.
இந்த திட்டத்திற்க்காக தனியாக புதிய இணையதளத்தை நாளை முதல்வர் தொடங்கிவைக்கிறார்
இந்த இணையதளம் மூலம் இத்திட்டத்தில் இணைந்து ஒருவர் எந்த பள்ளிக்கும் நிதி உதவி வழங்கிட முடியும்
மேலும் தான் வழங்கிய நிதி மூலம் பள்ளி மேம்பாட்டுப் பணிகள் நடப்பதையும் இணையதளம் மூலம் கண்காணிக்க முடியும்
அரசு பள்ளிகளில் பயின்று தற்போது நல்ல நிலையில் உள்ள அனைவரும் இத்திட்டத்தில் இணைந்து தாங்கள் பயின்ற பள்ளி கட்டமைப்பிலும், தரத்திலும் சிறந்து விளங்கிட உதவிட வேண்டும்.
Join our WhatsApp group
👇👇
No comments:
Post a Comment