Search This Blog

Saturday 24 December 2022

பள்ளிக் கலைத் திருவிழாவை சிறப்பாக நடத்திய பொறுப்பாளர்களுக்கு பாராட்டு அசத்திய விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலர்



தமிழக அரசு, அரசு  பள்ளி மாணவர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதத்தில் அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளும் வண்ணம்  50 க்கும் மேற்பட்ட போட்டிகளை அறிவித்தது.


கொரோனா  இடைவெளியில் இருந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் மகிழ்ச்சியுடன் இணைக்கும் உளவியல் அடிப்படை பாலமாக இக்கலைத் திருவிழா நடந்தேறியது


பல மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகியோரின் சீரிய முயற்சியால் அந்தந்த படிநிலைப்படி குழுக்கள் அமைக்கப்பட்டு கல்விதௌதுறையின் கலைத்திருவிழா  சிறப்பாக நடந்தேறியது.


குழுவில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களும் சிறப்பாக செயல்பட்டு அரசின் உண்மையான நோக்கம் நிறைவேற முழுமையான ஒத்துழைப்பு வழங்கி பங்கு பெற்று வெற்றி பெற்றனர்.


ஒரு சில மாவட்டங்களில் தேவையற்ற நபர்களை குழுவில் கொண்டு சிக்கல்களையும் சந்தித்தனர் கல்வி அலுவலர்கள்.


விழுப்புரம் மாவட்டத்தில் திறமையான நபர்களை கொண்டு குழு அமைத்து எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல் போட்டிகள் நடுநிலையாக நடத்தப்பட்டு நியாயமான தீர்ப்புகள் வழங்கப்பட்டு வெற்றி பெற்ற பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.


குறிப்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் நல்லாசிரியர் திரு.செல்லையா அவர்கள் திறம்பட செயல்பட்டு விழுப்புரம் மாவட்டக் கலைத்திருவிழா சிறப்பாக நடைபெற தம் குழுவினருடன் பணியாற்றினார்.


இன்று நடந்த விழாவில் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிறப்பாக செயல்பட்ட கல்வித்திருவிழா ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்









No comments:

Post a Comment