Search This Blog

Wednesday, 15 January 2025

பசுமைப் பள்ளித் திட்டம் - 100 அரசுப் பள்ளிகளுக்கு தலா ₹20 இலட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு



காலநிலை மாற்றம் என்பது தற்போது ஒரு தவிர்க்க இயலாத பிரச்சனை என்பதால் இளைய தலைமுறையினர் இது குறித்து அறிந்து கொள்வதும் அதன் விளைவுகளை ஏற்பதற்கு ,  அதனால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கும் தயாராவது அவசியமான ஒன்றாகும் 





இதனை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமைத் தமிழ்நாடு திட்டத்தின் குறிக்கோளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான சூழல் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கு 2022-2023 ஆம் ஆண்டில் 25 பள்ளிகள், 2023-2024 ஆம் ஆண்டில் 46 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அப்பள்ளிகளில் இத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன 




இதன் தொடர்ச்சியாக 2024-2025 ஆம் ஆண்டில் மேலும் 100 பள்ளிகளில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் நிதியிலிருந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது 




தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள் தலா 20 லட்சம் பெறுகிறது 




தென்காசி மாவட்டத்தில் சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த திட்டத்திற்க்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன 




மேலும் விவரங்களுக்கு அரசு ஆணை கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்யவும் 


👇

இதை அழுத்தவும்










 














No comments:

Post a Comment