2024-2025 ஆம் கல்வியாண்டில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி அனைத்து பள்ளிகளிலும் பள்ளிகளின் கல்வி செயல்பாடுகள், மாணவர்களின் சிறப்பு அம்சங்கள், ஆசிரியரின் சிறப்பு செயல்பாடுகள், ஆகியவற்றை பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து பள்ளி ஆண்டுவிழா நடத்திட வேண்டும் என 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே ஜனவரி மாதம், பிப்ரவரி மாதங்களில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளிலும், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை தொடக்க நடுநிலைப் பள்ளிகளிலும் பள்ளிகளின் வசதிக்கேற்ற பெற்றோர்கள், பொது மக்களின் முன்னிலையில் மாண்புமிகு அமைச்சர் மற்றும் மதிப்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் கொண்டு சிறப்பாக பள்ளி ஆண்டு விழா நடத்திட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment