Search This Blog

Friday, 3 January 2025

NMMS தென்காசி வட்டார அளவில் நடைபெற்ற மாதிரி தேர்வில் தென்காசி நகராட்சி சேர்மன் மற்றும் தென்காசி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்


    

NMMS தென்காசி வட்டார அளவில் நடைபெற்ற மாதிரி தேர்வில் தென்காசி நகராட்சி சேர்மன் மற்றும் தென்காசி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்






தென்காசி வட்டார அளவிலான 4 வது NMMS மாதிரித் தேர்வு இன்று CMS மெக்விற்றல் பள்ளியில் நடைபெற்றது







இன்று நடந்த NMMS மாதிரித் தேர்வை தென்காசி வட்டாரத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள்  194 பேர் எழுதினார்கள்






முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு 

தென்காசி நகராட்சி சேர்மன் உயர்திரு.சாதிர் அவர்கள் மற்றும் 


தென்காசி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு.ஜெயபிரகாஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி பரிசு வழங்கினார்கள்





இந்த மாதிரித் தேர்வு தென்காசி வட்டாரக்கல்வி அலுவலர்கள் திரு.சண்முகப்பாண்டியன் மற்றும் திரு.இளமுருகன் தலைமையில் தொடர்ந்து 4 வாரமாக நடைபெற்று வருகிறது






போட்டித் தேர்விற்கான வினாத் தயாரிப்பு மற்றும் தேர்வு நடத்தும் பணியினை தொடர்ந்து தென்காசி நகராட்சி 13 வது வார்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.திருமலைக்குமார், தென்காசி நகராட்சி 13 வது வார்டு நடுநிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் திரு.வின்சென்ட், தென்காசி பொன்னம்பலம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கணக்கு ஆசிரியர் திரு.செல்வம் ஆகியோர் செய்து வருகின்றனர்.  




இன்று நடந்த மாதிரித் தேர்வு பரிசளிப்பு விழாவில் CMS மெக்விற்றல் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.ராஜதுரை அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்


3 வது மாதிரித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள்



முகமது ரியாஸ்

காட்டுபாவா நடுநிலைப்பள்ளி


நூர்ஜஹான்

காட்டுபாவா நடுநிலைப்பள்ளி




சைலீஸ்வரன்

7வது வார்டு நடுநிலைப்பள்ளி



உமைரா 

காட்டு பாவா நடுநிலைப்பள்ளி



அனிஷ்கா

ஊ.ஒ.ந.நிலைப்பள்ளி

கரிசல்குடியிருப்பு



இரண்டாவது மாதிரித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள்



ஜாசிர்

காட்டுபாவா பள்ளி



சசிபிரியா

ஊ.ஒ நடுநிலைப்பள்ளி

திருச்சிற்றம்பலம்



ஸ்ரீலட்சுமி

ஊ.ஒ.ந.நிலைப்பள்ளி

கரிசல்குடியிருப்பு




















No comments:

Post a Comment