Search This Blog

Friday, 3 January 2025

தென்காசி நகராட்சி மூலம் புதிய வகுப்பறையும், சென்னை வேளச்சேரி லயன்ஸ் கிளப் மூலம் புதிய இருக்கைகளும் தென்காசி நகராட்சி 13 வார்டு நடுநிலைப்பள்ளிக்கு வழங்கும் விழா


















































































































தென்காசி நகராட்சி 13 வது வார்டு நடுநிலைப்பள்ளியில் இன்று புதிய வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது.  






விழாவிற்கு தென்காசி 

நகர் மன்ற தலைவர் 

ஆர் சாதிர் அவர்களும்,



ஆணையாளர் ரவிச்சந்திரன் அவர்களும் தலைமை தாங்கினார்கள். 






தென்காசி வட்டார கல்வி அலுவலர்கள் திரு. சண்முகசுந்தர பாண்டியன் மற்றும் திரு.இளமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.







பள்ளி தலைமை ஆசிரியர் திருமலை குமார் வரவேற்புரை ஆற்றினார். 






சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) திரு. ஜெயப்பிரகாஷ் ராஜன் கலந்து கொண்டார் .







தென்காசி நகராட்சி சார்பில் வழங்கப்பட்ட புதிய வகுப்பறையை தென்காசி நகர்மன்ற தலைவர் திரு. சாதிர் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார் .






நகராட்சித் தலைவர் பேசும்போது தென்காசி நகராட்சி சார்பில் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் உட்பட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. அதனை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி அடைய வேண்டும் எனக் கூறினார். 






நகராட்சி ஆணையர் பேசும் பொழுது தென்காசி நகராட்சி மாணவர்களின் கல்விக்காக அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர தயாராக உள்ளது என கூறினார்.







மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) ஜெயப்ரகாஷ் ராஜன் சென்னை வேளச்சேரி மூலம் வழங்கப்பட்ட ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிலான இருக்கைகளை பள்ளி தலைமை ஆசிரியரிடம், வழங்கி சிறப்புரை ஆற்றினார் .






தொடக்கக் கல்வி அலுவலர் பேசும்பொழுது நான் இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதில் பெருமிதம் அடைகிறேன் என்று கூறினார்.






மேலும் மாணவர்கள் நன்றாக படித்து பல்வேறு துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும் என அறிவுரை கூறினார். 





தென்காசி நகராட்சி ஹசீனா (ME), ஜெயப்பிரியா (AE),



நாகூர் மீரான் (MC), 

சுல்தான் பீவி (MC),



சரஸ்வதி SSA மேற்பார்வையாளர், 



கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் இள.பாபு வேலன்



மாரிமுத்து, சுகாதார ஆய்வாளர் 



ஆகிய அனைவரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.





மேலும் விழாவில் எஸ் எம் சி உறுப்பினர்கள் பெற்றோர்கள், பொதுமக்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 



பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திரு. வின்சென்ட் நன்றியுரை ஆற்றினார் .





மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜபருல்லாகான், மணி மந்திரி, கௌசல்யா  எப்சிபா, விமலா, யாஸ்மின், தமிழ்ச்செல்வி, புன்னகை சுகி, மாலையம்மாள் மற்றும் ராதா ஆகியோர் செய்திருந்தனர்

No comments:

Post a Comment