ஈகை பெருநாளை முன்னிட்டு பள்ளித் தேர்வுகளில் தேதியை மாற்றி அமைக்கக் கோரி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன
அதனடிப்படையில் தேர்வு கால அட்டவணையில் பின்வருமாறு மாற்றம் செய்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் இணைந்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர்
தமிழநாட்டில் உள்ள அனைத்து அரசு/அரசு உதவிபெறும்/தனியார் பள்ளிகளில் 4 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 10.04.2024 அன்று நடைபெறுவதாக இருந்த அறிவியல் தேர்வு 22.04.2024 அன்று நடைபெறும்
12.04.2024 அன்று நடைபெறுவதாக இருந்த சமூக அறிவியல் தேர்வு 23.04.2024 அன்றும் நடைபெறும். என தேர்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
அதன்படி தேர்வுகளை நடத்திட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் இணைந்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்
மூன்றாம் பருவத் தேர்வுகள்:
புதிய அட்டவணை: (1முதல் 5 வரை)
02.04.2024 தமிழ்
03.04.2024 English
05.04.2024 கணிதம்
22.04.2024 அறிவியல்
23.04.2024 சமூகவியல்
மூன்றாம் பருவத் தேர்வுகள்:
புதிய அட்டவணை: (6முதல் 9 வரை)
02.04.2024 தமிழ்
03.04.2024 English
04.04.2024 உடற்கல்வி
05.04.2024 கணிதம்
22.04.2024 அறிவியல்
23.04.2024 சமூகவியல்
குறிப்பு:
6,7 வகுப்புகளுக்கு தேர்வுகள் முற்பகலில் நடைபெறும்.
8, 9 வகுப்புகளுக்குத் தேர்வுகள் பிற்பகலில் நடைபெறும்.
உடற்கல்வி தேர்வுகள் அனைத்து (6,7,8,9) வகுப்புகளுக்கும் பிற்பகலில் நடைபெறும்.
12 nthehi nadaipera iruntha thervai 24 nthethi vaththiruckalam
ReplyDeleteஆனந்திஆனந்தி
ReplyDelete8438649352
ReplyDeleteஆனந்தி
ReplyDeleteUthaya
ReplyDelete