👉 உதவித்தொகை நேரடியாக மாணவர்களின் கணக்கில் சென்று சேரும் வகையில் வரும் கல்வியாண்டில் 6 ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளி மூலமாகவே வங்கிக்கணக்குகள் தொடங்கப்படும்
👉 அப்போதே ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவினை வாங்கிக்கணக்குடன் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும்
👉 வரும் கல்வியாண்டு 2024-2025 முதல் ஆறாம் வகுப்பில் சேரும்போதே தேவையான ஆவணங்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்கும் போது அதன் விவரங்கள் EMIS தளத்தில் உள்ளீடு செய்யப்பட்டு வருவாய்துறையினருக்கு அனுப்பி வைக்கப்படும்
👉 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு EMIS தளத்தின் வாயிலாகவே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உரிய மாணவர்கள் வசம் சான்றிதழ்கள் ஒப்படைக்கப்படும்
👉 சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரியாக இருப்பின் அதற்குரிய சான்றிதழ் என நால்வகை சான்றிதழ் பள்ளிகளின் மூலமாக வழங்கப்பட உள்ளது என அரசு சார்பில் இயக்குனர், செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலமாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
No comments:
Post a Comment