Search This Blog

Monday 11 March 2024

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது மத்திய அரசு

 


குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது.




நாடு முழுவதும் சி.ஏ.ஏ சட்டம் அமலுக்கு வந்தது தொடர்பான அறிவிப்பாணையை அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு.





2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.





4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.





குடியுரிமை திருத்தச் சட்டம்




அண்டை நாடுகளில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், சீக்கியர், கிறிஸ்தவர்களுக்கு சிஏஏ குடியுரிமை அளிக்கும்.





2014 டிசம்பர் 31க்குள் குடியேறிய இந்துகள், சீக்கியர், பௌத்தர், சமணர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.





பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் இந்தியாவில் குடியேறலாம்.





இந்தியாவில் 6 ஆண்டுகள் வசித்தாலே ஆவணங்கள் இல்லையென்றாலும் குடியுரிமையை பெறலாம்.





பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர், இலங்கை அகதிகளுக்கு சிஏஏ-ன் கீழ் குடியுரிமை பெற அனுமதியில்லை.





சிஏஏ சட்டம் - மத்திய அரசு விளக்கம்



"இந்தியாவில் அமலாகும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தால், இந்தியர்கள் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது. அண்டை நாட்டை சேர்ந்த சிறுபான்மை சமூக மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியா அமல்படுத்துகிறது"

No comments:

Post a Comment