கலந்துரையாடலில் இடம் பெற்ற முக்கிய கருத்துகள்
👇
நமது பள்ளி ஆசிரியர்களின் முக்கிய கவனத்திற்கும் உடனடிச் செயல்பாட்டிற்கும்.
👇
ஆசிரியர்களே சமூகத்தை நிமிரச் செய்யும் முதுகெலும்புகள்.
👉ஆசிரியர்களே சமூக மரம் சாய்ந்து விடாமல் காக்கும் ஆணி வேர்கள் .
👉 ஆசிரியர்களே, அனைத்துத் துறை நிபுணர்களையும் பிரசவித்துக் கொடுக்கும் தாய்மை வடிவங்கள் .
இத்தகு சிறப்பு மிக்க ஆசிரியர்கள் ,
பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து அதன் காரணமாக உபரி ஆசிரியர் பணியிடங்கள் Abolish ஆவதை தடுக்கவும் ,
சேர்க்கை அதிகரித்து ஆசிரியர் பணியிடம் அதிகரித்து நிறைய ஆசிரியர் படிப்பு முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைத்து மாணவர் சேர்க்கையும் மாணவர் வருகையும் "தேர்ச்சியும்" அதிகரித்து சமூக மறுமலர்ச்சி ஏற்பட தங்களிடம் நாங்கள் அன்புடன் வேண்டுவது
👇
👉 பள்ளி தொடங்கும் முன் பள்ளிக்கு வருகை புரிதல் .
👉 வகுப்பிற்கு உரிய நேரத்தில் சென்று விடுதல்.
👉 வகுப்பறைக்குச் செல்லும் போது TLM & Notes of Lesson உடன் எடுத்துச் செல்லுதல்.
👉 பாடங்களை மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து , புரிந்து படிக்க உதவுதல் .
👉 பாடப் புத்தகங்கள் தாண்டிய வாசிப்பை ஊக்குவித்தல்.
👉 தமிழ் & ஆங்கிலத்தில் சுயமாகப் பேசவும் , எழுதவும் கட்டுரைப் பயிற்சிகள் அளித்தல்
👉 மொழி ஆற்றல் வளர்த்து குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரித்தல்.
👉 குழந்தைகளுக்குத் தவறாமல் ஆய்வக அனுபவம் தருதல்.
👉 மன்றச் செயல்பாடுகள் மூலம் சிறந்த ஆளுமைகளை, குடிமக்களை வார்த்தெடுத்தல்.
👉 கணக்குச் சூத்திரங்களும் தமிழ்க் கவிதைகளும் மரத்தின் கிளைகளில் காய்த்துத் தொங்குதல்.
👉 மணற்கேணி செயலி வீடியோக்களைப் பயன்படுத்துதல்.
👉 உங்களின் சிறந்த கற்பித்தல் திறனை வீடியோ ஆக்கி மணற்கேணி செயலியில் பதிவேற்றம் செய்திட அனுப்பி வைத்தல்.
👉 செப்டம்பர் & டிசம்பர் போன்ற தேர்வு மாதங்களில் விடுப்பு எடுப்பதைத் தவிர்த்தல்.
👉 மாணவர் மனசு பெட்டியில் வரும் கடிதங்களுக்கும் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் தருதல்.
👉 "எங்கள் வகுப்பறையில் அனைவருக்கும் நன்றாகத் தமிழ் வாசிக்கத் தெரியும்" (6 & 7 வகுப்புகளில்)
👉 "எங்கள் வகுப்பறையில் அனைவருக்கும் நன்றாக ஆங்கிலம் வாசிக்கத் தெரியும்" (6 & 7 வகுப்புகளில்)
👉 "எங்கள் வகுப்பறையில் அனைவருக்கும் கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் கணக்கு தெரியும்" (6 & 7 வகுப்புகளில்)
👉 எங்கள் வகுப்பில் இந்த ஆண்டு நிச்சயம் ஒருவராவது NEET/JEE / NIFT / CLAT / NATA தேர்வுகளில் வெற்றி பெறுவோம் (12 ஆம் வகுப்பில்)
👉 எங்கள் வகுப்பில் இந்த ஆண்டு 7.5% ஒதுக்கீட்டில் தகுதியான அனைவரும் தொழில் கல்வி படிப்பில் நிச்சயம் சேருவோம்.(12ஆம் வகுப்பில்)
👉 எங்கள் வகுப்பில் உள்ள தகுதியான மாணவ , மாணவிகள் அனைவரும் அடுத்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்து புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 பெறுவோம்.(12 ஆம் வகுப்பில்)
👉 எங்கள் வகுப்பில் முதலமைச்சர் திறனறி தேர்வில் வென்று 6 ஆண்டுகள் மாதம் ரூ.1000 பெறுவோம். (11 ஆம் வகுப்பில்)
👉 எங்கள் வகுப்பில் தமிழ்த் திறனறி தேர்வில் வென்று 2 ஆண்டுகள் மாதம் ரூ.1500 ஊக்கத் தொகை பெறுவோம். (11 ஆம் வகுப்பில்)
👉 எங்கள் வகுப்பில் NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று 4 ஆண்டுகளுக்கு வருடம் ரூ.12000 ஊக்கத் தொகை நிச்சயம் பெறுவோம். (8 ஆம் வகுப்பில்)
👉 எங்கள் வகுப்பில் ஊரகத் திறனறி தேர்வில் (TRUST) தேர்ச்சி பெற்று 4 ஆண்டுகள் ரூ.1000 ஊக்கத் தொகை பெறுவோம். (9 ஆம் வகுப்பில்)
👉 எங்கள் வகுப்பில் NTSE தேர்வில் வெற்றி பெற்று Ph.D படிக்கும் வரை ஊக்கத் தொகை பெறுவோம். (பத்தாம் வகுப்பில்)
போன்ற ஊக்குவிக்கும் வாசகங்களால் வகுப்பறைகளுக்கு வாசம் சேர்த்தல்.
வெற்றியோ தோல்வியோ முயற்சியை மட்டும் கைவிடாது இருத்தல்.
👉 TLM அறை பராமரித்தல்.
👉 TLM காட்சிப்படுத்தல்.
👉 உள்ளூர் மக்களுடன் & பெற்றோர் மகிழும் வண்ணம் இணைந்து செயல்படுதல் அதிக வெற்றி தரும்.
வருகிற 2024 புதிய சாதனைகள் படைக்கும் ஆண்டாக அனைவருக்கும் அமைய இனிய நல் வாழ்த்துக்கள்.
நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment