அனைத்து அரசு நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6-9 வரை பயின்று வரும் மாணவர்களுக்கு திரைப்படம் காட்டப்பட்டு வருகிறது
ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வாரம் திரைப்படம் பள்ளிகளில் திரைப்படவேண்டும்
மாணவர்கள் தங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாச்சாரங்களின் தனித்தன்மையை அறிந்துகொள்ளுதல், தன்னம்பிக்கை, நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், பாலின சமத்துவம் உணர்தல் ஆகிய பண்பு நலன்களை அடையாளம் காணவும், மாணவர்களிடம் உள்ள உள்ளார்ந்த படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் நோக்கத்திற்காகவும் இத்திரைப்படங்கள் பள்ளிகளில் காட்டப்படுகிறது
டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி "சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்" அனுசரிக்கப்பட்டதால் இந்த மாதம் மாற்றுத்திறனாளிகளை மையப்படுத்திய திரைப்படமான "பண்ட்" (BUNT) எனும் கொரியன் மொழி படம் திரையிட கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது
வசனங்கள் தமிழில் துணையுரையுடன் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது
மாற்றுத்திறனாளிகளின் கண்ணியம், உரிமைகள், நலவாழ்வு, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய அர்த்தமுள்ள ஒரு கண்ணோட்டத்தை உருவாக்க குழந்தைகளுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும்
இந்த படம் தென்கொரியாவில் உருவான கொரியன் மொழி திரைப்படம்
திரைப்படத்தின் கதையை எழுதியவர்கள் பார்க் கியூ டே மற்றும் சோய் சுக் ஹ்வான்
இந்த படத்தை இயக்கியவர் பார்க் கியூ டே
டோங்-கு என்ற மாற்றுத்திறனாளி சிறுவனைப்பற்றிய படம் இது
டோங்-கு தொடர்ந்து பள்ளிக்கு செல்வதை விரும்புகிறான்
டோங்-கு மற்ற மாணவர்களுக்கு தண்ணீர் எடுத்து தந்து உதவுகிறான் ஆனால் மாணவர்கள் அந்த மாணவனை கிண்டல், கேலி செய்கிறார்கள்
தேர்வு நாட்களில் அவன் வீட்டில் இருப்பதையே ஆசிரியர் விரும்புகிறார். காரணம் அந்த மாணவனால் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும் என்பதால்.
டோங்-கு மாணவனை சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளிக்கு மாற்ற பள்ளி விரும்புகிறது. ஆனால் அவன் தந்தை "ஜின்-கியூ" அதே பள்ளியில் படிக்க விரும்புகிறார்
பள்ளியின் பேஸ் பால் அணிக்கு ஒரு மாணவன் தேவை என்பதால் டோங்-கு அணியில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்
அவனுக்கும் அதே பள்ளியில் தொடர்ந்து படிப்பதற்கு வாய்ப்பாக இது அமைந்து விடுகிறது
ஜின்-கியூ தன மகனின் கனவு மெய்ப்பட உழைக்கிறார்
சிறப்பு குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோர்களின் பங்களிப்பும், அரவணைப்பும் எத்தனை பெரிய மாற்றத்தை உருவாக்குகிறது என்பதை படம் அழகாகவும், ஆழமாகவும் உணர்த்துகிறது
முழு திரைப்படத்தை EMIS தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
தற்போது படத்தின் ஒரு சில காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது
"பண்ட்" (BUNT) திரைப்படம் முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇👇
No comments:
Post a Comment