Search This Blog

Wednesday 11 January 2023

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி - சட்டை மற்றும் சேலை 12.01.2023 & 13.01.2023 ஆகிய நாட்களில் அணிந்து வர மாவட்ட ஆட்சியர் உத்தரவு


தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை 
சிறப்பாக கொண்டாடும் பொருட்டு நமது கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையிலும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலும்  மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வருகின்ற 12.01.2023 மற்றும் 13.01.2023 இரு நாட்களும் நமது பாரம்பரிய உடைகளான ஆண்கள் கதர் வேட்டி சட்டையும், பெண்கள் சேலையும் கட்டாயம் அணிந்து வரவேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுற்றறிக்கை அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ளார் 

இந்த அறிக்கை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

தமிழர்களின் திருநாள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னெடுத்த இந்த நடவடிக்கை அனைத்து அரசு ஊழியர்களின் மத்தியிலும் பாராட்டைப்பெற்றுள்ளது 


கரூர் மாவட்ட 
ஆட்சித்தலைவரின் 
சுற்றறிக்கை 

👇👇


No comments:

Post a Comment